India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் குடிநீர் பிரச்சினைகள் மற்றும் சீரான குடிநீர் வழங்குவது குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் வளர்மதி தலைமை வகித்தார். திட்ட இயக்குனர் லோகநாயகி நீர்வள ஆதாரத்துறை செயற்பொறியாளர் பிரபாகரன், செயற்பொறியாளர் சற்குணம், மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த பெல் அண்ணாநகர் பகுதியில் அதிமுக ஒன்றிய செயலாளர் தேவேந்திரன் தலைமையில் எடப்பாடி பழனிச்சாமியின் 70-வது பிறந்த நாள் விழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அதிமுக ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.எம்.சுகுமார் கலந்து கொண்டு 300 மகளிர்களுக்கு இலவச சேலைகளை வழங்கினார்.
ராணிப்பேட்டை பாரதி நகரில் அமைந்துள்ள திமுக மாவட்ட தலைமை அலுவலகத்தில் செயற்குழு கூட்டம் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. அமைச்சரும் திமுக மாவட்ட செயலாளருமான காந்தி தலைமை வகித்து பேசினார். இதில் மாவட்ட அவை தலைவர் சுந்தரமூர்த்தி, தலைமை செயற்குழு உறுப்பினர் கண்ணையன், மாவட்ட துணை செயலாளர்கள் சிவானந்தம், துரை மஸ்தான் மற்றும் ஒன்றிய நகர செயலாளர் கலந்துகொண்டனர்.
அரக்கோணம் அடுத்த அன்வர்த்திகான்பேட்டை இருளர் காலனியை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் அதே ஊரைச் சேர்ந்த உறவினரான 18 வயது சிறுவனுக்கும் நாளை திருமணம் செய்து வைக்க பெரியோர்கள் திட்டமிட்டிருந்தனர். மாவட்ட சமூக பாதுகாப்பு நல அலுவலருக்கு தகவல் கிடைத்ததின் பேரில் இன்று அரக்கோணம் தாலுகா போலீசார் மற்றும் சமூக நல அலுவலர் ஆகியோர் இணைந்து குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்தி பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்கினர்.
அரக்கோணம் நகராட்சியில் மொத்தம் 36 வார்டுகள் உள்ளன. இங்கு 9,386 குடிநீர் குழாய் இணைப்புகள் தரப்பட்டுள்ளது. குடிநீர் பயன்படுத்துவோர் ரூ.2 கோடி வரி பாக்கி வைத்துள்ளனர். குடிநீர் வரி வசூலிக்க வீடு, வீடாக நகராட்சி ஊழியர்கள் வருகின்றனர். வரிபாக்கியை செலுத்தாவிடில் ஜூலை 31ம் தேதிக்கு பிறகு குழாய் இணைப்பு துண்டிக்கப்படும் என்று ஆணையாளர் ரகுராமன் நேற்று(மே 24) தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நில அளவை நிலுவை பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று(மே 24) நடைபெற்றது. ஆட்சியர் வளர்மதி தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், வருவாய் கோட்டாட்சியர்கள் மனோன்மணி, பாத்திமா, சென்னை மண்டல துணை இயக்குனர் சரவணன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். நிலுவையில் உள்ள நில அளவை பணிகளை விரைந்து முடிக்க ஆட்சியர் அறிவுறுத்தினார்.
தமிழகத்தில் ராணிப்பேட்டை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு புதிதாக மருத்துவக் கல்லூரி அமைக்க தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி அளித்துள்ளதாக இன்று காலை தகவல் வெளியானது. இந்நிலையில், அத்தகவல் தவறானது என தமிழ்நாடு மருத்துவத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ராணிப்பேட்டையில் புதிதாக மருத்துவக் கல்லூரி அமைக்க தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி அளித்துள்ளது. மேலும், மத்திய அரசின் பங்களிப்போடு அமையவுள்ள கல்லூரிகளுக்கு 25 ஏக்கர் நிலத்தை அடையாளம் காணுமாறு, மே 6 ஆம் தேதி நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்ட 9 அதிகாரிகள் ஆலோசனையில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
அரக்கோணம் ஜோதி நகரில் முப்பெரும் தேவியர் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு பௌர்ணமி தினத்தை முன்னிட்டு இன்று முப்பெரும் தேவியருக்கு பால் மற்றும் பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
Google play store-ல் உள்ள அங்கீகரிக்கப்படாத கடன் செயலிகளை பதிவிறக்கம் செய்யப்பட வேண்டாம் என காவல்துறை எச்சரித்துள்ளது. இந்த செயலிகள் மூலம் தங்களின் கைபேசியிலுள்ள அனைத்து தொடர்புகள், புகைப்படங்கள் ஆகியவை திருடப்பட்டு உங்கள் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து உங்கள் நண்பர்களுக்கோ குடும்ப உறுப்பினர்களுக்கோ அனுப்பி பணம் கேட்டு மிரட்டப்பட வாய்ப்புள்ளதாக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது
Sorry, no posts matched your criteria.