India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பனப்பாக்கம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் தனியார் அரசு இ-சேவை மையம் இயங்கி வருகிறது. இந்த இ-சேவை மையத்தில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா இன்று பார்வையிட்டு திடீர் ஆய்வு செய்தார். அப்போது இ-சேவை மையத்தில் விண்ணப்பதாரர்களிடம் ஒவ்வொரு மனுவுக்கும் எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை செய்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் கஞ்சா, குட்கா, போதைப்பொருள் விற்பனை, கள்ள சந்தையில் மது, கள்ளச்சாராயம் விற்பனை, லாட்டரி காட்டன் சூதாட்டம், மணல் கடத்தல் போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் தொடர்பான தகவல்களை வாட்ஸ் அப் எண் 8903990359 மூலமாக தெரிவிக்கலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (ஜனவரி 21) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர் அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசாரின் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் :9884098100.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு கண்காணிப்பு குழு கூட்டம் இன்று நடைபெற்றது. ஆட்சியர் சந்திரகலா தலைமை வகித்தார். தொழிலாளர் நலன் உதவி ஆணையர் வரதராஜன் மற்றும் அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மாவட்டத்தில் எங்கும் குழந்தை தொழிலாளர் முறை இருக்கக் கூடாது, அதை அனைத்து துறைகளும் கண்காணிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
சோளிங்கர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அக்கச்சிக்குப்பம் ஜானகபுரம் பகுதியில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் சமுதாய நீர் சேகரிப்பு குளம் வெட்டும் பணி நடந்து வருகிறது. இந்த பணியை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது ஆட்சியர் சந்திரகலா இந்த பணியில் எத்தனை தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு குறைந்தபட்ச கூலியாவது தினமும் வழங்கப்படுகிறதா என்று கேட்டறிந்தார்.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் சந்திரகலா இன்று வாலாஜாபேட்டை வன்னிவேடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களின் கற்றல் மற்றும் அறிவுத் திறன் குறித்து ஆய்வு செய்தார். உடன் முதன்மை கல்வி அலுவலர் சரஸ்வதி, வட்டாட்சியர் அருள் செல்வம், தலைமையாசிரியர் பவானி மற்றும் ஆசிரியர்கள் உள்ளனர்.
ராணிப்பேட்டை காவல்துறை சார்பாக இன்று (ஜனவரி 21) வெளியிடப்பட்ட விழிப்புணர்வு செய்தியில் “தமிழக காவல்துறையால் பெண்களின் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்ட “காவல் உதவி” கைபேசி செயலியை பதிவிறக்கம்செய்ய விரைவுக் குறியீட்டினை ஸ்கேன் செய்யவும்.” செயவியை பதிவிறக்கம் செய்து இன்றே உங்கள் பாதுகாப்பினை உறுதி செய்யுங்கள் என செய்தி வெளியிடப்பட்டது.
ஆற்காடு நகராட்சி அலுவலகத்தில் குப்பை சேகரிக்கும் பேட்டரி வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதில் ஒரு வாகனத்தில் நேற்று இரவு திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. வாகனத்தின் அடிப்பகுதி முழுவதுமாக தீப்பற்றி எரிந்த நிலையில் அதனை கண்ட ஊழியர்கள், தீயணைப்பான் கருவி மற்றும் தண்ணீரை பயன்படுத்தி தீயை அணைத்தனர். வாகனம் திடீரென தீப்பற்றி எரிந்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ராணிப்பேட்டை அருகே அவரக்கரை பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 68). இவர் அடிக்கடி நெஞ்சு வலியால் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது வீட்டிற்கு பின்னால் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராணிப்பேட்டை காவல்துறை சார்பாக இன்று (ஜனவரி 20) வெளியிடப்பட்ட விழிப்புணர்வு செய்தியில் “இயந்திர உதவிக்குறிப்புகள் பயன்படுத்துதல் உங்கள் பின்னை ரகசியமாக உள்ளிடவும். தொகையை செலுத்தும் முன் இருமுறை சரிபார்க்கவும். உங்கள் பின்னை ஒருபோதும் கடைக்காரர் அல்லது பணியாளரிடம் பகிர வேண்டாம்” என செய்தி வெளியிடப்பட்டது.
Sorry, no posts matched your criteria.