India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் ஜனவரி 31-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறுவதாக இருந்தது. நிர்வாக காரணங்களுக்காக இந்த கூட்டம் ஜனவரி 29-ந் தேதி (புதன்கிழமை) காலை 11 மணிக்கு நடை பெறும் என ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.
நெல்வாய் கிராமத்தைச் சேர்ந்த சூர்யா என்கிற தமிழரசன் கடந்த 16ஆம் தேதி பெட்ரோல் ஊற்றி உயிரோடு தீ வைத்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் யாதவர் சங்கத்தினர் இன்று நெமிலி பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் மற்றும் வருவாய் துறையினர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொது விநியோக திட்டம் சார்பில் சிறப்பு முகாம் நாளை (25ம் தேதி) அந்தந்த வட்ட வழங்கல் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இம்முகாமில் மின்னணு குடும்ப அட்டையில் முகவரி மாற்றம், பெயர் திருத்தம், பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கல், செல்போன் எண் மாற்றம், புதிய ரேஷன் அட்டை போன்றவை மாற்றம் இருப்பின் இந்த சிறப்பு முகாமில் மனு செய்து பயன்பெறலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜன.24 இன்று காலை 10.00 மணி அளவில் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் பல முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்துகொள்ள உள்ளதால் வேலை தேடுபவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். இந்த முகாமில் பங்குபெற கட்டணம் ஏதும் தேவையில்லை, 8 வகுப்பு முதல் பட்டப்படிப்பு முடித்தவர் வரை அனைவரும் கலந்துகொள்ளலாம்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (ஜன.,23) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசாருக்கு, புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். மேலும் கண்ட்ரோல் ரூமிற்கு அழைக்கலாம் (9884098100).
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு லட்சுமி நரசிம்மர் சுவாமி திருக்கோவிலில் பக்தர்களின் வசதிக்காக ரோப் கார் சேவை செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில், மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக வரும் ஜனவரி 27 மற்றும் 28 ஆகிய இரு தினங்களுக்கு ரோப் கார் சேவை ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சார்பாக இன்று (ஜனவரி 23) சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட செய்தியில் குற்றங்களை தடுப்பதற்கும் குற்றவாளிகளை எளிதில் அடையாளம் காணவும் CCTV camera மிகவும் அவசியமானது ஒன்றாகும், சிசிடிவி கேமரா பொருத்தவும், பாதுகாப்பாக இருப்போம் என்று மாவட்ட காவல்துறை சார்பாக வலைதளத்தில் செய்தி வெளியிட்டுள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 31-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11 மணி அளவில் ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகள் தெரிவிக்கும் குறைகளுக்கு பதிலளிக்க உள்ளனர் .எனவே மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொள்ள ராணிப்பேட்டை கலெக்டர் சந்திரகலா தெரிவித்துள்ளார்
நெமிலியை அடுத்த நெல்வாய் கிராமத்தைச் சேர்ந்த தமிழரசன், கடந்த 16ம் தேதி இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் பெட்ரோல் வீசி எரிக்கப்பட்டு படுகாயம் அடைந்தார். தொடர்ந்து, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வட்டம் கீழ்வீதி ஊராட்சியில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கீழ்வீதி ஊராட்சியில் “நிறைந்தது மனம்” என்ற நிகழ்ச்சியின் வாயிலாக மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் பயனடைந்து வரும் பயனாளிகளை நேரில் சந்தித்து திட்டத்தின் பயன் குறித்து கேட்டறிந்ததாக தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.