India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் மாவட்டம், ஓமலூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திமுகவின் பாக முகவர்கள் (BLA2) ஆலோசனைக் கூட்டம், ஓமலூரில் இன்று (நவ.04) நடைபெற்றது. கூட்டத்தில் திமுகவின் சேலம் மத்திய மாவட்டச் செயலாளரும், சுற்றுலாத்துறை அமைச்சருமான ராஜேந்திரன் கலந்து கொண்டு உரையாற்றினார். கட்சியின் ஓமலூர் தொகுதிப் பார்வையாளர், மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
➤சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் கனமழை பெய்து வருகிறது. ➤சேலம் புதிய பேருந்து நிலையத்தில் தீபாவளியை பண்டிகையை முடித்து சொந்த ஊர் செல்ல மக்கள் கூட்டம் அலைமோதியது. ➤சேலத்தில் 4 மாத குழந்தை ஆதிரை 32 நாடுகளின் தேசியக் கொடியை சரியாக கண்டுபிடித்து காட்டி சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார். ➤சேலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் வரும் 9ஆம் தேதி நடைபெறவுள்ளது.
கேரளா மாநிலத்தில் பாலக்காடு பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்ட சேலம் மாவட்டம் ஆச்சாங்குட்டப்பட்டி பகுதியைச் சேர்ந்த லட்சுமணன், வள்ளி, லட்சுமணன், ராணி உள்ளிட்ட 4 பேர் நேற்று முன்தினம் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தனர். உயிரிழந்த குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த நிதி உதவி, தலா ரூ.3 லட்சத்துக்கான காசோலையை அமைச்சர் ராஜேந்திரன் இன்று நேரில் சென்று வழங்கினார்.
சேலம் மாநகரில் வின்சென்ட், அஸ்தம்பட்டி, 5 ஆவது தெரு, 4 ஆவது தெரு, அழகாபுரம், சாரதா கல்லூரி சாலை, மத்திய பேருந்து நிலையம், ஈரடுக்கு பேருந்து நிலையம், பட்டைக்கோவில், கடைத்தெரு, பொன்னம்மாப்பேட்டை, குரங்குச்சாவடி, ஏற்காடு அடிவாரம், கன்னங்குறிச்சி அயோத்தியாபட்டணம் உள்ளிட்டப் பகுதிகளில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது.
சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று (நவ.4) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் டாக்டர்.பிருந்தாதேவி, மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டார். பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, வங்கிக்கடன்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 245 மனுக்கள் வரப்பெற்றதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்திய ராணுவத்தில் 174 ராணுவ வீரர்கள், 50 கிளார்க் பணியிடங்களுக்கான ஆட்கள் தேர்வு கோவை போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடைபெறுகிறது. தமிழகத்திலிருந்து பல்வேறு மாவட்ட இளைஞர்களுக்கு தேர்வு முகாம் நடைபெறும் நிலையில், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தோருக்கு வரும் 8ஆம் தேதி தேர்வு முகாம் நடைபெற உள்ளதால் ராணுவத்தில் சேர ஆர்வம் உள்ள இளைஞர்கள் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம், ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த கமலேஸ்வரி மற்றும் அவரது அண்ணன் கார்த்திக் ஆகியோர் நேற்றிரவு (நவ. 03) மத்திய பேருந்து நிலையத்திற்கு காரில் வந்த போது தடுத்த போலீசாருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் எஸ்.எஸ்.ஐ சரவணன் வேலன் கார் டிரைவரை தாக்கியதாக கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த கமலேஸ்வரி காலனியால் எஸ்.எஸ்.ஐ.யை தாக்கியுள்ளார். பள்ளப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.
சேலம் புதிய பஸ் நிலையத்திலும், ஜங்ஷன் ரயில் நிலையத்திலும் நேற்று காலை முதல் இரவு வரையிலும் மக்கள் பல்வேறு ஊர்களுக்கு பயணம் புரிய வருகை புரிந்ததால் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. சேலத்திலிருந்து திருச்சி, மதுரை, கோவை, திருப்பூர், ஈரோடு, சென்னை, வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், பெங்களூரு போன்ற நகரங்களுக்கு சென்ற அனைத்து பஸ்களிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக்-ஈஸ்வரி தம்பதியின் 4 மாத பெண் குழந்தை ஆதிரை. 32 நாடுகளின் தேசியக் கொடியை சரியாக கண்டுபிடித்து காட்டி, ‘நோபல்’ உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார். இந்த சாதனையை வீடியோவாக பதிவு செய்து அனுப்பியதில், அக். 22ல் உலக சாதனைப் பட்டியலில் அவருடைய பெயர் சேர்க்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஆதிரைக்கு சான்றிதழும் பதக்கமும் வழங்கப்பட்டது.
கேரளா மாநிலம், பாலக்காடு, ஷோரனூர் அருகில் கேரளா எக்ஸ்பிரஸ் ரயில் மோதிய விபத்தில் உயிரிழந்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த துப்புரவுப் பணியாளர்கள் 4 பேரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் இரங்கலைத் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூபாய் 3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.