Ranipet

News February 17, 2025

கள்ளச்சாராயம் மற்றும் குட்கா விற்பனையை தடுக்க ஆலோசனை

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வை துறை கூட்டம் இன்று நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். மாவட்ட முழுவதும் கள்ளச்சாராயம் மற்றும் குட்கா விற்பனையை தடுக்க வேண்டும் என்று ஆட்சியர் தெரிவித்தார்.

News February 17, 2025

கேந்திர வித்யாலயா பள்ளிக்கு இமெயில் வெடிகுண்டு மிரட்டல்

image

அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானதளத்தில் கேந்திர வித்யாலயா பள்ளி இயங்கி வருகிறது இப்பள்ளிக்கு இன்று இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் வந்தது அதைத் தொடர்ந்து அரக்கோணம் டவுன் இன்ஸ்பெக்டர் தங்க குருநாதன் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினார். மேலும். வெடிகுண்டுகளை கண்டறிந்து செயலிழக்க செய்யும் நிபுணர்கள் உள்ளே சென்று அங்குலம் அங்குலமாக சோதனை செய்து வருகின்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

News February 17, 2025

சீமானுக்கு ராணிப்பேட்டை போலீசார் சம்மன்

image

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த சில நாட்களுக்கு முன்னர் செய்தியாளர் சந்திப்பின் போது பெரியார் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பெரியார் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மற்றும் திமுக சார்பில் காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டுமென சீமானுக்கு ராணிப்பேட்டை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

News February 17, 2025

எல்லை சாலைகள் அமைப்பில் 411 காலிப்பணியிடங்கள்

image

மத்திய அரசின் எல்லை சாலைகள் அமைப்பில் (BRO) உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சமையல்காரர், கொத்தனார், கொல்லன், மெஸ் வெய்டர் உள்ளிட்ட 411 பணியிடங்கள் உள்ளான. ரூ.5,200 முதல் ரூ.20,200 வரை சம்பளம் வழங்கப்படும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆர்வமும் தகுதியும் உள்ள ஆண்கள் இந்த காலிப்பணியிடங்களுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். 18-25 வயதுடையவர்களாக இருக்க வேண்டும். <>ஷேர் செய்யுங்கள்<<>>

News February 17, 2025

கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது

image

அரக்கோணம் டவுன் போலீசார் வின்டர்பேட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். போலீசார் வருவதை கண்டு அங்கிருந்து தப்பியோட முயன்ற 2 பேரை மடக்கி பிடித்து விசாரித்தனர். இதில் அதே பகுதியை சேர்ந்த துரைராஜ் (23) மற்றும் முத்துவைரம் (25) என்பதும் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. பின்னர் அவர்களிடம் இருந்து சுமார் 1 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 16, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (பிப்ரவரி 16) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசாரின் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் : 9884098100.

News February 16, 2025

மருத்துவரின் மனைவிக்கு 6 மாதம் சிறை தண்டனை

image

வாலாஜா அடுத்த தென்கடப்பந்தங்கலைச் சேர்ந்த மருத்துவர் ஜெயக்குமாரின் மனைவி உமாதேவி, சங்கர்கணேஷ் என்பவரிடம் 2021ஆம் ஆண்டு ரூ.7 லட்சம் கடனாக பெற்றார். கடனுக்காக வங்கி காசோலையை உமாதேவி, வழங்கியுள்ளார். வங்கி கணக்கில் பணம் இல்லாததால் காசோலை திரும்பி வந்துவிட்டதால் தன்னை ஏமாற்றி மோசடி செய்ததாக சங்கர் கணேஷ் வழக்கு தொடுத்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், உமா தேவிக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்தது.

News February 16, 2025

மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் வேலை

image

பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் துணை ராணுவத்தின் ஒரு பிரிவான மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை (CISF) கீழ் காலியாக உள்ள கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். டிரைவர் மற்றும் பம்ப ஆப்பரேட்டர் பிரிவில் 1,124 காலிப்பணியிடங்கள் உள்ளன. 10ஆம் வகுப்பு தகுதி போதுமானது. தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை மாத சம்பளம் வழங்கப்படும். வரும் மார்ச் 4ஆம் தேதிக்குள்<> விண்ணப்பிக்கலாம்.<<>>

News February 16, 2025

நடிகர் யோகி பாபு சென்ற கார் விபத்து

image

வாலாஜாபேட்டை சுங்கச்சாவடியில் அதிகாலை நடிகர் யோகி பாபு சென்ற கார் விபத்தில் சிக்கியதில் எவ்வித காயங்களும் இன்றி உயிர்தப்பினார். சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலை 3 மணி அளவில், பெங்களூரு நோக்கி நடிகர் யோகி பாபு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது வாலாஜாபேட்டை சுங்கச்சாவடியை கடந்த போது, திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து நெடுஞ்சாலை நடுவே உள்ள தடுப்பு மீது ஏறி விபத்துக்குள்ளானது.

News February 16, 2025

முரம்பு மண் கடத்தியவர் கைது லாரி பறிமுதல்

image

சோளிங்கர் சப் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் கருமாரியம்மன் கோயில் அருகில் இன்று மாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியை நிறுத்தி மடக்கி சோதனை இட்டதில், அரசு அனுமதி இன்றி முரம்பு மண் கடத்திச் செல்வது தெரிந்தது. போலீசார் லாரியை பறிமுதல் செய்து, சாணமல்லூர் கிராமத்தை சேர்ந்த டிரைவர் வெங்கடேசன் என்பவரை கைது செய்தனர்.

error: Content is protected !!