Salem

News November 2, 2024

நாளை எடப்பாடி வருகிறார் இபிஎஸ்

image

எடப்பாடியில் நாளை நடைபெற உள்ள ஊழியர் கூட்டத்தில் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி பங்கேற்கவுள்ளார். எடப்பாடி நகர நிர்வாகிகள் ஒன்றிய நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள், நகர மன்ற உறுப்பினர்கள், மகளிர் அணி நிர்வாகிகள் மற்றும் சார்பு பணி நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண்டும் என்று எடப்பாடி நகர செயலாளர் முருகன் அறிவித்துள்ளார்.

News November 2, 2024

கூட்டுறவு சங்கத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட மேலாளர் கைது

image

சேலம் மாவட்டம், ஓமலூர் அமைப்புசாரா தொழிலாளர்கள் கூட்டுறவுச் சங்கம் செயல்பட்டு வருகிறது. இச்சங்கத்தின் கிளை மேலாளர் கருப்பூரைச் சேர்ந்த பச்சியப்பன் (37) ரூபாய் 26.37 லட்சம் கையாடல் செய்ததாக வந்த புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பச்சியப்பனை கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்த கணக்காளர் சத்யா என்பவரை தேடி வருகின்றனர்.

News November 2, 2024

சேலத்தில் தடையை மீறி பட்டாசு வெடித்த 8 பேர் மீது வழக்கு

image

பட்டாசுகளை வெடிக்க மாவட்ட நிர்வாகம் கட்டுப்பாடு விதித்தது. அதாவது, காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், மாலை 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்று அரசு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதேசமயம், சேலம் மாவட்டத்தில் போலீசார் கண்காணித்து வந்தனர். அனுமதித்த நேரத்தை தவிர மற்ற நேரங்களில் பட்டாசு வெடித்ததாக 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

News November 2, 2024

சேலம் கோட்டத்தில் 15 லட்சம் பேர் பயணம்

image

தீபாவளி பண்டிகையையொட்டி சேலம் கோட்டத்தின் மூலம் 500 சிறப்பு பஸ்கள் வருகிற 4-ந் தேதி வரை இயக்கப்படுகிறது. இதன் மூலம் பயணிகள் கூட்ட நெரிசல் இன்றி வெளியூர் பயணம் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது. குறிப்பாக கடந்த 28-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை 3 நாட்களில் மட்டும் வழக்கமான நாட்களை விட கூடுதலாக சிறப்பு பஸ்கள் மூலம் சுமார் 15 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.

News November 2, 2024

சேலத்தில் 10 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

image

சேலம் மாநகரில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் நேற்று இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி காத்திருப்போர் பட்டியலில் இருந்த நந்தகுமார் மதுவிலக்கு தடுப்பு பிரிவுக்கும், கருப்பூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய கண்ணையன் அன்னதானப்பட்டிக்கும், இடமாற்றம் செய்யப்பட்டனர். இவர்கள் உள்பட 10 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு பிறப்பித்துள்ளார்.

News November 2, 2024

சேலத்தில் அடையாள அட்டை வழங்கும் முகாம்

image

மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் மருத்துவ முகாம் நமது சேலம் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் எதிர்வரும் 5/11/2024 செவ்வாய்க்கிழமை தொடங்க உள்ளது. மேலும் 19/11/2024 அன்று பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இந்த முகாம் மாவட்ட மாற்றுத்திறனாளிகளின் நல அலுவலர் தலைமையில் நடக்க உள்ளது.

News November 2, 2024

சேலம் ரயில் பயணிகளின் கவனத்திற்கு

image

மயிலாடுதுறை- சேலம் எக்ஸ்பிரஸ் ரயில்(16811) நவ.02, 03, 09, 10, 16, 17, 23, 24, 30 ஆகிய தேதிகளில் மயிலாடுதுறையில் இருந்து கரூர் வரை மட்டும் இயக்கப்படும். மறுமார்க்கத்தில், சேலம்- மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில் (16812) கரூரில் இருந்து மயிலாடுதுறை வரை மட்டும் இயக்கப்படும். ரயில் இருமார்க்கத்திலும் சேலம்- கரூர் இடையே இயக்கப்பட மாட்டாது என சேலம் ரயில்வே கோட்டம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

News November 1, 2024

சேலம்: சென்னை செல்ல சிறப்பு ரயில் அறிவிப்பு

image

தீபாவளி கொண்டாட சொந்த ஊர் வந்தவர்கள் மீண்டும் சென்னை திரும்ப வசதியாக முன்பதிவற்ற சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி போத்தனூரில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு முன்பதிவற்ற ரயில் நவ.03ஆம் தேதி காலை 7:45 மணிக்கு போத்தனூரில் புறப்பட்டு திருப்பூர், ஈரோடு, சங்ககிரி, சேலம் வழியாக மாலை 4:50 மணிக்கு சென்னையை சென்றடையும் என்று சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News November 1, 2024

சேலம் நாள் இன்று 

image

1866 ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி சேலம் நகராட்சியாக உருவாகிய நாள் இன்று.1917 இல், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நகராட்சித் தலைவராக ராஜாஜி பொறுப்பேற்றார். 1994ஆம் ஆண்டு ஜூன் மாதம் மாநகராட்சியாக சேலம் மாறியது.  சேலம் நகராட்சி உருவாகி இன்றுடன் 158 ஆண்டுகள் நிறைவடைகிறது. இன்று சேலம் நாள் மக்கள் அனைவராலும் கொண்டாடப்படுகிறது. 

News November 1, 2024

சேலம்: தீபாவளி அன்று இவ்வளவு விற்பனையா?

image

சேலம் மாவட்டம், எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 200-க்கும் மேற்பட்ட இறைச்சிக் கடைகள் இயங்கி வருகின்றன. மேலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று ஒரே நாளில் எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள இறைச்சி கடைகளில் 10.3 கோடி ரூபாய்க்கு இறைச்சி விற்பனையானது. தீபாவளி பண்டிகை என்பதால் இறைச்சி விலை அதிகரித்து உள்ளது என்று இறைச்சி வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.