Ranipet

News January 3, 2025

ராணிப்பேட்டையில் மிதிவண்டி போட்டி

image

பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் இராணிப்பேட்டை மாவட்ட மாணவ, மாணவியர்கள் கலந்து கொள்ளும் வகையில் அறிஞர் அண்ணா நினைவு மிதிவண்டிப் போட்டி நாளை (04-01-2025) ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து காலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது. கலந்து கொள்ள விருப்பமுள்ள மாணவர்கள் சொந்த மிதி வண்டி எடுத்து வர வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News January 3, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (ஜன.3) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசாருக்கு, புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். மேலும் கண்ட்ரோல் ரூமிற்கு அழைக்கலாம் (9884098100).

News January 3, 2025

ராணிப்பேட்டையில் புதிய மாவட்ட எஸ்பி பதவியேற்பு

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த கிரண் ஸ்ருதி, சென்னை தீவிரவாத தடுப்பு பிரிவு மற்றும் தலைமையகம் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து, திருச்சி வடக்கு துணை ஆணையராக பணியாற்றி வந்த விவேகானந்தா சுக்லா ராணிப்பேட்டை மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக இன்று பதவி ஏற்று கொண்டார். இவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

News January 3, 2025

விழிப்புணர்வு பேரணி தொடங்கி வைத்தார் அமைச்சர்

image

ராணிப்பேட்டை புதிய பேருந்து நிலையம், திருவள்ளுவர் சிலை அருகில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் தமிழ் ஆட்சி மொழிச் சட்டவார விழா விழிப்புணர்வு பேரணியை அமைச்சர் காந்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்திரகலா, துணை இயக்குநர் தமிழ் வளர்ச்சித்துறை ஜெயஜோதி, நகரமன்றத் தலைவர் சுஜாதா வினோத், துணைத் தலைவர் ரமேஷ் கர்ணா, நகரமன்ற உறுப்பினர்கள், தமிழறிஞர்கள் மற்றும் பலர் உள்ளனர்.

News January 3, 2025

ராணிப்பேட்டையில் நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள்

image

மாதாந்திர மின்பராமரிப்பு காரணமாக அரக்கோணம், மோசூர், கீழ்குப்பம், கீழ்ப்பாக்கம், அம்மனூர், நேவல், மேல்பாக்கம், காவனூர், சோளிங்கர், கரிக்கல், பரவத்தூர், பாணாவரம், கொடைக்கல், புலிவலம், மோட்டூர், சோமசுமுத்திரம், காவேரிப்பாக்கம், வாலாஜா, முசிறி, ஒழுகூர், கரிவேடு ஆகிய பகுதிகளில் நாளை (ஜன.4) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News January 3, 2025

ஸ்க்ரப் டைபஸ் நோயை எப்படி தடுக்கலாம்

image

\▶உண்ணிகளிடமிருந்து கடிபடாமல் இருப்பதுதான் முதல் தற்காப்பு. ▶தலையணை, படுக்கை விரிப்புகளை சுத்தம் செய்ய வேண்டும். ▶வீட்டை சுற்றி புதார்கள் மண்டி இருந்தால், அதனை சுத்தம் செய்ய வேண்டும். ▶உண்ணிக்கொல்லி மருந்துகளை தெளிக்கலாம். ▶மலையேற்றத்துக்கு செல்லும்போது கொசு விரட்டி, உண்ணி விரட்டிகளை தேய்த்து கொள்ளுங்கள். ▶காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு ஏற்பட்டால் மருத்துவரை அணுகுங்கள். ஷேர் பண்ணுங்க

News January 3, 2025

‘ஸ்க்ரப் டைபஸ்’ நோய் வந்தால் என்ன ஆகும்

image

14 நாட்களில் காய்ச்சல், நடுக்கம், உடல் சோர்வு, உடல் வழி, இரும்பல் போன்றவை ஏற்படும். 2ஆவது வாரத்தில் நுரையீரல் தொற்று, நிமோனியா மற்றும் முளைக்கு தொற்று பரவி சுவாச செயலிழப்பு, கல்லீரலில் பாதிப்பு, மஞ்சள் காமாலை, மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும். கல்லீரல், சிறுநீரகம் போன்ற உறுப்புகள் செயலிழந்து, மரணமடையும் வாய்ப்பு 30% வரை உள்ளது. இது பிரச்னைக்குரிய காய்ச்சல் என்பதை மக்கள் உணர வேண்டும். ஷேர் பண்ணுங்க

News January 3, 2025

ராணிப்பேட்டை மக்களே இந்த அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை அணுகவும்

image

‘ஸ்கரப் டைபஸ்’ என்ற நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு, தடிப்புகள், உடல் அரிப்பு ஆகியவை முக்கிய அறிகுறிகளாக உள்ளது. ராணிப்பேட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களில் ‘ஸ்கரப் டைபஸ்’ நோய் பரவல் அதிரித்துள்ளது. விவசாயிகள், புதர்மண்டிய வனப்பகுதிகளுக்கு அருகில் வசிப்பவர்கள், மலையேற்றத்தில் ஈடுபடுபவர்கள், கர்ப்பிணிகள் ஆகியோருக்கு இந்த பாதிப்புகள் ஏற்படுபட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

News January 2, 2025

மாவட்ட விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு வேளாண் பொறியியல் துறை சார்பில் 2024-25ம் ஆண்டிற்கு அரசு மானியத்தில் கைபேசி மூலம் இயங்கும் தானியங்கி பம்ப் செட் கட்டுப்படுத்தும் கருவிகள் வழங்கப்பட உள்ளதாகவும், விருப்பமுள்ள விவசாயிகள் தங்கள் பகுதிகளில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தை அணுகலாம் எனவும் வாலாஜாவில் உள்ள உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை நேரில் அணுகலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News January 2, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ( ஜனவரி 2 ) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை ஆற்காடு சோளிங்கர் அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் : 9884098100

error: Content is protected !!