Ranipet

News March 22, 2025

8 பிடிஓகள் பணியிட மாற்றம்; ஆட்சியர் உத்தரவு

image

அரக்கோணம் பிடிஓ பிரபாகரன் வாலாஜா கிராம ஊராட்சி பிடிஓவாகவும் அங்கு பணியாற்றிய சிவகுமார் நெமிலி கிராம பிடிஓவாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோன்று சோளிங்கர் பிடிஓ கிராம ஊராட்சி சித்ரா கலெக்டர் அலுவலக உதவி இயக்குனர் கண்காணிப்பாளராகவும் மாற்றப்பட்டுள்ளார். இதேபோன்று மாவட்டம் முழுவதும் 8 பிடிஓக்களை பணியிடம் மாற்றம் செய்து ஆட்சியர் சந்திரகலா நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

News March 22, 2025

கிராம சபை கூட்டம் ஒத்திவைப்பு: ராணிப்பேட்டை ஆட்சியர் 

image

ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு உட்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நாளை (மார்ச் 23ஆம் தேதி) சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்தப்படும் என்று மாவட்ட ஆட்சியர் சந்திரகலா அறிவித்திருந்தார். இந்நிலையில் சென்னை ஊரக வளர்ச்சி ஆணையரக உத்தரவின்படி கிராம சபை கூட்டம் அனைத்து ஊராட்சிகளிலும் மார்ச் 29ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும் என்று ஆட்சியர் சந்திரகலா நேற்று  தெரிவித்துள்ளார்.

News March 21, 2025

அரக்கோணம் வழியாக சென்ற ரயில்கள் தாமதம்

image

அரக்கோணத்தில் இருந்து சென்னை செல்லும் இருப்புப் பாதையில் புளியமங்கலம் ரயில்வே ஸ்டேஷன் அருகில் இன்று(மார்.21) மாலை திடீரென சிக்னல் கோளாறு ஏற்பட்டது. இது குறித்து ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் மற்றும் டெக்னிகல் பிரிவு ஊழியர்கள் அதிகாரிகள் அங்கு சென்று சிக்னல் கோளாறு சரி செய்தனர். இதனால் அரக்கோணத்தில் இருந்து சென்னை செல்லும் மின்சார ரயில்கள் 30 நிமிடம் கால தாமதமாக சென்றது.

News March 21, 2025

இராணிப்பேட்டையில் நாளை பள்ளிகள் செயல்படும்

image

இராணிப்பேட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இன்று(மார்.21) வெளியிட்டுள்ள சுற்று அறிக்கையில் இராணிப்பேட்டை மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து வகை அரசு / அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு நாளை (22.03.2025) முழு வேலை நாளாக செயல்பட அறிவிக்கப்படுவதாகவும், புதன் கிழமை கால அட்டவணை பின்பற்றப்பட வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க

News March 21, 2025

ஓட்டுநர், நடத்துநர் பணிக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

image

ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு இன்று (மார்.21) முதல் விண்ணப்பிக்கலாம். சென்னை மாநகர போக்குவரத்து கழகம் – 364, மாநில அரசு விரைவு போக்குவரத்து கழகம் – 318, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (விழுப்புரம்) – 322 பணியிடங்கள் உள்ளன. 24 வயது நிறைந்திருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத பேச தெரிந்திருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் கட்டாயம். <>லிங்க்<<>>

News March 21, 2025

ரணிப்பேட்டையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

image

மார்ச் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் வரும் 27ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தலைமையில் நடைபெற உள்ளது. இதில், ராணிப்பேட்டை மாவட்டத்தை சார்ந்த விவசாயிகள் கலந்துகொண்டு பொது பிரச்னைகளை கோரிக்கையாகவும், தனிநபர் பிரச்னைகளை மனுக்களாகவும் அளிக்கலாம்.

News March 21, 2025

வெப்ப அலை பரவல்: ஆட்சியர் அறிவுரை

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வெப்ப அலை பரவலிலிருந்து பாதுகாத்துக் கொள்வது குறித்த ஆயத்தக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று (மார்ச் 20) நடைபெற்றது. தமிழகத்தில் வெப்ப அலை பரவல் எதிரொலியாக காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும் என ராணிப்பேட்டை ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா அறிவுரை வழங்கினார்.

News March 20, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

இராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (மார்ச் 20) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. இராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம், ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்கள் தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் 9884098100.

News March 20, 2025

ரமலானை முன்னிட்டு சிறப்பு ரயில்

image

ரமலான் திருநாளை முன்னிட்டு சென்னை சென்ட்ரலிருந்து அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம் வழியாக போத்தனூர் வரை செல்லும் சிறப்பு ரயில் (06027) மார்ச் 30 இரவு 11.30 க்கு சென்னையில் இருந்து புறப்படும். மறு மார்க்கத்தில் போத்தனூரிலிருந்து சென்னைக்கு (06028) மார்ச்.31 காலை 8.20 க்கு புறப்படும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

News March 20, 2025

ராணிப்பேட்டை: பொதுமக்கள் பாதுகாத்துக் கொள்வது குறித்த கூட்டம்

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று வெப்ப அலை பரவலில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வது குறித்த கூட்டம் நடைபெற்றது. இதில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா, அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப்படை கமாண்டர் கபில், பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் ரூபி பாய் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!