Ranipet

News March 4, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சற்றுமுன் வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். கண்ட்ரோல் ரூம் எண்ணிற்கும் 9884098100 அழைக்கலாம்.

News March 4, 2025

ராணிப்பேட்டை மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் எச்சரிக்கை

image

பாணாவரத்தில் குட்கா விற்பனை செய்த கடைக்கு மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் சுதாகர் இன்று போலீஸ் முன்னிலையில் சீல் வைத்தார். மேலும் அந்த கடைக்கு ரூபாய் 25000 அபராதம் விதித்தார். அதுமட்டுமின்றி தொடர்ந்து குட்கா விற்பனை செய்யும் கடை உரிமையாளருக்கு சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உணவு பாதுகாப்பு அலுவலர் எச்சரிக்கை செய்தார்.

News March 4, 2025

குழந்தை திருமணம் புகார் குறித்து உடனுக்குடன் FIR – ஆட்சியர்

image

ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ் துறையின் மாதாந்திர ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சந்திரகலா கலந்து கொண்டு பேசுகையில், குழந்தை திருமணம், இளம் வயது கர்ப்பம் குறித்த புகார்கள் குறித்து உடனுக்குடன் போலீசார் எஃப்ஐஆர்(FIR) பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். புதிதாக பணியில் சேர்ந்த டாக்டர்கள் நோயாளியிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் என்றார்.

News March 4, 2025

சித்தா, ஆயுர்வேதா படித்தவர்களுக்கு அரசு வேலை

image

அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள ஆயுர்வேதா, சித்தா, யுனானி ஆகிய இந்திய மருத்துவ துறைகளில் காலியாக உதவி மருத்துவ அலுவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதிகபடியாக 59 வயது வரை இருக்கலாம். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை சம்பளம் வழங்கப்படும். தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் <>ஆன்லைன்<<>> வழியாக இன்றைக்கும் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு பின்னர் அறிவிக்கப்படும்.

News March 4, 2025

சிலிக்கான் மணல் கடத்திய 3 லாரிகள் பறிமுதல்

image

காவேரிப்பாக்கம் போலீசார், ராமாபுரம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தன. அப்போது ஆந்திர மாநில பதிவெண் கொண்ட மூன்று லாரிகள் வருவதை கண்ட போலீசார் அவற்றை சோதனை செய்த பொழுது அதில் சிலிக்கான் மணல் இருந்ததுள்ளது அவற்றிற்கான உரிய ஆவணம் இல்லாததால், லாரிகளை பறிமுதல் செய்து. லாரியில் வந்த கலைச்செல்வன் 28, ரகு 45, சுதாகர் 36, திருச்செல்வம் 45, அசோகன் 43, ஆகியோரை கைது விசாரணை செய்து வருகின்றனர்.

News March 3, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சற்றுமுன் வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். கண்ட்ரோல் ரூம் எண்ணிற்கும் 9884098100 அழைக்கலாம்.

News March 3, 2025

மாணவர்கள் தேர்வு எழுதுவதை பார்வையிட்ட ஆட்சியர்

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.யு.சந்திரகலா, இ.ஆ.ப., அவர்கள் இன்று காவேரிப்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு அரசு தேர்வினை மாணவ, மாணவிகள் எழுதுவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். உடன் மாவட்ட கல்வி அலுவலர் சரஸ்வதி இருந்தார்.

News March 3, 2025

போஸ்ட் ஆபிசில் வேலை; இன்றே கடைசி நாள்

image

சென்னை. செங்கல்பட்டில் உள்ள கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் பதவிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.62 பணியிடங்கள். கணினி அறிவு, சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். போஸ்ட் மாஸ்டருக்கு ரூ.12,000 – ரூ.29,380, உதவி போஸ்ட் மாஸ்டருக்கு ரூ.10,000 – ரூ.24,470 வரை சம்பளம். இன்றைக்குள் இந்த லிங்கை <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்க வேண்டும்

News March 3, 2025

அரசு பொதுத்தேர்வு மாணவர்களை கண்காணித்த ஆட்சியர்

image

காவேரிப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ அரசு பொதுத்தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு மாணவர்கள் இன்று தேர்வு எழுதினர். இந்த தேர்வை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது எந்தவித முறைகேடுகளும் இல்லாமல் தேர்வு நடக்க வேண்டும் என்று கல்வித்துறை அதிகாரியிடம் ஆட்சியர தெரிவித்தார். மேலும் குடிநீர் வசதி செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.

News March 3, 2025

+2 மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த அமைச்சர் 

image

தமிழகம் முழுவதும் இன்று +2  பொது தேர்வு தொடங்குகிறது. இத்தேர்வை எழுதும் அனைத்து மாணவ, மாணவியர்களுக்கு தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி மாணவர்கள் அனைவரும் தேர்வு நன்கு எழுதி வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தார். இத்தேர்வை சுமார் 8.21 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.

error: Content is protected !!