Ranipet

News March 16, 2025

ராணிப்பேட்டையில் WhatsApp எண்ணிற்கு தெரிவிக்கலாம்

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சமூக வலைதளத்தில் இன்று வெளியிட்டுள்ள விழிப்புணர்வு செய்தியில், “போதைப் பழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து பிரகாசமான எதிர்காலத்திற்கு வித்திடுங்கள். தீய பழக்கத்தை இன்றே கைவிடுங்கள். போதைப்பொருள் தொடர்பான சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் தொடர்பான தகவல்களை 89039 90359 whatsapp எண் மூலமாக தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளது.

News March 16, 2025

ஆதி திராவிடர் மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு

image

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்த மாணவர்கள் பிஎஸ்சி ஹாஸ்பிடாலிட்டி மற்றும் ஹோட்டல் அட்மினிஸ்ட்ரேஷன் 3 வருட முழுநேர பட்டப்படிப்பு படிப்பதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன இந்த திட்டத்தில் பதிவு செய்வதற்கு தாட்கோ இணையதளம் என்ற முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் சந்திரகலா இன்று தெரிவித்துள்ளார்

News March 16, 2025

இந்திய ராணுவத்தில் ஆள்சேர்ப்பு: கொட்டிக்கிடக்கும் வேலை

image

இந்திய ராணுவத்தில் ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. திருமணமாகாத ஆண்கள், பெண்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 2025ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் எழுத்துத் தேர்வு நடைபெறும். சென்னையைச் சேர்ந்த 8, 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற விருப்பம் உள்ளவர்கள் வரும் ஏப்ரல் 10ஆம் தேதிக்குள் இந்த லிங்கை <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். ஒரே நேரத்தில் 2 பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். 13 மொழிகளில் தேர்வு நடைபெறும்.

News March 16, 2025

சோளிங்கர்: ரோப் கார் பராமரிப்பு பணி தேதி அறிவிப்பு

image

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் பெரிய மலையில் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம ஸ்வாமி திருக்கோயில் உள்ளது. இதற்கு சுமார் 1400 படிகள் ஏறிச்சென்று சாமி தரிசனம் செய்ய வேண்டும். படி ஏற இயலாத பக்தர்கள், முதியோர்கள் ஆகியோர்களின் வசதிக்காக ரோப் கார் வசதி ஏற்படுத்தப்பட்டது. இதை மாதாந்திர பராமரிப்புக்காக வரும் மார்ச் 24 மற்றும் மார்ச் 25 ஆகிய தேதிகளில் இச்சேவை நிறுத்தப்படுகிறது.

News March 16, 2025

ராணிப்பேட்டையில் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை

image

ராணிப்பேட்டையை சேர்ந்தவர் அருண் பிரகாஷ் (37).இவருக்கும் அஷ்வினி என்பவருக்கும் 7 ஆண்டுகளுக்கு முன் திருமணமான நிலையில் குழந்தை இல்லாமல் இருந்துள்ளது.இதையடுத்து அஷ்வினி 4 மாத கர்ப்பமாக உள்ளார்.இந்நிலையில் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.அஷ்வினி பரிசோதனைக்காக மருத்துமனைக்கு சென்ற நிலையில் அருண் நேற்று (மார்ச்.15) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.

News March 16, 2025

ராணிப்பேட்டை மாவட்ட ரோந்து பணி காவலர்களின் விவரம் 

image

இராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (மார்ச் 15) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. இராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்கள் தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் 9884098100.

News March 15, 2025

குழந்தை தொழிலாளர் தடுப்பு எண் வெளியீடு

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை குழந்தைகளை தொழிலாளராக மாற்றி வேலை வாங்குவதை தடுக்க உதவி எண் 1098-யை வழங்கி உள்ளது. இதன்மூலம் புகார்கள், தகவல்கள் பொதுமக்கள் கொடுக்கலாம். குழந்தைகளிடம் கனிவாக இருங்கள், வேலை வாங்காதீர்கள் என மாவட்ட காவல்துறை பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது. காவல்துறையின் சீரிய முயற்சி அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

News March 15, 2025

ராணிப்பேட்டை ஆட்சியர் தகவல்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாலாஜா மற்றும் ஆற்காடு வட்டங்களில் தோல் கழிவுநீரால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு இழப்பீட்டுத் தொகை பெறாத விவசாயிகளின் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஜெ.யு. சந்திரகலா தெரிவித்துள்ளார். நில உரிமை தகராறு நீதிமன்ற வழக்கங்களால் இழப்பீடு பெறாத விவசாயிகள் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.

News March 15, 2025

வளர்ப்பு நாய் கடித்து உரிமையாளர் பலி

image

ராணிப்பேட்டை மாவட்டம் நெடும்புலி கிராமம் குயவர் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (45). இவர் வீட்டில் வளர்த்து வந்த நாய் ரமேஷை கடித்தது. உறவினர்கள் மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்திருந்தனர். இந்நிலையில் ரமேஷ் சிகிச்சை பலனின்றி நேற்று (மார்ச்.14) உயிரிழந்தார். இது குறித்து நெமிலி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அரசு விதிகளின்படி நல்லடக்கம் செய்ய அறிவுறுத்தப்பட்டது.

News March 15, 2025

ஆற்றங்கரை ஓரம் எலும்புக்கூடு டி.என்.ஏ டெஸ்ட்

image

உரியூர் கிராமத்தின் ஆற்றங்கரை ஓரத்தில் நேற்று (மார்ச்.14) எலும்புக்கூடு இருப்பதாக அப்பகுதி மக்கள் தக்கோலம் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசாரின் விசாரணையில், டிசம்பர் 13ம் தேதி சாந்தி என்பவர் வீட்டில் இருந்து காணாமல் போனார்.அவரது எலும்பு கூடாக இருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர். இதனால் போலீசார் எலும்புக்கூடை மீட்டு டி.என்.ஏ. பரிசோதனைக்கு சென்னை அரசு மருத்துவமனைக்கு இன்று அனுப்பி வைத்துள்ளனர்.

error: Content is protected !!