India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று (அக்.27) திங்கட்கிழமை மக்கள் குறைதீர்ப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிருந்தா தேவி தலைமையில் நடைபெற்ற வருகிறது. இதில் குடிநீர் வசதி, கல்லூரி உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, திருமண தொகை மற்றும் இதர வசதிகள் வேண்டி பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

சேலம் செவ்வாய்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் செவித்திறன் மற்றும் பேச்சுத் திறன் குறைபாடுடைய மாணவ மாணவிகளுக்கான பள்ளி மாணவர்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மனு வழங்கினர். தங்கள் பள்ளியில் போதிய ஆசிரியர்கள் மற்றும் பயிற்றுநர்கள் இல்லை என்றும், இந்த நிலையில் ஒரு ஆசிரியரை வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்திருப்பதாகவும், இந்த உத்தரவைக் கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் (BEL) நிறுவனத்தில் காலியாக உள்ள Probationary Engineer (PE) பணியிடங்களை நிரப்ப தகுதியான 340 நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. B.E / B.Tech / B.Sc முடித்த 21 வயதுக்கு மேல் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு மாதம் ரூ.40,000 – 1,40,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது, விருப்பமுள்ளவர்கள் நவ-14ஆம் தேதிக்குள்ள<

தொப்பூர் கேண்டீன் அருகே இன்று காலை சுமார் 7 மணியளவில் இருசக்கர வாகனம் விபத்தில் சிக்கியுள்ளது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த நடுத்தர வயதுடைய ஒரு ஆண் மற்றும் பெண் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.இவர்கள் சொந்த ஊர் காடையாம்பட்டி என முதற்கட்ட தகவல் தெரிவிக்கின்றன. காவல்துறையினர் விரைந்து வந்து இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலத்தில் உங்க பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு, பிறப்பு சான்று, பள்ளி கல்லூரி இறுதி சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இணையத்தில் விண்ணப்பிக்க<

சேலத்தில் உள்ள அங்கன்வாடி மையங்கள், ஆரம்ப மற்றும் துணை சுகாதார நிலையங்களில், இன்று முதல் 31ஆம் தேதி வரை 6 மாதம் முதல், 6 வயது வரையான குழந்தைகளுக்கு, ‘வைட்டமின் ஏ’ திரவம் இலவசமாக வழங்கப்படவுள்ளது. குழந்தைகளுக்கு கண் குருடு, குடல், சிறுநீர், சுவாசப் பாதைகள் மற்றும் தோல் போன்ற உறுப்புகளை தொற்றிலிருந்து பாதுகாக்க ‘வைட்டமின் ஏ’ உதவுகிறது. எனவே மறவாமல் குழந்தைகளுக்கு திரவம் அளிக்க வேண்டும்.SHAREit

மேட்டூர் அணையின் நீர்த்தேக்க பகுதியான கோட்டையூர் பரிசல் துறையில் கர்நாடக மாநிலம் கோபிநத்தம் கிராமத்தைச் சேர்ந்த சங்கரன் (70) என்ற முதியவரின் உடல் காவிரி ஆற்றில் மிதந்தது.போலீசார் விசாரணையில் இவரது மகன் கோவிந்தராஜ், சங்கரனைக் கொலை செய்து காவிரி ஆற்றில் வீசியது தெரியவந்தது; இது குறித்து கொளத்தூர் போலீசார் கொடுத்த தகவல் அடிப்படையில் கர்நாடக மாதேஸ்வரன் மலை போலீசார் விசாரணை!

சேலம் ஊரகம், எடப்பாடி, சங்ககிரி, மேட்டூர், ஓமலூர், ஆத்தூர், தலைவாசல், வீரபாண்டி, சேலம் நகரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள காவல்துறையினரை இரவு நேரங்களில் குற்ற சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க தினந்தோறும் ரோந்து பணியில் அமர்த்துவது வழக்கம். அதன்படி இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்று, இரண்டு ஆண்டுகள் முடிவடைந்து, மூன்றாம் ஆண்டு துவக்க விழா நாளை திங்கட்கிழமை 27.10.2025 காலை 9 மணி அளவில் கணபதி ஹோமத்துடன் துவங்குகிறது. இந்த விழாவில் அம்மனுக்கு 108 சங்காபிஷேக பூஜை நடை பெற்று அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடைபெற உள்ளது.

சேலம் அரசு மருத்துவமனை வளாகத்தில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் இன்று மதியம் உணவு விற்பனை முடிந்த நிலையில் அனைத்து பணியாளர்களும் வீடு திரும்பினர். மாலை திடீரென கேஸ் கசிவு வெளியானது. தொடர்ந்து அங்கிருந்தவர்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக கசிவை சரி செய்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.