Ranipet

News August 26, 2025

இராணிப்பேட்டை: 21 நன்மை கிடைக்க இப்படி பண்ணுங்க.!

image

இராணிப்பேட்டை மக்களே.. விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகரை வழிபடுவதால் நமக்கு 21 நன்மைகள் நடக்கும் என்று நம்பப்படுகிறது. தர்மம், பொருள், இன்பம், செளபாக்கியம், கல்வி, பெருந்தன்மை, மோட்ஷம், முக லட்சணம், வெற்றி, அன்பு,நட்பு,சாந்தம்,பில்லி சூனியம் நீங்குதல் உள்ளிட்ட 21 நன்மைகள் கிடைப்பதாக சொல்லப்படுகிறது. களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகரை வழிபட்டால் இன்னமும் சிறப்பாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.Share.

News August 26, 2025

இராணிப்பேட்: அடிப்படை பிரச்சனைக்கு உடனே தீர்வு

image

இராணிப்பேட்டை மக்களே.. நீங்க வசிக்கிற இடத்தில் தெரு விளக்கு, மின்சாரம், மருத்துவமனை, கழிவுநீர், குடிநீர் பிரச்னை, சாலை சேதம் தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் பிரச்னை இருக்கிறதா? கவலை வேண்டாம்.உங்கள் மாவட்டம்,ஊர் பெயருடன் சேர்த்து நீங்கள் வசிக்கும் பதியில் என்ன பிரச்னை என்ன என்பதை போட்டோவுடன் இந்த <>*லிங்கை<<>> கிளிக் செய்து பதிவிட்டால் போதும். பேரிடர் மேலாண்மை துறை உடனடி நடவடிக்கை எடுக்கும். Share பண்ணுங்க.!

News August 26, 2025

ராணிப்பேட்டை: 196 இடங்களில் விநாயகர் சிலை வைக்க அனுமதி

image

விநாயகர் சதுர்த்தி பண்டிகை முன்னேற்பாடு பாதுகாப்பு பணிகள் குறித்து ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், 2-வது கட்ட ஆய்வுக் கூட்டம் நேற்று (ஆக.25) நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் சந்திரகலா தலைமை தாங்கினார். கூட்டத்தில், ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் விநாயகர் சிலை வைத்து வழிபட மொத்தம் 196 இடங்களில் சிலை வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

News August 26, 2025

ராணிப்பேட்டையில் துவக்கி வைத்த அமைச்சர்

image

மயிலாப்பூரில் உள்ள புனித சூசையப்பர் தொடக்கப் பள்ளியில் காலை 8.30 மணியளவில் காலை உணவு திட்டத்தை விரிவாக்கம் செய்து முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். அதை தொடர்ந்து ராணிப்பேட்டை, வி.ஆர்.வி அரசு உதவி பெறும் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி துவக்கி வைத்தார். பின், மாணவர்களுடன் காலை உணவை உட்கொண்டார்.

News August 26, 2025

ராணிப்பேட்டையில் வேலை

image

ராணிப்பேட்டை இளஞ்சிறார் நீதிக்குழுமத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு மாத ஊதியம் ரூ.11,916 வழங்கப்படவுள்ளது. இதற்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் நேரில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், விபரங்களுக்கு 04172-299347 என்ற எண்ணை அழைக்கவும்.

News August 26, 2025

ராணிப்பேட்டை: B.E, B.Sc படித்தவர்களுக்கு அரசு வேலை

image

சென்னை உயர்நீதிமன்றத்தில் தொழில்நுட்ப பிரிவில் காலியாக உள்ள உதவி புரோகிராமர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.E, B.Sc,BCA, MCA,M.Sc படித்த 18 வயது முதல் 37 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.35,900-1,31,500 வரை வழங்கப்படும். இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு நடத்தப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இந்த லிங்கில்<<>> வரும் செ.9-க்குள் விண்ணப்பிக்கலாம். (SHARE)

News August 26, 2025

ராணிப்பேட்டை: முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி

image

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (ஆக.26) தொடங்குகிறது. ராணிப்பேட்டையில் உள்ள பல்வேறு மைதானத்தில் போட்டி நடைபெறுகிறது. இதில் கைப்பந்து போட்டி, கால்பந்து, மேசைப்பந்து, கூடைப்பந்து, இறகுப்பந்து, சிலம்பம், நீச்சல், கபடி, தடகளம், கேரம் பல்வேறு போட்டிகள் நடைபெற உள்ளது .

News August 26, 2025

உங்களுடன் ஸ்டாலின் முகாம் அறிவிப்பு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வரும் 28.08.2025 அன்று நடைபெற உள்ளது. இம்முகாம் மேல்விசாரம் நகராட்சி சார்பில் அண்ணாசாலை, மேல்விஷாரம், இஸ்லாமியா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ளது. இதில் பொதுமக்கள் தங்களது குறைகள், மனுக்கள் மற்றும் கோரிக்கைகளை நேரடியாக பெற்றுக்கொண்டு விரைவான தீர்வுகள் காண இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

News August 25, 2025

ராணிப்பேட்டை: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் இன்று (ஆக.25) இரவு 11 மணி முதல் நாளை காலை 7 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரியின் எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News August 25, 2025

இராணிபேட்டை மக்களே.. லஞ்சம் கேட்டால் இத பண்ணுங்க.!

image

இராணிப்பேட்டை மக்களே.. சாதி, வருவாய், குடியிருப்பு மற்றும் மதிப்பீடு சான்றிதழ் வாங்குவதற்கு, பட்டா மாற்றம், சிட்டா உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்காக நாம் கண்டிப்பாக ஒரு முறையாவது தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றிருப்போம். அங்கு இவற்றை முறையாக செய்யாமல் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்புத் துறையில் (044-27667070) என்ற எண்ணில் புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்கள்.

error: Content is protected !!