India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ( ஜனவரி 16 ) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை ஆற்காடு சோளிங்கர் அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசாரின் தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம்: 9884098100
ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சார்பாக சமூக வலைதளத்தில் இன்று வெளியிட்டுள்ள எச்சரிக்கை செய்தியில், வேலை நேர்காணலுக்கு வைப்புத்தொகை அல்லது கட்டணம் தேவையில்லை. தேவையில்லாத மோசடிகளில் ஈடுபட்டு உங்கள் பணத்தை இழக்க வேண்டாம் என்று மாவட்ட காவல்துறை சார்பாக சமூக வலைத்தளத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர். இதுகுறித்த புகார்கள் மற்றும் மேலும் விவரங்களுக்கு சைபர் கிரைம் 1930 ஐ அழைக்கவும்.
தொழிற்பாதுகாப்பு படையில் புதிதாக 2,050 பணியிடங்கள் சேர்க்கப்படுகின்றன. புதிய ரிசர்வ் பட்டாலியன் அமைப்பதற்கான இடத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான ஏற்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் பல்வேறு மாநிலங்களில் இருந்து தொழிற்பாதுகாப்பு படைக்கு தேர்வு செய்யப்பட்ட 1500 பெண்கள் மற்றும் 500 ஆண்கள் பயிற்சிக்காக நேற்று அரக்கோணம் மத்திய தொழிற்பாதுகாப்பு படை பயிற்சி மையத்திற்கு வந்தனர்.
ஆற்காடு டவுன் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் (வயது 52) என்பவர் அரசு மது பாட்டில்ளை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட அரசு மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (ஜன.15) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசாருக்கு, புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். மேலும் கண்ட்ரோல் ரூமிற்கு அழைக்கலாம் (9884098100).
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று அனைத்து விதமான இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, இன்றைய தினம் ஆடு, கோழி போன்ற இறைச்சிகளை விற்பனை செய்யக்கூடாது. இறைச்சி கடைகளை திறந்து வைக்கவும் கூடாது. மீறி செயல்படுபவர்களின் மீது பொது சுகாதாரச் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் தினத்தை முன்னிட்டு, இன்று ஜன.15 ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மதுபான சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் பார்கள்) மற்றும் தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) ஆகியவைகளின் கீழ் உள்ள அனைத்து டாஸ்மாக் (FL1) மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்களும் இயங்காது. மீறி விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மது பிரியர்களுக்கு ஷேர் பண்ணுங்க
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (ஜன.14) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசாருக்கு, புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். மேலும் கண்ட்ரோல் ரூமிற்கு அழைக்கலாம் (9884098100).
தமிழின் முன்னணி செய்தி நிறுவனமான Way2News Appல் ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் செய்தியாளராக விருப்பமுள்ளவர்கள்,<
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்த சுக்லா உத்தரவின் பேரில், வருகிற 16-ந் தேதி வரை ராணிப்பேட்டை மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. குற்ற சம்பவங்களை தடுக்க 5 நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள், 10 நான்கு சக்கர வாகனங்கள், 55 இரு சக்கர வாகனங்கள் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்படுகின்றன.
Sorry, no posts matched your criteria.