India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பொங்கல், மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு, வரும் ஜன.15- ஆம் தேதி திருவனந்தபுரம் வடக்கு (கொச்சுவேலி)- விஜயவாடா இடையே சிறப்பு ரயில் (06152) இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொல்லம், செங்கனூர், கோட்டயம், திருச்சூர், போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும். டிக்கெட் முன்பதிவுத் தொடங்கியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நடிகர் அஜித்-க்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். இகுறித்து X தளத்தில் பதிவிட்டுள்ள அவர், துபாயில் நடைபெற்ற 24HSeries கார் பந்தயத்தில் 3வது இடத்தைப் பிடித்துள்ள நடிகர், அன்புச் சகோதரர் அஜித்குமார் தலைமையிலான #AjithkumarRacing அணிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். மேலும் பல வெற்றிகளைக் குவித்து, நம் மாநிலத்திற்கும் நாட்டிற்கு பெருமை சேர்க்க வாழ்த்துக்கள்.
சேலத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் எம்எல்ஏ பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடாதது, அக்கட்சி விருப்பமாக இருந்தாலும் மறைந்த பெரியவர்களை கொச்சைப்படுத்தக்கூடாது. சீமான் மக்களை ஏமாற்ற பார்க்கிறார். சட்டப்பேரவையில் கவர்னர் நடந்துக் கொண்ட விதம் தவறானது திட்டமிட்டு அவமதிக்கிறார் என்றார்.
சேலம் மாவட்டத்தில் உள்ள 1,737 ரேஷன் கடைகளிலும் கடந்த 4 நாட்களில் 8,47,507 ரேஷன் கார்டுகளுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டது. அதாவது சுமார் 80 சதவீதம் ரேஷன் கார்டுகளுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள கார்டுகளுக்கு இன்றுக்குள் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டு விடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பெத்தநாயக்கன்பாளையம் அடுத்த பனைமடல் பகுதியைச் சேர்ந்த இளங்கோவன் மகன் பூவரசன் (15). இவர் வாழப்பாடி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்துவந்தார். இவர், அதே பகுதியைச் சேர்ந்த அவரது நண்பர்களான வாலீஸ்வரன், துளசிமணி உள்ளிட்டோருடன் செக்கடிப்பட்டி பகுதியில் உள்ள வசிஷ்ட நதி ஆற்றில் குளிக்க சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் முன்பதிவு மையங்கள் பயணிகளின் வசதிக்காக பொங்கல் பண்டிகையான நாளை (14.1.25) காலை 8 மணி முதல் பகல் 2 மணி வரை செயல்படும். இதனை பயணிகள் பயன்படுத்தி கொள்ளலாம். இத்தகவல் சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் இன்றைய (ஜனவரி 13) முக்கிய நிகழ்வுகள்: 1) சேலம் தலைவாசல் கால்நடை பூங்காவில் தமிழக முதல்வர் நலத்திட்ட பணிகளை துவக்கி வைத்தல், சுற்றுலா அமைச்சர், ஆட்சியர் பங்கேற்பு 2) போகிப் பண்டிகையொட்டி பகுதியில் குதிரை வண்டி பந்தயம். 3) சுகவனேஸ்வரர் கோவில் ஆருத்தர தரிசனம் சிறப்பு வழிபாடு 4) மாவட்ட கலெக்டர் ஆபீசில் வாராந்திர குறைத்தீர் கூட்டம்.
சேலம் மாநகரில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் இருக்கவும் அசம்பாவிதங்களை தவிரவும் மாநகர காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி மாநகர காவல் துறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அந்தந்த காவல் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு இரவு ரோந்து பணி ஈடுபட்டு வருகின்றனர். ஜனவரி 12 இரவு அதிகாரிகள் விவரம் வெளியிடப்பட்டது.
சேலம் வ உ சி பூ மார்க்கெட்டில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரவழைக்கப்பட்ட அனைத்து பூக்களும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. தற்போது சீசன் இல்லாமையாலும் பொங்கல் பண்டிகை ஒட்டியும் குண்டு மல்லிகைப் பூவின் விலை கிலோ ஒன்றுக்கு ரூபாய் 4000 வீதம் விற்கப்பட்டு வருகிறது. மஞ்சள் சாமந்தி கிலோ ரூ.400, கலர் பட்டு ரோசாக்கள் கிலோ ரூ.500 என விற்பனை செய்யப்படுகின்றன.
சேலம் வ உ சி பூ மார்க்கெட்டில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரவழைக்கப்பட்ட அனைத்து பூக்களும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. தற்போது சீசன் இல்லாமையாலும் பொங்கல் பண்டிகை ஒட்டியும் குண்டு மல்லிகைப் பூவின் விலை கிலோ ஒன்றுக்கு ரூபாய் 4000 வீதம் விற்கப்பட்டு வருகிறது. மஞ்சள் சாமந்தி கிலோ ரூ.400, கலர் பட்டு ரோசாக்கள் கிலோ ரூ.500 என விற்பனை செய்யப்படுகின்றன.
Sorry, no posts matched your criteria.