India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் மத்திய சிறை கண்காணிப்பாளர் வினோத் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:சேலம் மத்திய சிறை கட்டுப்பாட்டில் உள்ள சங்ககிரி கிளை சிறையில் காலியாக இருக்கும் சமையல் பணியிடத்தை நிரப்ப தகுதியான நபரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சேலம் மத்திய சிறை கண்காணிப்பாளரிடம் வரும் 5ஆம் தேதிக்குள் கிடைக்கும் வகையில் அஞ்சல் மூலம் விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவித்தார்.
சேலம் மாவட்டம், எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட வீரப்பாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அ.தி.மு.க.வின் சேலம் புறநகர் மாவட்டம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அ.தி.மு.க.வின் செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனை கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு உரையாற்றி வருகிறார். கூட்டத்தில் அ.தி.மு.க.வின் நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
தீபாவளி பண்டிகை நிறைவாக விடுமுறையின் கடைசி நாளான இன்று அதிகாலை முதல் ஆத்தூர் பஸ் நிலையத்தில் தொலைதூர பயணத்திற்கான முன்பதிவு டிக்கெட்டிற்கு பொதுமக்கள் மற்றும் பயணிகள் நீண்ட வரிசையில் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக காத்திருந்து முன்பதிவுக்கான பயண சீட்டினை பெற்றனர். இதனால் பெண்கள், முதியவர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர்.
தீபாவளி பண்டிகை முடிந்து வேலைக்கு மற்றும் சொந்த ஊருக்கு செல்வதற்கு வசதியாக சேலம் மாவட்டத்தில் இருந்து 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதைத்தொடர்ந்து பயணிகள் வருகைக்கு ஏற்ப அந்தந்த மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுவதால் மக்கள் கூட்ட நெரிசலை தவிர்க்குமாறு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
சேலத்தில் உள்ள 10-ம் வகுப்பு தேர்ச்சி, பட்டப்படிப்பு முடித்த இளைஞர்களுக்கு ஓர் அரிய வேலைவாய்ப்பு.குறுகிய காலத்தில் அரசு சான்றிதழ், உதவித்தொகையுடன் அதிநவீன பயிற்சியுடன் முன்னணி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு. குறைந்த இடங்களே உள்ளன. முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு 94898-77802, 95009-80430 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்புக் கொள்ளலாம்.
சேலம் அருகே உள்ள செம்மண் திட்டு பகுதியில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு பட்டியல் சமூகத்தினர் மீது ஆதிக்க சமூக இளைஞர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் படுகாயம் அடைந்தவர்கள் சதீஷ்குமார் மற்றும் அவரது மனைவி தமிழரசி ஆகியோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களை தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
சேலம் மாநகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக தற்போது நல்ல மழை பெய்து வருகிறது. வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எனினும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். நவ.01 முதல் சேலத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தீபாவளி பண்டிகையையொட்டி, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சேலம் கோட்டத்தில் இருந்து சென்னை, ஓசூர், கோவை, பெங்களூரு, தருமபுரி உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகள் மூலம் 15 லட்சம் பேர் வெளியூர் பயணம் மேற்கொண்டதாக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீபாவளி முடிந்து சொந்த ஊர் திரும்புவதற்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கேரளாவில் ரயில் மோதி 4 தமிழர்கள் உயிரிழந்ததாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் சேலம் பகுதியை சேர்ந்த 2 பெண்கள் உட்பட 4 துப்புரவு பணியாளர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 3 சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில், ஆற்றுக்குள் விழுந்த ஒரு சடலத்தை மீட்கும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, 2 இடங்களில் சேலம் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஒலி மற்றும் காற்று மாசுவை அளவிடும் கருவிகளைப் பொருத்தியிருந்தனர். அதன்படி, தீபாவளி தினத்தன்று மட்டும் சேலத்தில் ஒலி மாசு 78.3 டெசிபல் ஆகவும், காற்றின் தரக்குறியீடு 174 ஆகவும் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.