India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்டத்தில் அனைத்து துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் திட்டங்கள் முன்னேற்றங்கள் குறித்தும் காலதாமதங்கள் குறித்தும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மரியம் பல்லவி பல்தேவ் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
ராணிப்பேட்டை காரை அரசினர் ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதியில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மரியம் பல்லவி பல்தேவ் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சியர் சந்திரகலா, கோட்டாட்சியர் ராஜராஜன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் அறிவுடையநம்பி மற்றும் பலர் உடன் இருந்தனர்.
வாலாஜா நகராட்சிக்குட்பட்ட அரசு தொடக்கப் பள்ளியில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாணவர்களுடன் காலை உணவு சாப்பிட்டு பார்த்து உணவின் தரத்தை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா இன்று ஆய்வு செய்தார். அப்போது மாணவர்களுடன் ஆட்சியர் கலந்துரையாடியது மாணவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் காலை உணவு திட்டத்தில் நிறை குறைகளை அவர் கேட்டறிந்தார்.
வாலாஜா நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள பூங்காவை உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா இன்று காலை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது நகராட்சி தலைவர் ஹரிணி தில்லை, வாலாஜா வட்டாட்சியர் அருள் செல்வம் நகராட்சி ஆணையாளர் இளையராணி, பொறியாளர் சண்முகம் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை நடைபெற உள்ளது. எனவே விருப்பமும் உள்ளவர்கள் காலை 10 மணி அளவில் எண்.9 ஆற்காடு சாலை, பழைய BSNL அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு வழிகாட்டும் மையத்துக்கு நேரில் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 04172-291400 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம் என கலெக்டர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ஜெ.யு. சந்திரகலா, நேற்று (19.02.2025) “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்ட முகாமில் வாலாஜா வட்டம், அனந்தலை கிராமத்தில் பண்டித மாளவியா அரசு நிதி உதவி நடுநிலைப்பள்ளியில் இயங்கி வரும் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுடன் அமர்ந்து குழந்தைகளின் வருகை பதிவேடு, எடை குறைவான ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள குழந்தைகளின் விவரங்கள் குறித்து கேட்டறிந்தார்.
ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு 2 நபர்களுக்கு பசுமை சாம்பியன் விருது மற்றும் தலா ரூ.1 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது. மேலே கூறப்பட்ட விருதுக்கு விண்ணப்பிக்க வேண்டிய படிவம் https://tnpcb.gov.in என்ற இணையதளத்தில் உள்ளது.மாவட்ட கலெக்டரிடம் பசுமை சாம்பியன் விருதுக்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசி தேதி 15.4.25 என கலெக்டர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் சார்பில் ஓவிய போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்த ஓவியம் அமைதல் வேண்டும். ஓவியங்களை தெளிவான முறையில் புகைப்படம் எடுத்து https://docs.google.com/forms/d/e/1FAIpQLSd1m8yjtK7zMl7ndKkt0H5lpaht46LF7T_FaWyg92lpiufDIw/viewform என்ற link-ல் உள்ள படிவத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ( பிப்ரவரி 19) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது ராணிப்பேட்டை ஆற்காடு சோளிங்கர் அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் :9884098100.
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் வாலாஜா தாலுகாவுக்கு உட்பட்ட அனந்தலை கிராமத்தில் இன்று ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா விவசாயிகளுக்கு கால்நடை ஊட்டச்சத்து பொருட்களை வழங்கினார். அப்போது கால்நடை உதவி இயக்குனர் திருநாவுக்கரசு, ஊராட்சி மன்ற தலைவர் தேவகி உடனிருந்தனர். கால்நடைகளுக்கு தடுப்பூசிகள் போட வேண்டும் என்று ஆட்சியர் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.