India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காய்கறி கிலோவில் தக்காளி ரூ 20-30, மொச்சை ரூ 80-100, அவரை ரூ 60-70, முருங்கை ரூ 220-300,வெண்டைக்காய் ரூ 60,வெங்காயம் ரூ 30,45,60 சின்ன வெங்காயம் ரூ 70-80 கத்திரிக்காய் ரூ 60-80, புடலை ரூ 35, பூசணி ரூ 20-25 உருளைக்கிழங்கு ரூ 60-70 காலிஃப்ளவர் ரூ 20-25, முள்ளங்கி ரூ 40-50, கேரட் ரூ 60-80, தேங்காய் ரூ 20,25,30 பூண்டு 220- 380-400, இஞ்சி ரூ 70-150, பீட்ரூட் ரூ 70-80 என விற்பனை செய்யப்படுகிறது
கலவை பேரூராட்சியில் சொத்து வரி, வீட்டு வரி, குடிநீர் கட்டணம், உள்ளிட்டவற்றை செலுத்தாதவர்களுக்கு பேரூராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. கால அவகாசம் கொடுக்கப்பட்ட பின்னரும் வரி செலுத்தாதவர்களுக்கு பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயக்குமார் தலைமையில் நேற்று முதல் கட்டமாக நாலேரியார் தெரு, அப்பாச்சி பிள்ளை தெருவில் வரி செலுத்தாத வீடுகளில் குடிநீர் இணைப்பை பேரூராட்சி ஊழியர்கள் துண்டித்தனர்.
ரெண்டாடி ஊராட்சி கொளத்தூர் கிராமத்தில் பட்டுப்பூச்சி வளர்ப்பு பண்ணை அமைந்துள்ளது. இந்த பண்ணையில் இன்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பட்டுப்பூச்சி வளர்ப்பு பண்ணைக்கு செல்வதற்கு போதிய வழியில்லாத நிலையில் தீயணைப்பு துறை அங்கு செல்வதற்குள் பண்ணை முழுவதும் தீயில் எரிந்து நாசமானது. மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
TNPSC GROUP 4 தேர்விற்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் ராணிப்பேட்டை மாவட்டத்தில் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மாணவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரிலோ அல்லது 04172-291400 என்ற தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தங்கள் விருப்பத்தை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.
மாவட்டத்தில் தினசரி செய்தி நாளிதழ், தொலைக்காட்சி நிறுவனத்தில் பணியாற்றி வரும் செய்தியாளர்கள் புகைப்படக்காரர்கள் ஒளிப்பதிவாளர்களுக்கு 2025ம் ஆண்டிற்கான இலவச பேருந்து பயண அட்டை புதுப்பித்தல் மற்றும் புதிய அட்டை வேண்டும் என்பவர்கள் விண்ணப்பங்களை வரும் டிச.31க்குள் ராணிப்பேட்டை மாவட்டச் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் வழங்க வேண்டும் என மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அசோக் தெரிவித்துள்ளார்.
பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் இராணிப்பேட்டை மாவட்ட மாணவ, மாணவியர்கள் கலந்து கொள்ளும் வகையில் அறிஞர் அண்ணா நினைவு மிதிவண்டிப் போட்டி 04-01-2025 அன்று ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து காலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது. கலந்து கொள்ள விருப்பமுள்ள மாணவர்கள் தலைமையாசிரியரிடம் வயதுக்கான அனுமதி சீட்டு பெற்று சொந்த மிதி வண்டி எடுத்து வர வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ஜெ.யு. சந்திரகலா, இ.ஆ.ப., தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (27.12.2024) டிசம்பர் 2024 ஆம் மாதத்திற்கான விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் நடைபெற்றது. விவசாயிகள் கூட்டத்தில் பல்வேறு பிரச்சனைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் தெரிவித்தனர். தொடர்ந்து தனிநபர் பிரச்சினைகளை மனுக்களாகவும் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (டிச.,2) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கு புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூம் 9884098100 என்ற எண்ணிற்கும் அழைக்கலாம்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பாக மாவட்ட கழக செயலாளர் எஸ்.எம்.சுகுமார் தலைமையில், வரும் 30-12-2024 காலை 10 மணி அளவில் ராணிப்பேட்டை பகுதியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் திரளான கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று உடல் நலக்குறைவால் உயிரிழந்ததை தொடர்ந்து ராணிப்பேட்டை அமைச்சர் ஆர். காந்தி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முன்னாள் பிரதமர் டாக்டர்.மன்மோகன் சிங் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் காங்கிரஸ் பேரியக்க தொண்டர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்” என தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.