India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரக்கோணம் மங்கம்மாபேட்டை பகுதியை சேர்ந்த கந்தசாமி மகன் தேவன் (வயது 35). ரெயில்வே ஊழியர். இவர் இதே மார்கத்தில் மேம்பாலம் அருகே நேற்று காலையில் அந்த வழியாக சென்ற ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், தேவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (07.01.24) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சற்றுமுன் வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். கண்ட்ரோல் ரூம் எண்ணிற்கும் 9884098100 அழைக்கலாம்.
ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சார்பாக வெளியிட்டுள்ள விழிப்புணர்வு செய்தி குறிப்பில், வாகனம் ஓட்டுவதில் கவனம் செலுத்துங்கள். உங்கள் கவனத்தை 100% எப்போதும் வாகனம் ஓட்டுவதில் வைத்திருங்கள். வாகனம் ஓட்டும்போது உங்கள் தொலைபேசி அல்லது வேறு எந்த மின்னனு சாதனங்களை பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா மக்களிடம் இருந்து 313 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். மேலும் அவர் அரசு நலத் திட்ட உதவிகளை வழங்கினார். மனுக்களின் மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
கலவை வட்டம் மேலபழந்தை கிராமத்தில்ராதாகிருஷ்ணன் என்பவர் மனைவியுடன் பணம் கேட்டு சண்டை போட்டு, கோபத்தில் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து, கலவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின் அடுக்கம்பாறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இருக்கும் போது, இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ( ஜனவரி 6 ) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசாரை, புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் :9884098100
ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சார்பாக இன்று வெளியிட்ட அறிக்கையில், கொரியரில் உங்களது பெயரில் பார்சல் அனுப்பி இருப்பதாகவும், அதில் போதைப் பொருள் இருப்பதாகவும் கூறி, உங்களை காவல் அதிகாரியிடம் இணைப்பதாக கூறுவர், பின் காவல் அதிகாரி உங்களை டிஜிட்டல் அரெஸ்ட் செய்து இருப்பதாக மிரட்டி, உங்களிடமிருந்து பணத்தை பறிக்க வாய்ப்புள்ளதால், இது போன்ற மோசடி அழைப்புகளை நம்பி ஏமாற வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 2025 வரைவு வாக்காளர் பட்டியலை அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா வெளியிட்டார். அப்போது, மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், நேர்முக உதவியாளர் விஜயராகவன், கோட்டாட்சியர்கள் ராஜராஜன், வெங்கடேசன் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
2040ஆம் ஆண்டுக்குள் புதுமையான தொழில்நுட்பத்தை கொடுக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என சந்திராயன் 3 திட்ட இயக்குநா் வீரமுத்துவேல் தெரிவித்துள்ளார். ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பள்ளியில் நடைபெற்ற திருக்கு போட்டி பரிசளிப்பு விழாவில் அவர் கலந்து கொண்டார். பின் செய்தியாளா்களிடம் பேசிய அவர், PSLV60 விண்கலம் மூலம் , எதிா்காலத்தில் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்க முடியும் என்றாா்.
2040ஆம் ஆண்டுக்குள் புதுமையான தொழில்நுட்பத்தை கொடுக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என சந்திராயன் 3 திட்ட இயக்குநா் வீரமுத்துவேல் தெரிவித்துள்ளார். ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பள்ளியில் நடைபெற்ற திருக்கு போட்டி பரிசளிப்பு விழாவில் அவர் கலந்து கொண்டார். பின் செய்தியாளா்களிடம் பேசிய அவர், PSLV60 விண்கலம் மூலம் , எதிா்காலத்தில் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்க முடியும் என்றாா்.
Sorry, no posts matched your criteria.