Salem

News November 6, 2024

சேலம் ரயில்வே கோட்டத்தின் அறிவிப்பு

image

கோவை- திண்டுக்கல் முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் சேவை (06106/ 06107) இருமார்க்கத்திலும் வரும் நவம்பர் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக சேலம் ரயில்வே கோட்டம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. இந்த ரயில் வாரத்தில் ஞாயிற்றுக்கிழமையைத் தவிர்த்து மற்ற அனைத்து நாட்களிலும் இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

News November 6, 2024

இன்றைய தலைப்பு செய்திகள்

image

➤சேலத்தில் ரேஷன் கடை பணிக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள் ஆகும். ➤ரயிலில் ஓசியில் பயணம் செய்த 16,000 பேரிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது. ➤சேலத்தில் எம்ஐஎஸ் அனலிஸ்ட் பணிக்கு தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ➤ஆத்தூரில் சிலிண்டர் வெடித்ததில் 3 பேர் படுகாயம். ➤எடப்பாடியில் ஆர்பாட்டத்தில் ஈடுபட முன்றய பாமகவினர், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

News November 6, 2024

ரேஷன் கடையில் வேலை: நாளை கடைசி நாள்

image

தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் கீழ் இயங்கி வரும் ரேஷன் கடைகளில், விற்பனையாளர் மற்றும் கட்டுநர்கள் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் 162 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. நேரடி நியமனம் மூலம் இப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதற்கு நாளையே கடைசி நாள் ஆகும். விருப்பம் உள்ளவர்கள் இங்கே <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம்.

News November 6, 2024

மக்கள் சந்திப்பு திட்ட முகாம் நடைபெறும் இடங்கள்

image

சேலத்தில் மக்கள் சந்திப்பு திட்ட முகாம் நடைபெறவுள்ளது. அதன்படி நவ.08-ம் தேதி அன்று முற்பகல் காடையாம்பட்டி ஒன்றியத்திற்கு காடையாம்பட்டி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்திலும், பிற்பகல் ஓமலூர் ஒன்றியத்திற்கு ஓமலூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்திலும், தாரமங்கலம் நகராட்சிக்கு தாரமங்கலம் நகராட்சி அலுவலகத்திலும் மக்கள் சந்திப்புத் திட்ட முகாம் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 6, 2024

திமுக செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கம் அறிக்கை

image

நாளை (வியாழக்கிழமை) சேலம் புதிய பஸ் நிலையம் எதிரே உள்ள கலைஞர் மாளிகையில் வீரபாண்டி தொகுதிக்குட்பட்ட, வீரபாண்டி ஒன்றியம், இளம்பிள்ளை, ஆட்டையாம்பட்டி பேரூர் பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் காலை 11 மணிக்கு நடக்கிறது. இங்கு மதியம் 12 மணிக்கு சேலம் தெற்கு ஒன்றியத்திற்கும், மதியம் 12.30 மணிக்கு பனமரத்துப்பட்டி ஒன்றியம் மற்றும் பனமரத்துப்பட்டி, மல்லூர் பேரூர் நிர்வாகிகளுக்கும் நடக்கிறது.

News November 6, 2024

சேலம்: ரயிலில் ஓசி பயணம் செய்த 16,000 பேருக்கு அபராதம்

image

ரெயில்வே கோட்ட மேலாளர் பங்கஜ் குமார் சின்கா உத்தரவின் பேரில் ரெயில்வே கோட்ட முதுநிலை வணிக மேலாளர் பூபதி ராஜா தலைமையில் டிக்கெட் பரிசோதகர்கள் கொண்ட குழுவினர் கடந்த மாதத்தில் சேலம் கோட்டம் வழியாக இயங்கும் ரெயில்களில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ரெயிலில் டிக்கெட் எடுக்காமல் ஓசி பயணம் செய்த 16,062 பேர் பிடிபட்டனர். அவர்களிடமிருந்து ரூ.1 கோடியே 31 லட்சத்து 19 ஆயிரத்து 311 அபராதம் வசூலிக்கப்பட்டது.

News November 6, 2024

சேலத்தில் நடிகர் கமலுக்காக சிறுவன் செய்த செயல்

image

சேலம் மாவட்டத்தை சேர்ந்த காது கேளாத வாய் பேசாத, லிட்டில் பிளவர் பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஆர்.சஞ்ய்குமார் என்பவர், நவம்பர் 7 அன்று பிறந்தநாள் காணும் உலகநாயகன் கமல்ஹாசன் உருவத்தை 3500 தீக்குச்சிகள் கொண்டு 22 மணி நேரம் செலவு செய்து ஓவியமாக வரைந்து வாழ்த்து கூறி அசத்தியுள்ளார். தொடர்ந்து கமலஹாசன் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

News November 6, 2024

சேலத்தில் வேலை: விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு

image

எம்.ஐ.எஸ் அனலிஸ்ட் பணிக்கு தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எம்.ஐ.எஸ் அனலிஸ்ட் பணிக்கான விண்ணப்பங்களை நேரிலோ அல்லது அஞ்சல் வழியாகவோ இணை இயக்குநர்/ திட்ட இயக்குநர், அறை எண்:207, மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், சேலம்- 636001 என்ற முகவரிக்கு வரும் நவ.15-க்குள் அனுப்ப வேண்டும் என சேலம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News November 6, 2024

ஆசிரியர்களுடன் அமைச்சர் கலந்துரையாடல்

image

எடப்பாடி நகரில் அமைந்துள்ள அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நேற்று (நவ.05) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஆசிரியர்களுடன் கலந்துரையாடினார். மேலும், திறக்கப்பட உள்ள புதிய வகுப்பறைக் கட்டடங்களையும் பார்வையிட்டார். அதே வளாகத்தில் அமைந்துள்ள வட்டார வள மையத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த ‘எண்ணும் எழுத்தும்’ பயிற்சி வகுப்பறையும் பார்வையிட்டார்.

News November 6, 2024

கட்டுமானப்பணிகள் குறித்து அமைச்சர் ஆய்வு 

image

எடப்பாடி தொகுதிக்குட்பட்ட ஜலகண்டாபுரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 234/77 திட்டத்தின் கீழ் விரிவான ஆய்வு மேற்கொண்டோம். 234/77 திட்டத்தின் 232ஆவது ஆய்வு செய்து ரூ.40 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கழிப்பறை கட்டுமானப் பணிகள், மாணவிகளுக்கான போக்குவரத்து வசதி மற்றும் புதிய சமையல் அறை தேவைகள் குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி இன்று பார்வையிட்டார்.