India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராணிப்பேட்டை, 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பல்வண்ண விளக்குகளால் அழகுபடுத்தப்பட்டது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் செய்யப்பட்ட இந்த ஒளி அலங்காரம், இரவு நேரத்தில் அலுவலகத்திற்கு சிறப்புத் தந்தது. சுதந்திர தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்த அலங்கார ஏற்பாடு, மாவட்டம் முழுவதும் விழா சூழலை ஏற்படுத்தி, மக்களில் கொண்டாட்ட உணர்வை பரவச் செய்தது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட்14) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் 9884098100 என்றும் தெரிவித்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், (ஆகஸ்ட் 15) அன்று நாட்டின் 79 ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, மாவட்டத்தில் பாதுகாப்புப் பணிக்காக 615 போலீசார் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால் இன்று தெரிவித்துள்ளார். மேலும் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால் தெரிவித்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் திமுக மேற்கு ஒன்றிய பொருளாளரும், ஒன்றிய குழு உறுப்பினருமான பாலன் இயற்கை எய்தினார். இதையடுத்து அவரது உடலுக்கு கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஆர்.காந்தி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி குடும்பத்தினரிடம் ஆறுதல் தெரிவித்தார். இந்நிகழ்வில் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர்.
ராணிப்பேட்டை மாவட்டம், இன்று (ஆகஸ்ட் 15) நாட்டின் 79 ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, மாவட்டத்தில் பாதுகாப்புப் பணிக்காக 615 போலீசார் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால் தெரிவித்துள்ளார். மேலும் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால் தெரிவித்தார்.
ராணிப்பேட்டை மக்களே, தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு Any டிகிரி போதும், சம்பளம் ரூ.72,000 வழங்கப்படும். எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 20.08.2025 தேதிக்குள் <
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலான ஆய்வுக் கூட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா, உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்பட்ட மனுக்களின் நிலை, நலன் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் பயன்பாடு மற்றும் மாவட்டத்திலுள்ள முகாம்களின் செயல்பாடுகள் குறித்து விளக்கினார். இந்த அறிக்கை, பொதுமக்களின் கோரிக்கைகள் மற்றும் நலத் திட்டங்களின் முன்னேற்றங்களை எடுத்துக்காட்டுகிறது.
ராணிப்பேட்டை காவல்துறை இன்று வெளியிட்ட விழிப்புணர்வுச் செய்தியில், குழந்தைகளுக்கு `குட் டச், பேட் டச்’ குறித்து கற்பிக்க வலியுறுத்தியுள்ளது. முக்கியமாக, மகள்களுக்கு மட்டுமல்லாமல் மகன்களுக்கும் இந்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. குழந்தைகளுக்குப் பாதுகாப்பு தேவைப்படும்போது உதவ, குழந்தைகள் உதவி எண் 1098 தொடர்புகொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது. \
ராணிப்பேட்டை காவல்துறை இன்று வெளியிட்ட விழிப்புணர்வுச் செய்தியில், குழந்தைகளுக்கு `குட் டச், பேட் டச்’ குறித்து கற்பிக்க வலியுறுத்தியுள்ளது. முக்கியமாக, மகள்களுக்கு மட்டுமல்லாமல் மகன்களுக்கும் இந்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. குழந்தைகளுக்குப் பாதுகாப்பு தேவைப்படும்போது உதவ, குழந்தைகள் உதவி எண் 1098 தொடர்புகொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது. \
சென்னை உயர்நீதிமன்றத்தில் தொழில்நுட்ப பிரிவில் உள்ள 41 உதவி புரோகிராமர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.Sc, BCA, MCA, M.Sc படித்த 18 வயது முதல் 37 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.35,900-1,31,500 வரை வழங்கப்படும். இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு நடத்தப்படும். விருப்பமுள்ளவர்கள் இந்த <
Sorry, no posts matched your criteria.