India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ராணிப்பேட்டை மக்களே..! ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள 375 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. பணி: ஓட்டுநர், அலுவலக உதவியாளர், பதிவறை எழுத்தர், இரவு காவலர்
2. கல்வி தகுதி: 8 & 10-ம் வகுப்பு
3. சம்பளம்: ரூ.15,900 – ரூ.62,000
4. விண்ணப்பிக்க இங்கே <
5. கடைசி தேதி: 30.09.2025
அரசு வேலை எதிர்பார்ப்போருக்கு SHARE செய்து உதவுங்க..

ராணிப்பேட்டை மாவட்டம், அம்மூர் பேரூராட்சி பகுதியில் நிலம் அளப்பதற்காக லஞ்சமாக ரூ.37,000 கேட்ட நில அளவையர் சித்ராவை, ராணிப்பேட்டை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். நில உரிமையாளர் கொடுத்த தகவலின் பேரில், நேற்று (செப்டம்பர் 20) சித்ராவை லஞ்சம் வாங்கியபோது டிஎஸ்பி கணேசன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். இது குறித்து உங்களின் கருத்து என்ன?

மஹாளய அமாவாசை என்பது புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை திதியாகும். இந்த நாளில் முன்னோர்களுக்கு (பித்ருக்கள்) தர்ப்பணம், திதி மற்றும் சிரார்த்தம் செய்து அவர்களின் ஆசி பெறுவது வழக்கம். ராணிப்பேட்டையில் பாலாற்றின் கரைகள், பனப்பாக்கம் அணை, ஏரி, காவேரிப்பாக்கம் ஏரி போன்ற இடங்களில் திதி கொடுத்து வழிபடுவது வழக்கம். இந்நாளில் சமைத்த உணவை முதலில் காக்கைக்கு வைத்த பின்னரே மற்றவர்கள் உண்பது வழக்கம். ஷேர்!

ராணிப்பேட்டை மக்களே மத்திய அரசு அறிவிப்புப்படி, LPG கேஸ் சிலிண்டர் மானியம் வரவில்லை என்றால் இனி கவலை வேண்டாம்.<

கர்நாடக சங்கீத உலகில் பெரும் ஜாம்பவானாக இருந்தவர் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவை சேர்ந்த வெங்கடரமண பாகவதர். சிறு வயதிலிருந்தே இசை மீது ஆர்வம் கொண்டிருந்த அவர், புகழ்பெற்ற இசையமைப்பாளரான தியாகராஜரை தனது குருவாக ஏற்றார். தியாகராஜரின் கீர்த்தனைகளை முழுமையாகக் கற்றுக் கொண்டு, அவற்றைப் பலருக்கும் பரப்பினார். இவரின் உருவம் பதித்த அஞ்சல் வில்லையை இந்திய அஞ்சல் துறை 2009-ஆம் ஆண்டில் வெளியிட்டது. ஷேர்!

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் சுவாமி திருக்கோயிலில் உதவியாளர், தமிழ் புலவர், தட்டச்சர், காவலர், தூய்மைப் பணியாளர் உள்ளிட்ட 14 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிக்க தகுதியுடையோர் அக்டோபர் 18, 2025 அன்று மாலை 5.45 மணிக்குள் sholingurnarasimhar.hrce.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

வாகன விதிமீறல் அபராதம் குறித்த போலி குறுஞ்செய்திகள் குறித்து ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுமக்கள் அதிகாரப்பூர்வ RTO இணையதளங்களில் மட்டுமே அபராதங்களைச் சரிபார்க்க வேண்டும் என்றும் போலியான APK கோப்புகளைப் பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்றும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. சந்தேகத்திற்கிடமான எண்கள் அல்லது செய்திகளைப் புகார் செய்யுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ( செப் -20) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது ராணிப்பேட்டை ஆற்காடு சோளிங்கர் அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் :9884098100

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை 2025 மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற 2,670 வீரர் வீராங்கனைகளுக்கு பதக்கங்களையும், பாராட்டுச் சான்றிதழ்களையும் அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார். கடந்த ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 11 வரை நடைபெற்ற இப்போட்டியில் 25,242 பேர் கலந்துகொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

ராணிப்பேட்டை மக்களே, அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை 1800 599 1500 இந்த கட்டணமில்லா நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் . இதை SHARE பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.