India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அரசு போட்டித்தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வரப்படுகிறது. இந்நிலையில் இங்கு வரும் செப்.9, 13, மற்றும் 20 ஆகிய தேதிகளில் காலை 10 மணிக்கு மாதிரி தேர்வுகள் நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்பும் நபர்கள் 04172- 291400 எண்ணை அழைத்து தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ராணிப்பேட்டை மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். (SHARE பண்ணுங்க)

ராணிப்பேட்டை மக்களே புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியுமா? ஆம், <

ராணிப்பேட்டை மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். (SHARE பண்ணுங்க)

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (செப்.07) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது ராணிப்பேட்டை ஆற்காடு சோளிங்கர் அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் :9884098100

ராணிப்பேட்டை மாவட்டத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) சார்பில், போர்க் லிப்ட் ஆப்ரேட்டர் பயிற்சி வழங்கப்பட உள்ளது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 முதல் 35 வயது வரை உள்ளவர்கள், www.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட ஆட்சியர் சந்திரகலா ஐ.ஏ.எஸ் தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இன்று (செப்.6) 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கான நேர்காணல் நடைபெற்றது. நேர்காணலில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பணியாற்றத் தேவையான பயிற்சி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சி, மருத்துவ சேவைகளை வலுப்படுத்த உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில், இன்று (செப்.6) “தமிழ்நாடு காவலர் தினம்” கொண்டாடப்பட்டது. தமிழக முதல்வர் பிறப்பித்த அரசாணையின்படி கொண்டாடப்பட்ட இந்தத் தினத்தை முன்னிட்டு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால், ராணிப்பேட்டை போக்குவரத்து காவல் நிலையத்தில் அமைந்துள்ள நினைவுத்தூணில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து, காவலர் தின உறுதிமொழியை அனைவரும் எடுத்துக்கொண்டனர்.

ராணிபேட்டை மக்களே கொய்யா, பப்பாளி, எலுமிச்சை உள்ளிட்ட செடிகள், தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை மற்றும் கீரை விதை அடங்கிய காய்கறி விதை தொகுப்பு இலவசமாக வழங்கப்படுகிறது. இதை விவசாயிகள்,பொது மக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். விண்ணபிக்க இங்கே <

சோளிங்கர் அருள்மிகு லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயிலில், செப்.7 அன்று நடைபெற உள்ள சந்திர கிரகணத்தை முன்னிட்டு, மாலை 4 மணிக்கு யோக நரசிம்மர் மற்றும் யோக ஆஞ்சநேயர் ஆலயங்களின் நடைகள் சாத்தப்படும். அதே சமயம், ஊர்கோவில் மாலை 5 மணிக்கு நடை சாத்தப்படும் என்றும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. செப்.8 அன்று வழக்கம் போல் நடை திறக்கப்பட்டு பூஜைகள் மற்றும் தரிசனங்கள் நடைபெறும்
Sorry, no posts matched your criteria.