India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ( செப் -09) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது ராணிப்பேட்டை ஆற்காடு சோளிங்கர் அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் 9884098100

இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்திரகலா இன்று ஆற்காடு ஊராட்சி ஒன்றியம், தாஜ்புரா ஊராட்சி MN மஹாலில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமினை பார்வையிட்டு உடனடி தீர்வு காணப்பட்ட மனுக்கள் மீது பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். உடன் துணை ஆட்சியர் கீதாலட்சுமி, வட்டாட்சியர்கள் மகாலட்சுமி, நடராஜன், ஊராட்சி மன்றத் தலைவர் லட்சுமி சேட்டு மற்றும் பலர் உள்ளனர்.

பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற இராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த 9 ஆசிரியர்கள் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தியை இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்திரகலா மாவட்ட கல்வி அலுவலர் பிரேமலதா கலந்து கொண்டனர்.

ராணிப்பேட்டை மாவட்டம், விஷாரம் பகுதியில் தனியார் பெட்ரோல் பங்கில் வேலை செய்த சரவணன் விஷாரம் குளத்து மேட்டு பகுதியில் உள்ள பூங்காவில் மது அருந்தி, போதையில் குளத்தில் விழுந்து உயிரிழந்தார். ஆற்காடு நகர போலீசார் உடலை மீது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தவெக தலைவர் விஜய், சமீபத்தில் மதுரையில் நடைபெற்ற மாநாட்டில், தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்திக்க உள்ளதாக அறிவித்தார். அதன்படி தனது முதல் அரசியல் பிரச்சார பயணத்தை 13/09/25 திருச்சியில் தொடங்கிறார். இதைதொடர்ந்து, தி.மலை, விழுப்புரம் அதன் பின் ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு 18/10/25 அன்று வருகை தந்து, மக்களிடையே கலந்துரையாட உள்ளார்.

ராணிப்பேட்டை தேங்கா பாலாற்றங்கரை அருகில் அமைந்துள்ள அரசுக்கு சொந்தமான தென்பெண்ணை அருகே காதல் ஜோடிகள் தனிமையில் பேசிக் கொண்டிருந்தனர் அப்போது 3 பேர் அவர்களை வழிமறித்து காதலனைத் தாக்கி பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்தனர். பாதிக்கப்பட்ட பெண் உறவினர்கள் உதவியுடன் சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பெயரில் இமயவர்மன் தலைமையில் தனிப்படை அமைத்து 3பேரையும் கண்டுபிடித்து கைது செய்தனர்.

1. இங்கு <
2. உங்கள் பெயர், கல்வித்தகுதி, இமெயில் ஐடி பதிவு செய்யுங்க.
3.பின்னர் LOGIN செய்து உங்கள் ஆவணங்களை Upload பண்ணுங்க..
4. கல்வி சான்றிதழ்களை பதிவு செய்யுங்க.. இனி வேலை வாய்ப்பு தகவல்கள் உங்க போனுக்கே வரும்..
(குறிப்பு: டிகிரி முடித்தவர்கள் மட்டுமல்ல 8 – 12ம் வகுப்பு படித்தவர்களுக்கும் தான்) SHARE பண்ணுங்க.

மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே 9498794987என்ற பிரத்யேக TNEB சேவை எண் பயன்பாட்டில் உள்ளது . இதன்மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE

ராணிப்பேட்டை மக்களே மத்திய அரசின் பவர்கிரிட் கார்ப்ரேஷன் நிறுவனம், (கள பொறியாளர்) போல பதவிகளுக்கு 1,543 காலிப்பணியிடங்கள் அறிவித்துள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க 18வயதுக்கு மேல் இருந்து ENGINEERING அல்லது DILPLOMO ELECTRICAL முடித்திருக்க வேண்டும். எழுத்து வடிவில் தேர்வும் உண்டு இந்த பணிக்கு 1,20,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் <

ராணிப்பேட்டை மக்களே ஆதார் உடன் பான் கார்டு இணைக்கவில்லை (அ) ஆதாரில் எதும் மாற்றம் செய்திருந்தாலோ உங்கள் பான்கார்டு DEACTIVATE ஆக வாய்ப்புள்ளது. <
Sorry, no posts matched your criteria.