India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர் நடராஜன், இந்திய அணியிலும் இடம் பிடித்துள்ளார். இவர் தனது மகள் பிறந்தநாளை தாரமங்கலம் எக்காம்வெல் மாற்றுத்திறன் குழந்தைகள் பள்ளியில் நேற்று கொண்டாடினார். பள்ளி நிர்வாகிகள் லாரன்ஸ், ஜூலி ஆகியோர், நடராஜன் குடும்பத்தினரை வரவேற்று, குழந்தைக்கு வாழ்த்து தெரிவித்தனர். மாற்றுத்திறன் குழந்தைகள் பள்ளிக்குச் சென்ற நடராஜனுக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர் நடராஜன், இந்திய அணியிலும் இடம் பிடித்துள்ளார். இவர் தனது மகள் பிறந்தநாளை தாரமங்கலம் எக்காம்வெல் மாற்றுத்திறன் குழந்தைகள் பள்ளியில் நேற்று கொண்டாடினார். பள்ளி நிர்வாகிகள் லாரன்ஸ், ஜூலி ஆகியோர், நடராஜன் குடும்பத்தினரை வரவேற்று, குழந்தைக்கு வாழ்த்து தெரிவித்தனர். மாற்றுத்திறன் குழந்தைகள் பள்ளிக்குச் சென்ற நடராஜனுக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
➤அம்மாபேட்டையில் சூரசம்ஹார விழா ➤சாலை பாதுகாப்பு நடவடிக்கை குறித்த ஆய்வு கூட்டம் ➤திறன் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு முகாம் ➤முத்துமலை முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள் ➤ரூ.16,000 ஊதியத்துடன் இலவச பயிற்சி ➤மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
சேலம் மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து காவல்துறை, அரசுத்துறை அலுவலர்களுடனான மாதாந்திர ஆய்வுக் கூட்டம் ஆட்சியர் பிருந்தாதேவி தலைமையில் மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று (நவ.07) நடைபெற்றது. விபத்துகள் ஏற்படும் இடங்களில் தொடர்புடைய அலுவலர்கள் கூட்டாய்வு மேற்கொண்டு எதிர்வரும் காலங்களில் விபத்துகள் ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார்.
சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின், கிராமப்புற திறன் பயிற்சி திட்டத்தின் கீழ் ஊரக பகுதிகளிலுள்ள 8ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு படித்த 18 முதல் 45 வயது வரையுள்ள இளைஞர்கள், மகளிருக்கு 3 முதல் 6 மாதம் வரை இலவச திறன் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு அளித்திடும் வகையில் வேலைவாய்ப்பு முகாம் நாளை (நவ.8) காலை 10 மணியளவில் சேலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் கலந்துகொண்டு, மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கினார். அப்பள்ளியில் பயிலும் கபடி வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை பாராட்டி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
மேட்டூர் அணையில் இன்றைய நிலவரப்படி, நீர்வரத்து வினாடிக்கு 9,929 கன அடியிலிருந்து 11,063 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 106.810 அடியாக உள்ள நிலையில், நீர் இருப்பு 73.949 டி.எம்.சி.யாக உள்ளது. அணையிலிருந்து பாசனத் தேவைக்காக வினாடிக்கு 12,000 கன அடி தண்ணீரும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது.
காவல்துறை இயக்குநரின் உத்தரவுப்படி சேலம் மாவட்ட காவல் அலுவலகத்தில் பொது மக்களின் மனுக்கள் மீதான சிறப்பு விசாரணை முகாம் நேற்று நடந்தது. அதில் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயல், கலந்து கொண்டு பொதுமக்கள் மனுக்கள் மீதான விசாரணை நடத்தினார். மேலும் தீர்வு காணாத மனுக்கள் மீது விசாரணையை ஒத்தி வைத்தார்.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் தனியார் இணைந்து வழங்கும் இலவச அழகுக்கலைப் பயிற்சி வழங்குகிறது. இதில் மேற்படிப்பு படிக்க இயலாத மாணவர்களுக்கு வேலை திறனை மேம்படுத்தும் நோக்கத்தில் இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அரசு சான்றிதழுடன் மாத ஊதியம் 16,000 முதல் ரூ.20,000 வரை வழங்கப்படும். சேலம் ஏற்காட்டில் இப்பயிற்சி வழங்கப்படுகிறது. விவரங்களுக்கு 80728-28762, 90258-08570 அழைக்கலாம்.
பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று (நவ.6) நடைபெற்ற மக்கள் சந்திப்பு திட்ட முகாமில் கலந்து கொண்ட தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டார். அனைத்து துறைகள் மூலம் 73 பயனாளிகளுக்கு ரூ.59.64 லட்சம் மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
Sorry, no posts matched your criteria.