Salem

News December 7, 2024

சேலம்: இரவு ரோந்து பணி அலுவலர்கள் விவரம்

image

சேலம் மாநகரில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் இருக்கவும், அசம்பாவிதங்களை தவிரவும், மாநகர காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, மாநகர காவல்துறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், அந்தந்த காவல் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு இரவு ரோந்து பணியில்  ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்றைய இரவு ரோந்து அலுவலர்களின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. 

News December 6, 2024

சேலம் மாவட்ட இரவு ரோந்து அலுவலர்கள் விவரம் 

image

சேலம் மாவட்டத்தில் இரவு நேரங்களில்குற்ற செயல்கள் நடக்காமல் இருக்கவும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும், சேலம் மாவட்ட காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சேலம் ஊரகம், சங்ககிரி, ஆத்தூர், ஓமலூர், மேட்டூர், வாழப்பாடி உட்பட்ட பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் விபரம் வெளியிடப்பட்டுள்ளது. அவசர தேவைக்கு மேலே கொடுக்கப்பட்டுள்ள எண்களை தொடர்பு கொள்ளலாம். 

News December 6, 2024

சேலம் TNPSC தேர்வர்களின் கவனத்திற்கு!

image

டிஎன்பிஎஸ்சி குரூப் 1, 2, 4, இதர போட்டித் தேர்வுகளுக்கான 4 மாத பயிற்சி வகுப்புகள் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் டிச.10- ல் தொடங்குகிறது. இதில் பல்கலை. மாணவர்கள் மட்டுமல்லாது, வெளியில் இருந்தும் போட்டித்தேர்விற்கு தயாராகும் மாணவர்களும் சேரலாம். இதற்காக நேரடியாக பயிற்சி மையத்தில் தங்கள் பெயரை பதிவு செய்யலாம். மேலும், விவரங்களுக்கு 9789319722 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

News December 6, 2024

சேலம் புத்தக கண்காட்சி: இறையன்பு ஐஏஎஸ் பங்கேற்பு

image

சேலம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி திடலில் புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று 8வது நாளாக நடைபெறும் விழாவில், தமிழ்நாடு முன்னாள் தலைமை செயலாளர் வே.இறையன்பு ஐஏஎஸ் அவர்கள் கலந்து கொண்டுள்ளார். மேலும், முனைவர் ஆவுடையப்பன் மற்றும் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி, மாநகராட்சி ஆணையாளர் ரஞ்சித் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.

News December 6, 2024

சேலம் மாவட்ட ஆட்சியர் தகவல் 

image

அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கு, தமிழக அரசு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, சேலம் மாவட்டத்தில் 11,726 மாணவர்களுக்கும், 14,548 மாணவிகள் என மொத்தம் 26,276 மாணவ மாணவிகளுக்கு, ரூ.12.43 கோடி மதிப்பீட்டில், விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News December 6, 2024

சேலம் புத்தகத் திருவிழா: வாசகர்களின் கவனத்திற்கு

image

சேலம் மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சித் திடலில் நடைபெற்று வரும் சேலம் புத்தகத் திருவிழா, வரும் டிச.09-ம் தேதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், தமிழ் வளர்ச்சித் துறையின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் தமிழ் வினைச்சொல், அகரமுதலி உள்பட 7 புத்தகங்கள் 35% சிறப்பு தள்ளுபடியுடன் புத்தகத் திருவிழாவில் கிடைக்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளார்.

News December 6, 2024

சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

முகூர்த்தத்தினம், வார இறுதி நாட்களை முன்னிட்டு, சொந்த ஊர் செல்லும் பயணிகளின் வசதிக்காக இன்று (டிச.06) முதல் டிச.09 வரை சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்டங்களில் இருந்து 200 சிறப்பு பேருந்துகள் சேலம் கோட்டத்தின் சார்பில் இயக்கப்படுகின்றன. கோவை, திருப்பூர், ஓசூர், சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்தும் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

News December 6, 2024

சேலத்தில் இன்றைய நிகழ்வுகள்

image

சேலத்தில் இன்று(6.12.24) முக்கிய நிகழ்வுகள். ▶காலை 9:30 மணி சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் GH-ல் ஆய்வு மேற்கொள்ளவுள்ளார். ▶காலை 9 மணி பாஜக சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தல். ▶காலை 10:30 மணி அமைச்சர் ராஜேந்திரன் நலத்திட்ட உதவிகள் வழங்கவுள்ளார். ▶இன்று மாலை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

News December 5, 2024

சேலம் தலைப்புச் செய்திகள்

image

1. சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
2.ரூ.5 லட்சம் வரை காப்பீடு தொகை
3.ஆவின் பாலகத்தைத் திறந்து வைத்த எம்.எல்.ஏ.!
4.போராட்டத்தில் ஈடுபட்ட 156 பேர் மீது வழக்குப்பதிவு
5.உலக மண் தினத்தில் 95260 மரக்கன்றுகள் நடவு

News December 5, 2024

ரூ.5 லட்சம் வரை காப்பீடு தொகை

image

முதலமைச்சரின் மருத்துவர் காப்பீடு திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவி குழுவினர் மருத்துவ காப்பீடு ரூ.5 லட்சம் வரை பெறலாம். இதேபோல உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு 22 லட்சம் வரை காப்பீடு தொகை பெறலாம் இதற்கு ஆதார் மற்றும் குடும்ப அட்டை போதுமானது. www.cmchitn.com என்ற இணையம் மூலமும், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரிலும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

error: Content is protected !!