India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ராணிப்பேட்டை மாக்களே, தமிழ்நாடு அரசு சமூக நலத்துறையில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 10th போதும், சம்பளம் ரூ.21,000 வரை வழங்கப்படும். எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 25.08.2025 தேதிக்குள் <

ஆற்காட்டில் அமைந்துள்ள சரஸ்வதி தனகோட்டி ஆரம்பப்பள்ளி வாசலிலேயே சமூக விரோதிகள் இரவு நேரங்களில் மது அருந்துவதும், அந்த மது பாட்டில்களை பள்ளி வளாக வாசலில் வீசி செல்கின்றனர். மேலும் அங்கு வாகனங்கள் நிறுத்தப்படுவதால் பள்ளிக்குச் செல்லும் மாணவர்களும், ஆசிரியர்களும், பெற்றோர்களும் பெரிதும் சிரமம் அடைகின்றனர். இதை துறை சார்ந்த அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர்.

ராணிப்பேட்டை காவல் துறை சார்பில் தினமும் விழிப்புணர்வு செய்தி பதிவிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று பாதசாரிகள் கவனமாக இருக்கவும், சீட் பெல்ட்டை பயன்படுத்தவும், போக்குவரத்து விதிகள்& விதிமுறைகளைப் பின்பற்றவும், தூக்கம் வந்தால் வாகனம் ஓட்ட வேண்டாம், ஹெல்மெட் அணியுங்கள் குடித்துவிட்டு வாகனம் ஓட்ட வேண்டாம் போன்றவற்றை விளக்கும் வகையில் பதிவிட்டுள்ளது. இதை ஷேர் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்!

தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு துறையில் இயங்கும் சங்கங்கள் மற்றும் வங்கிகளில் உள்ள உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 2,500 காலிப் பணியிடங்கள் உள்ளன. ராணிப்பேட்டையில் 45 பணியிடங்கள் உள்ளன. டிகிரி முடித்தவர்கள் <

சென்னை போன்ற குறிப்பிட்ட மாநகராட்சிகளை தவிர, மற்ற நகர்ப்புற & ஊரக பகுதிகளில் தெரு நாய்கள் கணக்கெடுப்பு தொடர்பாக எந்த நடவடிக்கையும் இல்லை. தமிழ்நாட்டில் 25 லட்சம் தெருநாய்கள் இருக்கலாம் என கால்நடை மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஜனவரி மாதம் முதல் ஜூன் வரை ராணிப்பேட்டையில் 4,406 பேர் நாய்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் ரேபிஸ் தொற்றால் உயிரிழந்துள்ளார். எனவே பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருங்கள்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15 அன்று அனைத்து மதுபான கடைகளும் மூடப்பட்டிருக்கும் என்று மாவட்ட ஆட்சியர் ஜே யூ சந்திரகலா உத்தரவிட்டுள்ளார் மேலும் அந்த நாளில் எந்த விதமான மதுபான விற்பனையும் நடைபெறக்கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார் பொதுமக்கள் அமைதியாகவும் ஒழுங்காகவும் சுதந்திர தினத்தை கொண்டாட மாவட்ட நிர்வாகம் ஏற்பாடுகளை செய்துள்ளது

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ( ஆகஸ்ட் -12) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது ராணிப்பேட்டை ஆற்காடு சோளிங்கர் அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் :9884098100

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் இளைஞரை வெட்டிக் கொலை செய்த வழக்கில் திமுக ஒன்றிய கவுன்சிலர் அஸ்வினி, அவரது கணவர் சுதாகர் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். அஸ்வினியின் கணவர் சுதாகரின் இடது கையை வெட்டியதாக அதே பகுதியை சேர்ந்த அவினேஷ் என்பவரை காவல் நிலைய வாசலில் ஓட ஓட வெட்டிக் கொன்ற வழக்கில் 9 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராணிப்பேட்டை காவல் துறை சார்பில் தினந்தோறும் சமூக வலைதளத்தில் விழிப்புணர்வு செய்தி வெளியிடப்படும். அதன்படி இன்று (ஆகஸ்ட் 12) வாகனம் ஓட்டும்போது தலைக்கவசம் அணிய வேண்டும் என விழிப்புணர்வு செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இதில், “பின் இருக்கையில் அமர்பவர்களும் ஹெல்மெட் அணிவது முக்கியம்” என்ற வாசகத்துடன் விழிப்புணர்வு செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அனைவருக்கும் ஷேர் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்துங்க.

ராணிப்பேட்டை மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். Mparivahan என்ற அரசு செயலியிலோ (அ) <
Sorry, no posts matched your criteria.