India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் மக்கள் நலன் காக்கும் உதவி எண்கள் வெளியிட்டுள்ளனர். அதில் குறிப்பாக குழந்தைகளுக்கான உதவி எண் 1098, பெண்களுக்கான உதவி எண் 181, அவசர உதவி 100, சைபர் குற்றங்கள் உதவி எண் 1930 ஆகிய எண்கள் 24 மணி நேரமும் செயல்படும் என்று மாவட்ட காவல்துறை வெளியிடப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை இளைஞர்களே, தமிழக காவல்துறையில் ( Police Constables, Jail Warders & Firemen) காலியாக உள்ள 3,644 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18- 31 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.18,200 முதல் ரூ.67,100 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <

ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 28-ந் தேதி காலை 11 மணி அளவில் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடக்க உள்ளது. எனவே ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் பிரச்சினைகளை களைந்திட கூட்டத்தில் கலந்து கொண்டு பொதுப்பிரச்சினைகளை கோரிக்கை வாயிலாகவும், தனிநபர் பிரச்சினைகளை மக்கள் வாயிலாகவும் தெரிவிக்கலாம் என கலெக்டர் சந்திரகலா தெரிவித்தார்.

ராணிப்பேட்டை நகரில் இன்று (ஆகஸ்ட் 22) வட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் 8ஆம் வகுப்பு முதல் இளநிலை, பொறியியல் பட்டதாரி வரை கலந்து கொள்ளலாம். <

இராணிப்பேட்டை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் உள்ள பணியிட எழுத்துத் தேர்விற்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு தொடங்கப்பட உள்ளது. எனவே இத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் https://forms.gle/L5W420Mnu7BKjo9FA Google link மூலம் தங்களது விவரங்களை பதிவு செய்து இவ்வகுப்பில் கலந்து கொள்ளலாம்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்துள்ள ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு, காவேரிப்பாக்கம், அரக்கோணம், வாலாஜா, திமிரி ஆகிய இடங்களில் இன்று (ஆகஸ்ட்-22) நடக்கிறது. இந்த முகாமில், பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களின் குறைகளை மனுவாக வழங்கலாம். குறிப்பாக, மகளிர் உதவித்தொகை பெற முடியாத பெண்கள் முகாமில் விண்ணப்பிக்கலாம். உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ( ஆகஸ்ட் -21) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் :9884098100.

ராணிப்பேட்டை: BANK OF MAHARASHTRA வங்கியில் நிரந்திர பணியாளராக பணி செய்ய ஒரு வாய்ப்பு. அதன்படி ஏதேனும் ஒரு டிகிரி முடித்து 22வயதுக்கு மேல் உள்ளவர்கள் இந்த பணிக்கு ஆகஸ்ட் 30க்குள் இந்த <

ராணிப்பேட்டைமாவட்டத்தில் கம்பு, கேழ்வாகு, துவரை, பச்சைப்பயறு, உளுந்து, நிலக்கடலை மற்றும் கரும்பு ஆகிய பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கென மாநில அளவில் விளைச்சல் போட்டி நடக்கிறது. இப்போட்டிக்கு விண்ணப்பிப்பதற்கு கடைசி நாள் 15.03.2026. இதுதொடர்பான கூடுதல் தகவலுக்கு வட்டார வேளாண் விரிவாக்க மையத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். என மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை காவல்துறை தினம்தோறும் சமூக வலைதளத்தில் விழிப்புணர்வு செய்தி வெளியிடப்படும். அதன்படி இன்று வெளியிடப்பட்ட விழிப்புணர்வு செய்தியில் மக்களின் போதைப்பொருள் பயன்பாட்டில் இருந்து விடுபட விழிப்புணர் செய்தி வெளியிடப்பட்டது, இதில் போதையை தவிர்த்து வளமான மகிழ்ச்சி பாதையில் நடப்போம். போதை ஒழியட்டும் பாதை ஒளிரட்டும் என்ற வாசகத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.
Sorry, no posts matched your criteria.