Salem

News November 19, 2024

சேலம் என பெயர் எப்படி வந்தது?

image

மலைகளால் சூழ்ந்து காணப்பட்டதால் “சைலம்” என்று அழைக்கப்பட்டு அது “சேலம்” என மருவியதாகவும். சேர நாட்டின் கிழக்கு எல்லையாக இருந்ததால், சேரலம் எனப்பட்டு சேலம் என மருவியதாக கூறப்படுகிறது. மேலும், சேலை நெசவுக்கு பெயர் பெற்று சேலையூர் என்ற பெயர் “சேலம்” என காலப்போக்கில் மருவியதும் என கூறுவார்கள். எனவே, சேலம் மக்களே உங்க ஊர் பெயர் எப்படி வந்தது என கமென்ட் செய்யவும்.

News November 18, 2024

சேலம்: இன்றைய தலைப்பு செய்திகள்

image

➤அதிகாரிகள் மீது குற்றஞ்சாட்டிய பொன்.மாணிக்கவேல் ➤அரசியல் பணி மேற்கொண்ட ஆசிரியர் சஸ்பெண்ட் ➤சத்துணவு ஊழியர்கள் தர்ணா போராட்டம் ➤நாதக மாவட்ட செயலாளர் பதவி விலகல் ➤திமுக மாவட்ட செயற்குழு கூட்டம் ➤சேலத்தில் 42,000 பேர் விண்ணப்பம் ➤பேனர் கிழிப்பு: மறியலில் ஈடுபட்ட விசிகவினர் ➤மழையில் முளைத்த விஷகாளான் உதயநிதி: EPS ➤ரயில் மோதி 2 மாணவர்கள் உயிரிழப்பு.

News November 18, 2024

அதிகாரிகள் மீது குற்றஞ்சாட்டிய பொன்.மாணிக்கவேல்

image

சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் முன்னாள் ஐஜி பொன்மாணிக்கவேல் சாமி தரிசனம் செய்தார். அப்போது செய்தியாளர்களை சந்திந்த அவர், கோயில் பாதுகாப்பு படையை தமிழக அரசு உடனடியாக கலைத்திட வேண்டும் என்றும், அரசியல்வாதிகளை விட அரசு அதிகாரிகள் தான் மிகவும் மோசமானவர்கள் என்றும், அரசியல்வாதிகளை விட அரசு அதிகாரிகள் தான் கோயில் பணத்தை அதிக அளவு திருடுகிறார்கள் என குற்றம் சாட்டியுள்ளார்.

News November 18, 2024

அரசியல் பணி மேற்கொண்ட ஆசிரியர் மீது நடவடிக்கை

image

கட்சி சார்ந்த பணிகளை மேற்கொண்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து சேலம், அரியாம்பட்டி அரசுப் பள்ளி ஆசிரியர் சீதாராமனை பணியிடை நீக்கம் செய்து தொடக்கக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். விசாரணையில், அரசியல் கட்சி சார்ந்த விவசாய சங்கத்தில் பொறுப்பாளராக இருப்பது தெரிய வந்ததால் நடவடிக்கை. எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயிகள் சார்பாக நடத்திய பாராட்டு விழாவில் கலந்து கொண்டு தலைமை உரையாற்றியதாக கூறப்படுகிறது. 

News November 18, 2024

நா.த.க மாவட்டச் செயலாளர் பதவி விலகல்

image

நாம் தமிழர் கட்சியில் இருந்து மேலும் ஒரு மாவட்ட செயலாளர் விலகியுள்ளது அக்கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. நாம் தமிழர் கட்சியில் இருந்து தன்னை விடுவித்து கொள்வதாக சேலம் மாநகர மாவட்ட செயலாளர் அழகாபுரம் தங்கம் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியில் இருந்து அடுத்தடுத்து பொறுப்பாளர்கள் விலகி வருவதால் நாம் தமிழர் கட்சியினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

News November 18, 2024

திமுக மாவட்ட செயற்குழு கூட்டம்

image

சேலம் கிழக்கு மாவட்டம் திமுக சார்பில் வாழப்பாடியில் உள்ள மாவட்ட அலுவலத்தில் செயற்குழு கூட்டம் இன்று மாவட்ட அவைத்தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெற்றது. இதில் கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ். ஆர். சிவலிங்கம் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகள் வழங்கி உரையாற்றினார். இதில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News November 18, 2024

சேலத்தில் 42,000 பேர் விண்ணப்பம்

image

கடந்த 2 நாட்களாக, சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாமில் 42,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். வரும் நவம்பர் 28-ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டு அடுத்த ஆண்டு ஜனவரி 6-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News November 18, 2024

இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

➤சேலத்தில் காலை 10 மணி அருள்மிகு காவடி பழனியாண்டர் திருக்கோவில் பால்குடம் ஊர்வலம். ➤காலை 10 மணி முதல் 2 மணி வரை சேலம் கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர குறைதீர்வு கூட்டம் ➤11 மணி அருள்மிகு சுகவனேஸ்வரர் திருக்கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி ➤ மதியம் 2 மணி கோட்டை மைதானத்தில் தமிழ்நாடு சத்துணவுஓய்வு ஊதிய பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.

News November 18, 2024

மழையில் முளைத்த விஷகாளான் உதயநிதி: EPS 

image

சேலம், மேச்சேரி அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது உதயநிதி ஸ்டாலின் குறித்து ‘நேற்று பெய்த மழையில் முளைத்த விஷ காளான்’ என விமர்சனம் செய்தார். திமுகவில் எவ்வளவு பேர் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். எதன் அடிப்படையில் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது என கேள்வி எழுப்பினார். கருணாநிதி பேரன், ஸ்டாலின் மகன் என்பதுதான் தகுதியா? என கூறினார்.

News November 18, 2024

ரயில் மோதி 2 மாணவர்கள் உயிரிழப்பு

image

சேலம் அருகே உள்ள புத்தரகவுண்டம்பாளையம் பகுதியில் தண்டவாளத்தை கடக்க முயன்ற இரண்டு மாணவர்கள்  ரயில் மோதி பலியானார்கள். இவர் நேற்று மாலை செல்போனில் வீடியோ பார்த்துக் கொண்டே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது சேலம்-விருதாச்சலம் பயணிகள் ரயில் திடீரென மாணவர்கள் மீது மோதியது. இவ்விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.