India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை(02.09.2025) உங்களுடன் ஸ்டாலின் முகாம் மேல்விசாரம், வாலாஜா, ஆற்காடு, திமிறி பகுதிகளில் நடைபெற உள்ளது. முகாம் விபரங்களை இங்கு <

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த மாற்றுத்திறனாளிகளிடமிருந்து நேரடியாக சென்று என்ன பிரச்சனை என கேட்டு புகார் மனுக்களை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா பெற்று நடவடிக்கை எடுக்க துறை சார்ந்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

ராணிப்பேட்டை மக்களே, எல்லைப் பாதுகாப்பு படையில் கம்யூனிகேஷன் பிரிவில் உள்ள 1,121 (ரேடியோ அப்ரேட்டர், ரேடியோ மெக்கானிக்) காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இப்பணிக்கு 12-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஐடிஐ தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். ரூ.25,500 முதல் ரூ.81,700 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <

ராணிப்பேட்டை மக்களே எதிர்பாராத நேரங்களில் வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டரில் எல்பிஜி (LPG) கசிவு ஏற்பட்டால், 1906 என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைக்கவும். இது இந்தியன் ஆயில், ஹெச்பிசி போன்ற அனைத்து எல்பிஜி நிறுவனங்களுக்கும் பொதுவான அவசர உதவி எண் ஆகும். வேறு எதேனும் உதவி தேவைப்பட்டால் 1800 233 3555 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். (கேஸ் சிலிண்டர் வைத்துள்ளோருக்கு SHARE பண்ணுங்க)

மண்புழு உரம் உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக, விவசாயிகளுக்கு 50% மானியத்தில் உரப்படுக்கைகள் வழங்கப்படுகின்றன. விவசாயிகள் தங்கள் சொந்த செலவில் மண்புழு உரம் தயாரிக்கத் தேவையான பொருட்களை வாங்கி, அதற்கான பட்டியலை சமர்ப்பித்தால், ரூ.1,500 மானியமாகப் பெற்றுக்கொள்ளலாம். கூடுதல் தகவல்களுக்கு, உங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலரையோ அல்லது உழவன் செயலியையோ அணுகலாம். ஷேர் பண்ணுங்க.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் (ஆகஸ்ட் -31) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது ராணிப்பேட்டை ஆற்காடு சோளிங்கர் அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் :9884098100.

ராணிப்பேட்டை பெண்களே! கலைஞர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பித்து 1000 வரலையா..? உங்க விண்ணப்ப படிவம் என்னாச்சுன்னு தெரியலையா?? கவலையை விடுங்க இங்கு <

ராணிப்பேட்டை:மழை காலம் தொடங்கி விட்ட நிலையில், கனமழையின் காரணமாக மின்மாற்றி, மின்கம்பம் சேதம் ஏற்பட்டு உங்க ஏரியாவில் மின்தடை ஏற்பட்டால் புகாரளிக்க மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. உங்கள் செல்போனில் <

முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ▶️ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. ▶️2 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. ▶️இதற்கு குடும்ப வருமானம் ரூ.1,20,000க்கு மிகாமல் இருக்க வேண்டும். ▶️இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க. <<17569927>>(தொடர்ச்சி)<<>>

இத்திட்டத்தில் பயன்பெற குடும்பத்தில் 1 பெண் குழந்தை (அ) 2 பெண் குழந்தைகள் மட்டுமே இருக்க வேண்டும். ஆண் குழந்தை இருக்கக் கூடாது. பெற்றோரில் ஒருவர் 40 வயதிற்குள் குடும்ப நல அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும். மேலும், வருமானச் சான்றிதழ், பெண்குழந்தைக்கான பிறப்புச் சான்றிதழ், கருத்தடை சான்றிதழ், ஆண் குழந்தை இல்லை என்பதற்கான சான்றிதழ் போன்ற ஆவணங்கள் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். (SHARE)
Sorry, no posts matched your criteria.