India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மகளிர் சுய உதவி குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களான அழகு சாதனங்கள், பொம்மை வகைகள், பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை விருப்ப கண்காட்சி மூலம், ராணிப்பேட்டை எம்.எல்.ஏ அலுவலகம் பின்புறம் உள்ள சந்தை வளாகத்தில் பிப்ரவரி.28 முதல் மார்ச் 3ம் தேதி வரை பொது மக்களுக்கு சரியான விலையில் விற்பனை செய்யலாம் என்று ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பின்படி, மக்களுடன் முதல்வர் முகாம் பேஸ் 3 வாலாஜா, ஆற்காடு மற்றும் திமிரி வட்டாரத்துக்குட்பட்ட கிராமங்களில் மார்ச் 4 ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 15 துறைகளை ஒருங்கிணைத்து இந்த முகாம் நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் மனுக்களை கொடுத்து பயனடையலாம் என்று தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (பிப்ரவரி 26) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் 9884098100.
ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே இன்று மாவட்ட புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் தமிழகத்தில் பட்டியல் இன மக்களுக்கும், பெண்களுக்கும் பாதுகாப்பு வேண்டி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புரட்சி பாரதம் கட்சியின் ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
ராணிப்பேட்டை காவல்துறை இன்று (பிப்ரவரி -26)வெளியிடப்பட்ட விழிப்புணர்வு செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது: சாலையில் சாகசம் செய்வது பெரும் விபத்துக்கு வழி வகுக்கும். மித வேகத்தில் செல்வோம். பாதுகாப்பான பயணம் மேற்கொள்வோம். சாலை பாதுகாப்பு, நம் உயிர் பாதுகாப்பு என மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது.
நங்கமங்கலம் கிராமம் எம்.ஜிஆர் நகரில் பழைய பிளாஸ்டிக் குடோன் அமைந்துள்ளது. இந்த குடோனில் நேற்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து அவளூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தகரக் குப்பத்தில் புதிதாக துணை சுகாதார நிலையம் தொடங்கப்பட்டது. இந்த சுகாதார நிலையத்தில் குடிபோதையில் வாலிபர் ஒருவர் நேற்று ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து ரகளை செய்தார். இதுகுறித்து செவிலியர் ஒருவர் வாலாஜா போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிந்து, ஜன்னல் கண்ணாடியை உடைத்த அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவரை கைது செய்தனர்.
ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா பரிந்துரையின் பேரில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி அஸ்வின், வழிப்பறி குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் யஸ்வந்த், சந்தோஷ் ஆகியோர்கள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் நேற்று (25.02.2025) அடைக்கப்பட்டார்கள்.
ஐபேடு தனியார் தொழிற்சாலை அருகில் நேற்று இரவு இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இதில் கோவிந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த தங்கராஜ் அவரது ஒன்பது வயது மகன் கோகுல் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சோளிங்கர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கட்டளை கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் இவருக்கு சொந்தமான பசுமாடு அங்குள்ள காலி இடத்தில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக சென்ற மின் கம்பி அறுந்து கீழே விழுந்தது. இது தெரியாமல் பசுமாடு அந்த மின்கம்பியை மிதித்து உயிரிழந்தது. இது குறித்து கால்நடை மற்றும் வருவாய் துறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. துறை அதிகாரிகள் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.
Sorry, no posts matched your criteria.