India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா தலைமையில் பொதுமக்கள் குறைத்தீர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் 46 மனுக்கள் பெறப்பட்டன. கூட்டத்தில் ஏடிஎஸ்பி குணசீலன், டிஎஸ்பி ரமேஷ் ராஜ் மற்றும் போலீசார் உடன் இருந்தனர். மனுக்கள் சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களுக்கு அனுப்பி விரைந்து நடவடிக்கை எடுக்க காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் போலீஸ் ஸ்டேஷன் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் முக்கிய குற்றவாளியான தமிழரசனை இன்று தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவரை போலீசார் பிடிக்க முயன்ற போது தப்பி ஓடியதில் அவரது கை, கால் எலும்பு முறிந்ததாக ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலப்புலம் கிராமத்தில் நபார்டு திட்டத்தின் கீழ் அரக்கோணத்தில் இருந்து ஓச்சேரி செல்லும் சாலையில் உத்திரம்பட்டு பகுதியில் தார் சாலை அமைக்கும் பணி முடிவுற்றது. இங்கு ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா இன்று தரப்பரி சோதனை செய்தார். அப்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர், நெமிலி வட்டாட்சியர் வட்டார வளர்ச்சி அலுவலர், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் உடன் இருந்தனர்.
ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சார்பாக இன்று (பிப்ரவரி 5) சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சாலையின் ஓரங்களில் அமைக்கப்பட்டுள்ள நடைபாதையில் நடைபாதையில் நடப்பது பாதுகாப்பானது என ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சார்பாக பொது மக்களுக்கு விழிப்புணர்வு செய்தி வெளியிடப்பட்டது. பொதுமக்களாகிய நீங்கள் சாலை விதிகளை பின்பற்றி நடக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. ஷேர் செய்யுங்கள்.
பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட்டில் உள்ள இன்ஜினியர், மேற்பார்வையாளர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இன்ஜினியரிங் டிரைய்னி – 150, மேற்பார்வையாளர் டிரைய்னி – 250 என மொத்தம் 400 பணியிடங்கள் உள்ளன. 27 வயது உடைய முதுகலை பட்டம் முடித்தவர்கள் வரும் 28ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஏப்ரல் 11, 12, 13 தேதிகளில் தேர்வு நடைபெறும். சம்பளம் ரூ.30,000 முதல் ரூ.1,60,000 வரை வழங்கப்படும்.<
அரிசி கடை மற்றும் சிப்காட் போலீஸ் ஸ்டேஷன் மீது நேற்று நள்ளிரவு இருவர் பெட்ரோல் குண்டு வீசினர். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள எஸ் பி அலுவலக செய்தி குறிப்பில் குற்றவாளி ஒருவர் தன் மீதும், தன் தந்தை மீதும், நண்பர்கள் மீதும் போலீஸ் வழக்கு பதிவு செய்த ஆத்திரத்தில் பழி வாங்கவே இரு இடங்களில் பெட்ரோல் குண்டு வீசி உள்ளனர் என நேற்று தெரிவித்துள்ளனர்.
சிப்காட் போலீஸ் ஸ்டேஷன் மீது நேற்று நள்ளிரவில் இருவர் பெட்ரோல் குண்டு வீசினர். இது தொடர்பாக ஹரி என்பவரை போலீசார் பிடிக்கும் முயன்ற போது சப்இன்ஸ்பெக்டர் முத்தீஸ்வரனை கத்தியால் ஒருவர் தாக்க முயன்றார். தற்காப்புக்காக போலீஸ் சுட்டதில் அரி என்பவர் காயமடைந்தார். இந்நிலையில் காயமடைந்த அரியை வாலாஜா அரசு மருத்துவமனையில் போலீசார் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்களை போலீசார் தேடி வந்த நிலையில் சிப்காட் பகுதியைச் சேர்ந்த ஹரி என்ற வாலிபரை காவேரிப்பாக்கம் பகுதியில் தனிப்படை போலீசார் பிடிக்க முயன்ற போது, உதவி ஆய்வாளர் முத்தீஸ்வரனை, ஹரி கத்தியால் தாக்க முயற்சித்துள்ளார். தற்காப்புக்காக போலீசார் ஹரியை காலில் சுட்டு பிடித்தனர். வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ( பிப்ரவரி 3 ) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் 9884098100.
ராணிப்பேட்டை சிப்காட் காவல்நிலையத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் பெட்ரோல் வெடிகுண்டு வீசிவிட்டு தப்பியோடியதாக ஊடகங்களில் வெளியாகி இருக்கும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டிய காவலர்களுக்கே பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கிய திமுக அரசின் அலட்சியம் கடும் கண்டனத்திற்குரியது என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.