India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரக்கோணம் மக்களவை தொகுதியில் 26 வேட்பாளர்கள் போட்டியிட்டனர் .திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் முன்னிலை வகித்து வருகிறார்.அதே போல் பாமக சார்பில் போட்டியிட்ட வழக்கறிஞர் கே.பாலு தொடர்ந்து கடும் பின்னடைவை சந்தித்து வருகிறார்.
அரக்கோணம் மக்களவை தொகுதியில் 26 வேட்பாளர்கள் போட்டியிட்டனர் .திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் அதிகாரப்பூர்வ தேர்தல் ஆணைய அறிவிப்பில் 27 ஆயிரத்து 205 வாக்குகள் பெற்றுள்ளார் . அதிமுக வேட்பாளர் விஜயன் 12,214 வாக்குகள் பெற்றுள்ளார். முதல் சுற்றில் ஜெகத்ரட்சகன் 14,991 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார் . பாமக 10,640 வாக்குகளும், நாதக 4,238 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் 2வது சுற்று வாக்கு எண்ணிக்கை நிலவரம்: சட்டமன்ற தொகுதி வாரியாக ராணிப்பேட்டை திமுக: 4589 அதிமுக:1744 பாமக:1501 நாதக:673, ஆற்காடு திமுக:4658 அதிமுக:2157 பாமக:2606 நாத:670, அரக்கோணம் திமுக:4911 அதிமுக:2253 பாமக:1916 நாத:970, திருத்தணி திமுக:5416 அதிமுக:2195 பாமக:1095 நாத:665, காட்பாடி திமுக:3918 அதிமுக:2113 பாமக:1655, சோளிங்கர் திமுக:4534 அதிமுக:2444 பாமக:1959
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் வாலாஜாவில் உள்ள அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலை கல்லூரியில் இன்று எண்ணப்பட்டு வருகிறது. இதில் முதல் சுற்று முடிவில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ஜெகத்ரட்சகன் 27235 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் A.L.விஜயனை விட 15000 வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்
அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் திமுக முன்னிலை பெற்றுள்ளது.
இதில் திமுக- 27,205 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறது.
இரண்டாவது இடத்தில் அதிமுக-12,214, மூன்றாவது இடத்தில் பாமக-10,640 வாக்குகள், நாம் தமிழர்- 4238 வாக்குகள் பெற்றதுள்ளது. இதில் திமுக வேட்பாளர் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.
நாடே எதிர்பார்க்கும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை சற்றுமுன் தொடங்கியது. அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு சுற்றுகளின் முடிவுக்காக அரசியல் கட்சி முகவர்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன.
ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ஜூன் 10ஆம் தேதி முதல் ஜூலை 1ஆம் தேதி வரை கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்படுகிறது. கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட வரும் ஊழியர்களிடம் தகுந்த ஒத்துழைப்பு தர வேண்டும். கால்நடைகளின் நலன் கருதியே கோமாரி நோய் தடுப்பூசி போடப்படுகிறது என்பதை பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆட்சியர் வளர்மதி இன்று தெரிவித்துள்ளார்
2024 மக்களவைத் தேர்தலில் அரக்கோணம் தொகுதியில் மொத்தம் 74.08 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. வேட்பாளராக திமுக சார்பில் எஸ்.ஜெகத்ரட்சன், அதிமுக சார்பில் விஜயன், பாமக சார்பில் கே.பாலு, நாம் தமிழர் சார்பில் பேராசிரியர் அப்சியா நஸ்ரின் போட்டியிட்டுள்ளனர். இவர்களில் வெற்றி பெறப்போவது யார்? தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள Way2News-னுடன் இணைந்திருங்கள்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப் பணி தேர்வில் தொகுதி – 4 ராணிப்பேட்டை மாவட்டத்தில் மொத்தம் 121 தேர்வு கூடங்களில் 32,970 தேர்வுகள் தேர்வு எழுத உள்ளனர். இந்த தேர்வு ஜூன்.9ஆம் தேதி நடக்கிறது. தேர்வுக்காக சிறப்பு பேருந்து வசதிகள், தடையில்லா மின்சாரம் , போலீஸ் பாதுகாப்பு என அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என்று ஆட்சியர் வளர்மதி இன்று தெரிவித்துள்ளார்.
2019 மக்களவைத் தேர்தல் அரக்கோணம் தொகுதியில், திமுக சார்பில் போட்டியிட்ட ஜெகத்ரட்சகன் 3,28,956 (28.12%) வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இம்முறை 2024 மக்களவைத் தேர்தலில், திமுக சார்பில் ஜெகத்ரட்சகனும், அதிமுக சார்பில் ஏ.எல். விஜயனும் போட்டியிட்டுள்ளனர். இவர்களில் வெற்றி பெறப்போவது யார்? உங்கள் கருத்து என்ன?
Sorry, no posts matched your criteria.