India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (பிப்.,12) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசாருக்கு, புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். மேலும் கண்ட்ரோல் ரூமிற்கு அழைக்கலாம் (9884098100).
ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சார்பாக சமூக வலைத்தளத்தில், பெண்கள் பாதுகாப்பாக இருக்க “காவல் உதவி” செயலி உள்ளதை குறிபிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. தமிழ்நாடு காவல்துறையால் உருவாக்கப்பட்ட “காவல் உதவி” கைபேசி செயலியை பதிவிறக்கம் செய்யவும் என்று மாவட்ட காவல்துறை பெண்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. அவசர காலங்களில், உதவிக்கு இந்த செயலியை பயன்படுத்தலாம். இதை உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.
சோளிங்கர் வட்டம் மருதாலம் கூட்ரோடு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 273 பயனாளிகளுக்கு ரூ.1.03 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா வழங்கினார். இந்நிகழ்வில், சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் முனிரத்தினம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் டிப்ளமோ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு. மார்க்கெட்டிங் பிரிவில் இருக்கும் 234 ஜூனியர் நிர்வாகி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பல்வேறு பிரிவுகளில் பொறியியல் டிப்ளமோ முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம். ரூ.30,000 முதல் ரூ.1,20,000 வரை சம்பளம் வழங்கப்படும். ஷேர் பண்ணுங்க
துணை மின் நிலையங்களில் நாளை (பிப்.13) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் ரத்து செய்யப்படுகிறது. நாளை (பிப்.13)சேந்தமங்கலம், திருமால்பூர், எஸ்.கொளத்தூர், கணபதிபுரம்,மாம்பாக்கம், வாழைப்பந்தல், வேம்பி, தோணிமேடு, செங்கணவரம், புன்னை, நெமிலி, மேல்களத்தூர், மேலேரி, காட்டுப்பாக்கம், தக்கோலம் அனந்தபுரம், சேந்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை ஏற்படும்
அமெரிக்க தலைநகர் நியூயார்க்கிலிருந்து வெளியாகும் ‘சி.இ.ஓ வேர்ல்ட்’ இதழில் சர்வதேச அளவில் சிறந்து விளங்கும் மருத்துவக் கல்லூரிகள் தரவரிசைப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சி.எம்.சி., கல்லூரிக்கு 46வது இடம், சென்னை எம்.எம்.சி., 60வது இடத்தையும், புதுச்சேரி ஜிப்மர் 55 வது இடத்தையும் பிடித்துள்ளன. முதலிடத்தில் அமெரிக்காவின் ஹார்வர்டு மருத்துவக்கல்லூரி உள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (பிப்ரவரி 11) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் தொலைபேசி எண்கள், மேலே உள்ள புகைப்படத்தில் உள்ளன. அவற்றை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம்: 9884098100
ஜார்க்கண்ட் மாநிலம் tata நகரில் இருந்து அரக்கோணம் வழியாக எர்ணாகுளம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை பெரம்பூரில் இருந்து அரக்கோணம் வரும் வழியில் சென்னை சிறப்பு குற்ற புலனாய்வு பிரிவு ரயில்வே போலீசார் இன்று சோதனை செய்தனர். அப்போது, 4 பைகளில், 25 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து காஞ்சிபுரம் போதை பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதன் மதிப்பு ரூ.12.50 லட்சம் என்று தெரிவித்தனர்.
முன்னாள் படை வீரர்கள், அவர்தம் கைம்பெண்களின் நலனுக்காக முதல்வரின் காக்கும் கரங்கள் என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. திட்டம் குறித்து ராணிப்பேட்டை அனைத்து முன்னாள் படை வீரர்கள், சங்க நிர்வாகிகள் மற்றும் சார்ந்தோர்களுக்கு எடுத்துரைத்து ஊக்குவிக்க பிப்.12ஆம் தேதி காலை 10.30 மணி அளவில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கூட்டம் நடைபெறுகிறது என ஆட்சியர் சந்திரகலா இன்று தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை காவல்துறை சார்பாக சமூக வலைத்தளங்களில் தினமும் விழிப்புணர்வு செய்தி வெளியிடப்படும். அதன்படி இன்று பிப்ரவரி -11 வெளியிடப்பட்ட விழிப்புணர்வு செய்தியில் ” பெரும்பாலான விபத்துக்கள் கவனக்குறைவின் காரணமாகவே ஏற்படுகின்றன. ஓட்டும்போது கைபேசி உபயோகிப்பதை தவிர்க்கவும்” என்று தெரிவிக்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.