India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்கள் நடைபெறுகின்றன. இதில், சாதி சான்றிதழ், பட்டா மாற்றம், மகளிர் உரிமைத் தொகை, மருத்துவ காப்பீட்டு அட்டை, ஆதார், ரேஷன் அட்டை திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அரசு அலுவலகங்களுக்கு அலையாமல், <

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையால் 18.9.25 இரவு பாதுகாப்பு பணிக்காக ரோந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார சாலைகள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பொறுப்பான காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசர தேவைகளுக்கு கட்டுப்பாட்டு அறை எண்கள் வெளியிடப்பட்டு, பொதுமக்களின் பாதுகாப்பு உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

வாலாஜா ஊராட்சி ஒன்றியம் வீசி மோட்டூர் ஊராட்சியில் வி.பி.ஆர்.சி கட்டடத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. இதை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா பார்வையிட்டு, உடனடி தீர்வு காணப்பட்ட பயனாளிகளின் மனுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இதில் ஒன்றிய குழு தலைவர் வெங்கட்ரமணன், துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன்,ஒன்றிய குழு உறுப்பினர் வசந்தி,வட்டாட்சியர் ஆனந்தன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என நான்கு வகையில் உள்ளது.
1.AAY : இலவச அரிசி (35 கிலோ), சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
2.PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
3.NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம்.
4.NPHH: சில பொருட்கள் மட்டும்.உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய <
மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க…

ராணிப்பேட்டை மக்களே நாளையே கடைசி நாள்! தேர்வு இல்லாமல் அரசு வேலை. தமிழ்நாடு அரசு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்படவுள்ளது.10th, ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.19,500 – ரூ.71,900 வரை வழங்கப்படும். செப்.,19 நாளையே கடைசி நாள் என்பதால் வேலை தேடுபவர்கள் <

ராணிப்பேட்டை மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

ராணிப்பேட்டை பட்டதாரிகளே..தொழில் முனைய விரும்புவரா நீங்கள்..? உங்கள் சொந்த ஊரில் உழவர் நல மையம் அமைக்க ரூ.6 லட்சம் மானியம் தமிழக அரசால் வழங்கப்படுகிறது. மேலும், இந்தத் துறையில் இலவச சிறப்பு பயிற்சி பெற மாவட்ட வேளாண் பயிற்சி நிலையம், வேளாண்மை அறிவியல் நிலையத்தை அணுகலாம். இதற்கு விண்ணப்பிக்க இங்கே <

ராணிப்பேட்டை மக்களே! மழை காலம் தொடங்க இருப்பதால், மின்சார சேவை அடிக்கடி பாதிக்கப்படும். அப்போது பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். ஷேர் பண்ணுங்க!

ராணிப்பேட்டை மக்களே கிரைண்டர் வாங்க போறீங்களா? அப்போ தமிழக அரசு கொடுக்கும் 5,000 மானியத்தை புடிங்க. தமிழக அரசு வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்கள், ஆதரவற்றோர், கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் உங்கள் வயது 25க்கு மேல் இருந்தால் தாராளமாக APPLY பண்ணலாம். ராணிப்பேட்டை மாவட்ட சமூக நல அலுவரிடம் விண்ணப்பியுங்கள் மற்றவர்களுக்கும் SHARE செய்து APPLY பண்ண சொல்லுங்க!

ராணிப்பேட்டையில் இன்று (செப்.18) முகாம் நடைபெறும் இடங்கள்:
1. அரக்கோணம் நகராட்சி – தி டவுன்ஹால் காந்தி சாலை, அரக்கோணம்
2. அரக்கோணம் வட்டாரம் – அரசு மேல் நிலைப் பள்ளி, வளர்புரம்
3. சோளிங்கர் – வன்னியர் சத்திரம், தென் வன்னியர் தெரு, சோளிங்கர்
4. வாலாஜா – VPRC கட்டடம், V.C.கோட்டூர்
5. ஆற்காடு – PVM அரசினர் மேல்நிலைப் பள்ளி, சக்கரமல்லூர்
Sorry, no posts matched your criteria.