India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று ராணிப்பேட்டை மாவட்ட இந்து முன்னணி அமைப்பின் சார்பில் ஒரு நாள் பண்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமில் மாவட்டத்தில் இந்து சமுதாயத்தை ஒற்றுமைப்படுத்தவும், இந்து மக்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்து முன்னணியின் ஊழியர்கள் மற்றும் பொறுப்பாளர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
டிஎன்பிஎஸ்சி தொழில் நுட்ப பணிகளுக்கான பொது அறிவு மற்றும் கட்டாய தமிழ் மொழி தகுதித் தேர்வு நேற்று வாலாஜா அறிஞர் அண்ணா மகளிர் கலைக் கல்லூரியில் நடைபெற்றது. இதில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் மொத்தம் 365 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்த நிலையில் 194 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். 171 பேர் தேர்வு எழுத வரவில்லை என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் நேற்று அரக்கோணம் சட்டமன்ற தொகுதியில் உள்ள பெருமூச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்டு மாணவர்களின் கற்றல் திறமைகளைப் பாராட்டி, ஆசிரியப் பெருமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
ஜூன், ஜூலையில் நடைபெற்ற தொடக்கக்கல்வி பட்டய தேர்வின் விடைத்தாள்களின் நகலை ஆசிரியர் பயிற்சி தேர்வாளர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீடு செய்ய விரும்புவோர் ராணிப்பேட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் உரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கல்வி நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கட்சியின் ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயல் வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் வரும் நவ.10 தேதி (நாளை) ராணிப்பேட்டையில் உள்ள NRK திருமண மண்டபத்தில் காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது. இதில் அதிமுக நகர ஒன்றிய பேரூர் எம்ஜிஆர் மன்ற நிர்வாகிகள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட செயலாளர் எஸ்.எம் சுகுமார் தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தோப்புக்கானா காணாறு பகுதியைச் சேர்ந்த கண்ணன் (85) என்பவரை அதே பகுதியை சேர்ந்த கார்த்தி (33) என்ற வாலிபர் கடந்த 2018-ம் ஆண்டு முன் விரோதம் காரணமாக கொலை செய்தார். இது தொடர்பான வழக்கு ராணிப்பேட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் இன்று (நவம்பர் 9) இந்த வழக்கில் கார்த்திக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி செல்வம் தீர்ப்பு வழங்கினார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (09.11.24) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சற்றுமுன் வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். கண்ட்ரோல் ரூம் எண்ணிற்கும் 9884098100 அழைக்கலாம்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் திமிரி ஊராட்சியில் 560 வீடுகளும், வாலாஜா ஒன்றியத்தில் 667, அரக்கோணம் ஒன்றியத்தில் 625, ஆற்காடு ஒன்றியத்தில் 452, சோளிங்கர் ஒன்றியத்தில் 339, நெமிலி ஒன்றியத்தில் 502 வீடுகளும், காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் 179 வீடுகளும் என மொத்தம் 3,333 வீடுகள் கட்டப்பட்டு வருகிறது என கலெக்டர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பசுமை தமிழ்நாடு திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் உற்பத்தி செய்து நடும் திட்டம் குறித்து ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வன அலுவலர் குருசுவாமி தபேலா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயசுதா மற்றும் துறைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மதியம் 1 மணி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், சாலைகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்க பகுதியில் மழை பெய்கிறதா என்பதை கமெண்டில் சொல்லுங்க
Sorry, no posts matched your criteria.