Ranipet

News January 29, 2025

ராணிப்பேட்டையில் பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம்

image

இன்று (29.01.2025) இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் ராணிப்பேட்டை சேர்ந்த அப்பகுதி மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு தங்கள் குறைகளை மனுக்கள் வாயிலாகவும் நேரடியாகவும் தெரிவித்தனர்.

News January 29, 2025

விழிப்புணர்வு பேரணி தொடக்கம்

image

ராணிப்பேட்டை மாவட்டம் இன்று வாலாஜா அறிஞர் அண்ணா அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மகாத்மா காந்தியடிகளின் நினைவு தினம் மற்றும் உலக தொழுநோய் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு ஸ்பர்ஸ் தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். உடன் துணை இயக்குநர் பீரித்தா, மாவட்ட சுகாதார அலுவலர் செந்தில்குமார், வருவாய் கோட்டாட்சியர் இராஜராஜன் இருந்தனர்.

News January 29, 2025

பாம்பு கடித்து மூதாட்டி உயிரிழப்பு

image

காவேரிப்பாக்கம் அருகே உள்ள சேரி கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன் மனைவி ஆண்டாள் 70. இவர் நேற்று தனது வீட்டின் அருகில் இருந்த போது அவரை விஷப்பாம்பு கடித்து வாயில் நுரை தள்ளி கீழே விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை கொண்டு சென்ற நிலையில் இன்று ஆண்டாள் உயிரிழந்துள்ளார்.

News January 29, 2025

மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கு திறன் வளர் பயிற்சி

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பினிஷிங் ஸ்கூல் எனும் குறுகியகால திறன் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு வழங்கும் திட்டம் நிறுவப்பட்டுள்ளதாகவும், கல்வி சான்றிதழ்களுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் பிப்.3ம் தேதிக்குள் நேரில் வந்து இணையவழி மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும் என ராணிப்பேட்டை கலெக்டர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.

News January 29, 2025

திருமால்பூரில் ஆற்றுக்கால்வாயில் முதியவர் பிணம்

image

திருமால்பூர் கிராமத்தில் உள்ள ஆற்றுக்கால்வாயில் முதியவர் ஒருவர் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விசாரணையில் பிணமாக கிடந்த முதியவர், கீழ்வெண்பாக்கம் காலனி பகுதியை சேர்ந்த அன்னியான் என்பது தெரியவந்தது. மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 28, 2025

5 பேர் குண்டர் சட்டத்தில் கைது: ஆட்சியர் உத்தரவு

image

நெல்வாய் கிராமத்தை சேர்ந்த தமிழரசன் கடந்த 16ஆம் தேதி பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்டார். இதையடுத்து கடந்த 22ம் தேதி சிகிச்சை பலனின்றி சென்னையில் இறந்தார். இந்த வழக்கில் பிரேம்குமார், வெங்கடேசன், மணிகண்டன், சதீஷ்குமார், நவீன் ஆகிய 5 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்பி விவேகானந்த சுக்லா ஆட்சியர் சந்திரகலாவுக்கு பரிந்துரை செய்தார். ஆட்சியர் உத்தரவின் பேரில் 5 பேரும் குண்டாஸில் கைது செய்யப்பட்டனர்.

News January 28, 2025

வேலை தேடும் இளைஞர்களுக்கு மொபைல் செயலி

image

வேலை தேடும் இளைஞர்கள் தற்போதைய தொழில்துறை தேவைகளுக்கு ஏற்ப திறன் மேம்பாட்டு படிப்புகளை அணுகுவதற்கும் அதில் சேருவதற்கும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் TN Skill App என்ற செயலி தொடங்கப்பட்டுள்ளது. வேலை தேடும் இளைஞர்கள் இந்த செயலியை பயன்படுத்தி பிடித்த துறையில் வேலையில் சேர்ந்து வருமானம் ஈட்டி பயன் அடையுமாறு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News January 28, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (ஜனவரி 28) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசாரை புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் 9884098100.

News January 28, 2025

கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்

image

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலைக்கல்லூரி வளாகத்திற்கு முன்பாக பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், யு.ஜி.சி. அமைப்பு பரிந்துரையின்படி மாத ஊதியம் ரூ.57,300 வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

News January 28, 2025

நாளை விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம்

image

ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் ஜனவரி மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் 29ம் தேதி (நாளை) காலை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறும் என கலெக்டர் சந்திரகலா தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சார்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு பொது பிரச்னைகளை கோரிக்கை வாயிலாகவும், தனிநபர் பிரச்னைகளை மனுக்களாக அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!