India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால் தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்களிடம் மொத்தமாக 27 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்கள் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால் தெரிவித்தார்.

ராணிப்பேட்டையில் நாளை செப்டம்பர் 18 ம்தேதி உங்களுடன் ஸ்டாலின் முகாம் தி டவுன் ஹால் காந்தி சாலை அரக்கோணத்திலும், சோளிங்கர் வன்னியர் சத்திரம் தென் வன்னியர் தெருவிலும், அரசு மேல்நிலைப்பள்ளி வளர்புரம், அரக்கோணம் வாலாஜா விபிஆர்சி கட்டிடம், வி, சி, மோட்டூர் மற்றும் ஆற்காடு ஊராட்சி மன்ற அலுவலகம் சக்கரமல்லூர் ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது.

இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையினர் இன்று (17.09.2025) இரவு 9 மணி முதல் அதிகாலை வரை ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். ராணிப்பேட்டை, அரக்கோணம் உட்பட பல பகுதிகளில் பாதுகாப்பை உறுதிப்படுத்த காவல்துறையினர் ரோந்து செய்கிறார்கள். பொதுமக்கள் அவசர தேவைகளுக்காக 9884098100 அல்லது 04172-290961 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம்.

இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்திரகலா தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (17.9.2025) பள்ளி கல்வித் துறையின் செயல்பாடுகள் குறித்த மாதாந்திர ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. உடன் முதன்மை கல்வி அலுவலர் பிரேமலதா (பொறுப்பு). மாவட்ட கல்வி அலுவலர் கிளாடி சுகுணா மற்றும் பலர் உள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால் தலைமையில், இன்று சமூக நீதி நாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குணசேகரன், துணைக் காவல் கண்காணிப்பாளர் ராமச்சந்திரன், ரமேஷ் ராஜ், வெங்கடகிருஷ்ணன், காவல் அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ராணிபேட்டை மக்களே, உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உடனே செக் பண்ணுங்க. <

1.மகேந்திரவாடி – மகேந்திர விஷ்ணுகிருகம் என்னும் குடைவரை குறிப்பிடத்தக்க ஓர் வரலாற்றுச் சின்னமாகும்.
2.டெல்லி கேட் – ஆற்காடு பகுதியை ஆங்கிலேயர் கைப்பற்றியதன் நினைவாக கட்டப்பட்டது.
3.ரத்தினகிரி முருகன் கோவில் – 14ம் நூற்றாண்டில் அருணகிரி நாதரால் கட்டப்பட்ட பிரசித்தி பெற்ற ஒரு பழமையான கோவில்.
4.காஞ்சனகிரி மலை – கடல் மட்டத்திலிருந்து 1500 அடி உயரம் கொண்ட பசுமையான சிறிய மலையாகும்.
ஷேர் பண்ணுங்க

ராணிப்பேட்டை மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இந்த <

ராணிப்பேட்டை மாவட்டம் மேல்வெண்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ சுதந்திர லக்ஷ்மி நாயகி சமேத யுக நாராயணப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. ராணிப்பேட்டையில் உள்ள பழமையான கோயில்களில் இந்த கோயிலும் ஒன்றாகும். இந்த கோயிலுக்கு வந்து பெருமாளை தரிசித்து சென்றால் திருமண தடை நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. மேலும், கடன் தொல்லை நீங்கி செல்வம் பெருகும் என்பதும் ஐதீகம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க,

ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் செப் 19 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. 8 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ, நர்சிங், பி.இ படித்தவர்கள் இதில் கலந்து கொள்ளலாம். முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார். ஷேர் பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.