India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரக்கோணம் டவுன் தனிப்பிரிவு காவலராக ராஜேஷ், தக்கோலம் தனிப்பிரிவு காவலராக கவியரசன், பாணாவரம் தனிப்பிரிவு காவலராக ராஜ் கமல் ஆகியோரை நியமனம் செய்து ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். அரக்கோணம் டவுன் தனிப்பிரிவு காவலராக பணியாற்றி வந்த சிவகுமார் ஆற்காடு தாலுகா போலீஸ் ஸ்டேஷனுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு இயக்க மேலாண்மை அலகு சார்பில் போதைப் பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள்நடமாட்டம் குறித்து தங்களுடைய சுயவிபரங்கள் இன்றி புகார் செய்வதற்கு, DRUG FREE TN என்ற அலைபேசி செயலியை (Mobile App) பதிவிறக்கம் செய்யுங்கள் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (பிப்ரவரி 13) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் தொடர்பு எண் மேலே உள்ள புகைப்படத்தில் உள்ளது. மேலும், உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் – 9884098100
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா, எஸ்.பி விவேகானந்த சுக்லா ஆகியோர் இன்று அரசு தலைமை செயலாளர் முருகானந்தம் தலைமையில் நடைபெற்ற காணொளி காட்சி வாயிலான ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போது, ராணிப்பேட்டை மாவட்டத்தில், அனைத்து துறை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து தலைமைச் செயலாளர் கேட்டறிந்தார். ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில் மத்திய தொழில் பாதுகாப்பு படைக்கு(CISF) CONSTABLE/DRIVER AND
CONSTABLE/DRIVER-CUM-PUMP OPERATOR (DRIVER FOR FIRE SERVICES) பணிக்காக அறிவிப்பு வெளியிட்டுள்ளது அதிக அளவிலான ஆட்கள் தேவைப்படுவதால் தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்து பயனடையுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது Website : https://cisfrectt.cisf.gov.in/
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பழங்குடியின இளைஞர்களை ஒருங்கிணைத்து பிப்ரவரி.15 காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ராணிப்பேட்டை மாவட்டம் ஆட்சியர் கூட்ட அரங்கில் திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான தேர்வு செய்யும் பணிகள் நடைபெறுகிறது. ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த பழங்குடியின இளைஞர்கள் கலந்து கொள்ளலாம் என்று ஆட்சியர் சந்திரகலா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் கோல் இந்தியா நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 434 மேனேஜ்மெண்ட் டிரைய்னி பணியிடங்கள் உள்ளன. கணினி வழி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ரூ.50,000 – ரூ.1,60,000 வரை சம்பளம் வழங்கப்படும். 1 வருட பயிற்சிக்கு பின்னர் ரூ.60,000 – ரூ.1,80,000 வரை சம்பளம் நிர்ணயிக்கப்படும். நாளைக்குள் (பிப்.14) <
அம்மூர் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (52). ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பா.ம.க. முன்னாள் செயலாளர். அரசு வேலை வாங்கித்தருவதாக, வஞ்சூர் கிராமத்தை சேர்ந்த சிவக்குமாரிடம் ரூ.8 லட்சத்தை வாங்கியதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம், பணத்தை திருப்பி கேட்ட சிவக்குமாரை தாக்கியதாக முன்னாள் ராணிப்பேட்டை மாவட்ட பா.ம.க. செயலாளர் சரவணனை போலீசார் கைது செய்தனர்.
இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் நேற்று 12.02.2025 தேதி வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா, தலைமையில் நடைபெற்றது. இக்குறைதீர்வு கூட்டத்தில் பொதுமக்களிடம் மொத்தமாக 26 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்கள்.
காவேரிப்பாக்கம் அடுத்த பாகவெளி கிராமம் சின்ன தெருவை சேர்ந்தவர் நாராயணன். இவரது இளைய மகன் தணிகைவேல் (36).நேற்று தணிகைவேல் விவசாய வேலைக்காக நிலத்திற்கு சென்றுள்ளார். அப்போது விவசாய நிலத்தில் மின்சாரம் ஒயர் அறுந்து கிடந்துள்ளது. இதை கவனிக்காமல் சென்ற தணிகைவேல் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.