India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் ராணிப்பேட்டையில் TNPSC GROUP 4 /VAO பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது எனவே மேற்கண்ட பயிற்சி வகுப்பில் சேர விருப்பமுள்ள மாணவ, மாணவிகள் https://forms.gle/8z5C7yeZwGiSDyze9 இந்த Link ல் google form ஐ பூர்த்தி செய்து பதிவு செய்து பயனடையுமாறு மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது
ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தனகிரி அருகே சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கீழ் மின்னல் பகுதியில் முன்னால் சென்ற இரு சக்கர வாகனம் மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த பிரவீன்(19), மற்றும் வசந்த்(19) ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சார்பாக மாவட்ட மக்களுக்கு இன்று (டிச -23) வெளியிடப்பட்டுள்ள விழிப்புணர்வு செய்தியில், “பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சைபர் டிப்ஸ் நீங்கள் இணைக்கும் போது பாதுகாப்பாக இருங்கள்..!ஆன்லைனில் எதை இடுகையிடுகிறீர்கள் & எதைக் கிளிக் செய்கிறீர்கள் என்பதில் கவனமாக இருங்கள்” என ராணிப்பேட்டை காவல் துறை சார்பாக செய்தி வெளியிடப்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் ராணிப்பேட்டையில் TNPSC GROUP 4 /VAO பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது எனவே மேற்கண்ட பயிற்சி வகுப்பில் சேர விருப்பமுள்ள மாணவ, மாணவிகள் https://forms.gle/8z5C7yeZwGiSDyze9 இந்த Link ல் google form ஐ பூர்த்தி செய்து பதிவு செய்து பயனடையுமாறு மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது
காய்கறி கிலோவில் தக்காளி ரூ 20-40, சேனைக்கிழங்கு ரூ 60-80, கருணைக்கிழங்கு ரூ 80-90, வெண்டைக்காய் ரூ 60-70, வெங்காயம் ரூ 35-70,சின்ன வெங்காயம் ரூ 65-70, கத்திரிக்காய் ரூ 60-80,புடலை ரூ 40-50,பூசணி ரூ 30-35, உருளைக்கிழங்கு ரூ 40-60, காலிஃப்ளவர் ரூ 30-40, முள்ளங்கி ரூ 40,கேரட் ரூ 40-60, தேங்காய் ரூ 20,25,30, பூண்டு 380-400,430 இஞ்சி ரூ 55-120, பீட்ரூட் ரூ 70-80 என விற்பனை செய்யப்படுகிறது
ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை டிச. 27-இல் நடைபெறும் என ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளார். இதில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறை, பட்டு வளர்ச்சித் துறை, மீன்வளத்துறை, கால்நடை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகளின் குறைகளுக்கு பதிலளிக்க உள்ளனர்.
வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு வழங்கலாம் என உச்ச நீதி மன்றம் தீர்ப்பு வழங்கி 1000 நாட்களாக எந்த நடவடிக்கையும் இல்லாமல் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் காலம் தாழ்த்தி வரும் தமிழக அரசை வலியுறுத்தி, ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக சார்பில் நாளை காலை 10 மணிக்கு ராணிப்பேட்டை முத்துகடை பேருந்து நிலையம் அருகில் போராட்டம் நடைபெறும் என்று பா.ம.க மேற்கு மாவட்ட செயலாளர் சண்முகம் அறிவிப்பு.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ( டிச 22 ) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் : 9884098100
ராணிப்பேட்டையில் டாடா நிறுவனத்தின் ஜாகுவார் லேண்ட்ரோவர் கார் தயாரிக்கும் ஆலை அமைக்கப்படுகிறது. இதற்கான கட்டுமான பணிகளை மேற்கொள்ள சுற்றுச்சூழல் அனுமதி கோரி டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. கார் தொழிற்சாலைக்கு செப்டம்பர் 28ஆம் தேதி முதலமைச்சர் அடிக்கல் நாட்டிய நிலையில் சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளது. முதல் கட்டமாக 190 ஹெக்டேரில் ரூ.914 கோடியில் கார் தொழிற்சாலை அமைய உள்ளது.
ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் டிச.27-ந் தேதி காலை 11 மணி அளவில் ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகள் தெரிவிக்கும் குறைகளுக்கு பதிலளிக்க உள்ளனர்.எனவே ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் கலந்துகொண்டு குறைகளை கோரிக்கை வாயிலாகவும், மனுக்கள் வாயிலாகவும் தெரிவிக்கலாம்.
Sorry, no posts matched your criteria.