India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (11.01.2025) ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா, இ.கா.ப., தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளின் நிலைகள் குறித்து அதிகாரிகளிடம் மாவட்ட எஸ்பி கேட்டறிந்தார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (ஜனவரி 11) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் 9884098100.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள் (டாஸ்மாக் கடைகள்), மற்றும் நட்சத்திர அந்தஸ்து ஓட்டலில் உள்ள மது கூடங்கள் அனைத்தும் வருகிற 15-ந் தேதி (புதன்கிழமை) திருவள்ளுவர் தினம் மற்றும் குடியரசு தினமான 26-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மூடவேண்டும். அன்றைய தினங்களில் மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சந்திரகலா உத்தரவிட்டுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (ஜனவரி 10) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு 9884098100 அழைக்கலாம்.
ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை இன்று வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்: சைபர் குற்றவாளிகள், வணிக நிறுவனங்களில் வியாபாரம் தொடர்பான பணப் பரிமாற்றம் மின்னஞ்சல் தகவல் தொடர்புகளை கண்காணித்து, இடைமறித்து அந்த தகவல்களைக் கொண்டு மோசடியாக வணிக நிறுவனங்களிடமிருந்து பணம் பறித்து வருகின்றனர். இதுபோன்ற அழைப்புகள் வந்தால் சைபர் குற்றப்பிரிவு, காவல் நிலையம் அல்லது 1930 தொடர்பு கொள்ள தெரிவித்துள்ளது.
காவேரிப்பாக்கம் அடுத்த திருப்பாற்கடலில் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு விழா நாளை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அங்கு முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகளை ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லாலா இன்று இரவு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ராணிப்பேட்டையில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை சற்றுமுன் வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் தொலைபேசி எண்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. புகைப்படத்தில் உள்ள எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் தெரிவிக்கலாம் அல்லது கண்ட்ரோல் ரூம் எண்ணிற்கும் 9884098100 அழைக்கலாம்.
அரக்கோணம், வட மாம்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் ‘யார் அந்த சார்’ என்ற ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்ச்சி அதிமுக சார்பில் இன்று நடைபெற்றது. இதில் ஒன்றிய செயலாளர்கள் பிரகாஷ் பழனி மங்கம்மா பேட்டை சத்யா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் அன்பரசு கலந்து கொண்டு, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ‘யார் அந்த சார்’ என்பவரை கண்டுபிடிக்க வேண்டும் என்றார்.
அரக்கோணம் ரயில் நிலையத்தில் நேற்று (ஜன.8) ரயில்வே போலீசார் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் பிளாட்பார்ம் எண் 2-ல் நின்று கொண்டிருந்த திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில் பொதுப் பெட்டியில் சுமார் 750 கிலோ ரேஷன் அரிசியை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். அதனை தொடர்ந்து ராணிப்பேட்டை வட்ட வழங்கல் துறை இடம் ஒப்படைக்கப்பட்டது. சிறப்பாக பணியாற்றிய ரயில்வே போலீசாருக்கு மூத்த அதிகாரிகள் பாராட்டினை தெரிவித்துள்ளனர்.
ராணிப்பேட்டை எடுத்த சிப்காட் அருகே பக்தர்களை ஏற்றி வந்த பேருந்து காய்கறி ஏற்றி வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 38 பேர் படுகாயம் அடைந்த நிலையில், சாலை ஓரம் கொட்டி கிடந்த சுமார் 16 டன் காய்கறிகளை மூட்டை மூட்டையாக பொதுமக்கள் அள்ளிச் சென்றனர்.
Sorry, no posts matched your criteria.