India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகிலுள்ள மின்னல் ஊராட்சி நியாய விலை கடையில் பொருட்களின் தரம் மற்றும் இருப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் சந்திரகலா திடீர் ஆய்வு நடத்தினார். பொதுமக்களுக்கு தரமான மற்றும் சரியான அளவில் பொருட்கள் வழங்கப்படுகிறதா என பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. முறைகேடு நடந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது.

இராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (03.09.2025) இரவு, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய காவல்துறை தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ராணிப்பேட்டை, அரக்கோணம், வாலாஜா, ஆற்காடு உட்பட 18 காவல் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அவசர உதவிக்கு 9884098100 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம் என காவல்துறை தெரிவித்துள்ளது.

ராணிப்பேட்டை ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா இன்று (03.09.2025) அரக்கோணம் ஊராட்சி ஒன்றியம், புதுகேசாவரம் ஊராட்சிக்குட்பட்ட மாந்தோப்பு கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டார். இந்த கிராமத்தில் 30 வருடங்களாக வசித்து வரும் 100 குடும்பங்களின் பயன்பாட்டிற்காக, சீதாராமன் மற்றும் கன்னிகம்மாள் என்ற இருவர் தங்கள் நிலத்தை சாலையாக தானமாக வழங்கியுள்ளனர். இவர்களது சமூகப்பணியை ஆட்சியர் பாராட்டினார்.

ராணிப்பேட்டை மாவட்டம், புதுகேசாவரம் ஊராட்சி மாந்தோப்பு கிராமத்தில் 100 குடும்பங்களின் நீண்டகால கோரிக்கையான சாலை வசதி நிறைவேற்றப்பட்டது. இதற்கு இரண்டு நில உரிமையாளர்கள் 15 சென்ட் நிலத்தை தானமாக வழங்கினர். அரசுக்கு கிடைத்த இந்த நிலத்தில், ‘நமக்கு நாமே’ திட்டத்தின் கீழ் 8.62 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலையை ஆட்சியர் சந்திரகலா திறந்து வைத்தார்.

ராணிப்பேட்டை மக்களே, ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை <

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு மருத்துவ குணம் கொண்ட சிவன் சம்பா ரக நெல் விதைகள் மானிய விலையில் வேளாண்மைத்துறை சார்பில் விற்பனைக்கு ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு 2,000 கிலோ அளவில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே உற்பத்தியை அதிகப்படுத்த விதை விநியோகத்துக்கு 50 சதவீதம் மானிய விலையில் கிலோவுக்கு ரூ.35 என்ற விலையில் கிடைக்கும். என கலெக்டர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை மக்களே, ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை <

ராணிப்பேட்டையில் ஊரக வளர்ச்சி துறையில் ஓட்டுநர், அலுவலக உதவியாளர், எழுத்தர், இரவு காவலர் பணிகளுக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 8, 10-ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க செப்.30 கடைசி ஆகும். ஊதியமாக ரூ.15,700 முதல் ரூ.71,900 வழங்கப்படும். விண்ணப்பிக்க <

சொந்த வீடு என்பது ஒரு குடும்பத்தின் ஆயுள் கனவு. அதன் விலை எட்டாத உயரத்தில் உள்ளதால் பலருக்கும் அது இன்று வரை எட்டாத கனவாக உள்ளது. இதை மாற்ற ஒரு வழி இருக்கு ராணிப்பேட்டை மக்களே, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக அரசு மானிய விலையில் வீடுகள் வழங்குகிறது. ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம், சொத்து இல்லாதவர்கள் <

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த தாளிக்கல் கிராமத்தில் குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழந்தனர். அமுதன் (10) சுதன் (8) உள்ளிட்ட 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சிறுவர்களை சடலங்களை மீட்டனர். மேலும், இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.