India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு குற்ற சம்பவம் அவர்களை தடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் சுமார் 664 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் பொதுமக்கள் அனைவரும் காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்கி மற்றவர்களுக்கு இடையூறு இல்லாத வகையில் பொங்கல் பண்டிகையை கொண்டாட மாவட்ட காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (ஜன.13) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசாருக்கு, புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். மேலும் கண்ட்ரோல் ரூமிற்கு அழைக்கலாம் (9884098100).
தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் பராமரிப்பு பணிகளுக்காக நாளை (ஜனவரி 14) தைப்பொங்கல் அன்று அரசு விடுமுறை என்பதால் சென்னை சென்ட்ரல் – அரக்கோணம், ஆகிய பகுதிகளில் ஞாயிறு தினத்திற்கான அட்டவணை முறையில் புறநகர் ரயில் சேவைகள் இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த ஆம்பூர் பேரூராட்சியில் பெரியார் சமத்துவபுரம் பகுதியில் சமத்துவ பொங்கல் விழா 2025 இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர் காந்தி மாவட்ட ஆட்சியர் சந்திரகலா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பொங்கல் வைத்து விழாவை கொண்டாடினர்.
சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பெண் நோயாளி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று காலை பெண்கள் வார்டுக்குள் அத்துமீறி புகுந்த ராணிப்பேட்டையைச் சேர்ந்த சதீஷ்குமார் தூங்கி கொண்டு இருந்த 50 வயது மிக்க ஒரு பெண் நோயாளியிடம் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
காவேரிப்பாக்கம் அடுத்த அவளூர் போலீசார், மாமண்டூர் பகுதியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமாக இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர் கர்நாடகா மது பாக்கெட்டுகளை கடத்தி வந்து சட்ட விரோதமாக விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. அவரை கைது செய்து, போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
போகி பாண்டியான இன்று வீட்டில் உள்ள பழைய பொருட்களை எரிப்பது வழக்கமாக உள்ளது. இதனால் கடும் காற்று மாசு ஏற்படுகிறது. இந்த போகிக்கு பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற பெயரில் துணி, பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பதை விட பிழையனவாம் கோவம், வெறுப்பு களைந்து புதியனவாம் அன்பு, பாசம் வளர்ப்போம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் :9884098100
சோளிங்கரில் உள்ள யோக ஸ்ரீ நரசிம்மர் கோவில் வளாகத்தில் உள்ள பிரம்ம தீர்த்தக் குளத்தில் இரவோடு இரவாக மர்மபர்கள் சிலர், கருப்பு நிற கிரானைட் கல்லால் ஆன 15 அடி உயர, பெருமாள் சிலையை நிறுவி பூஜை செய்தனர். இதையடுத்து, அனுமதியின்றி வைத்த இந்த சிலையை அதிகாரிகள், அகற்ற முயற்சித்த போது, மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சட்டம்-ஒழுங்கு பாதுகாக்கும் பொருட்டு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தேசிய இளைஞர்கள் தினத்தை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்டம், காவல்துறை சமூக வலைதளத்தில், தேசிய இளைஞர் தின வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளது. இந்த செய்தியில் “எழுந்திரு! விழித்திருந்து இலக்கை அடையும் வரை நிறுத்த வேண்டாம். உங்களுக்கு தேசிய இளைஞர் தின வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.