Ranipet

News March 18, 2025

உங்க வீட்டுல குழந்தைகள் இருக்கா! மிஸ் பண்ணிடாதீங்க

image

தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் சார்பாக வைட்டமின் ஏ சத்து குறைபாடு நோய்கள் மாலை கண் தொடர்பான நோய்களை தடுப்பதற்கு விட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் மார்ச் 17 முதல் மார்ச் 22 வரை 6 மாதம் முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு வழங்கப்பட உள்ளது. அங்கன்வாடி மையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் இம்முகாம் நடைபெற உள்ளது. குழந்தைகள் வைத்திருப்பவர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க.

News March 18, 2025

வீட்டின் பூட்டை உடைத்து பணம் மற்றும் நகை கொள்ளை

image

ஆற்காடு அருகே உள்ள ஹவுசிங் போர்ட் பகுதியை சேர்ந்த சுவாமி தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நேற்று, இரவு பணிக்கு சென்றிருந்த நிலையில் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பீரோவில் வைக்கப்பட்டிருந்த சுமார் 9 சவரன் தங்க நகை மற்றும்
15 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து புகாரின் படி மர்ம நபர்களை ஆற்காடு நகர போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

News March 18, 2025

தேர் திருவிழாவில் அமைச்சர் சாமி தரிசனம்

image

இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வட்டம் திருமால்பூர் ஊராட்சியில் அமைந்துள்ள அருள்மிகு அஞ்சனாட்சி அம்பாள் உடனுறை ஶ்ரீமணிகண்டீஸ்வரர் திருக்கோயில் பிரம்மோற்சவ தேர்த்திருவிழாவில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி திருத்தேரில் அருள் பாலித்த சுவாமியை வணங்கி வழிபாடு செய்தார். உடன் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் J.லட்சுமணன் இருந்தார்.

News March 17, 2025

ராணிப்பேட்டையில் 20 வழித்தடத்தில் பேருந்து இயக்க ஆணை

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 20 வழித்தடங்களில் மினி பேருந்துகள் இயக்க இன்று(மார்.17) ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா ஆணை வழங்கினார். அப்போது வட்டார போக்குவரத்து அலுவலர் மோகன் உடனிருந்தார். மேலும் மினி பேருந்துகளை பொதுமக்கள் புகாருக்கு ஆளாகாமல் குறித்த நேரத்தில் குறித்த வழித்தடத்தில் இயக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.

News March 17, 2025

ராணிப்பேட்டை காவல்துறை எச்சரிக்கை அறிவிப்பு 

image

ராணிப்பேட்டை காவல் துறை இன்று (மார்.17)  வெளியிடப்பட்ட விழிப்புணர்வு செய்தியில்  ஹேக்கர்களிடமிருந்து ஸ்மார்ட்போனை பாதுகாப்பதற்கான சிறந்த உதவிக்குறிப்புகள் வலுவான கடவுச்சொற்கள் அல்லது பயோமெட்ரிக்ஸை மென்பொருளை தொடர்ந்து புதுப்பிக்கவும் பொது வைஃபையுடன் கவனமாக இருங்கள் நம்பகமான பயன்பாடுகளை மட்டும் நிறுவவும் சந்தேகத்திற்குரிய இணைப்புகள் மற்றும் இணைப்புகளைத் தவிர்க்கவும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. 

News March 17, 2025

அங்கன்வாடியில் ரூ.24,200 சம்பளத்தில் அரசு வேலை!

image

தமிழ்நாடு முழுவதும் அங்கன்வாடி பணியாளர்களை நிரப்புவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. மொத்தம் 7,783 அங்கான்வாடி பணியாளர்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளனர்.அதிகபட்சம் 12ஆம் வகுப்பும் குறைந்தபட்சம் 10ஆம் வகுப்பும் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.வயது 25 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். எழுத்துத் தேர்வு கிடையாது.ரூ.24,200 வரை சம்பளம். மேலும் தெரிந்து <>கிளிக்<<>> கொள்ள செய்யவும்.

News March 17, 2025

வீட்டுக் காவலில் பாஜக மாவட்ட தலைவர்

image

டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளதாக சென்னையில் இன்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம், நடத்த திட்டமிட்டனர். இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்ட பாஜக தலைவர் நெமிலி ஆனந்தன் போலீசாரால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். நெமிலி சப் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் போலீசார் ஆனந்தன் வீட்டை விட்டு வெளியே செல்லாத வகையில் பாதுகாப்பு அளித்துள்ளனர்.

News March 17, 2025

சோளிங்கர் 41 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்

image

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த கூடலூர் கிராமப் பகுதியில் கொண்டபாளையம் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை சோதனையிட்டனர் அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா 41 கிலோ இருந்தது தெரியவந்தது. இதை அடுத்து அந்த வாகனத்தில் சென்ற அன்வர்திகான்பேட்டையை சேர்ந்த சுகுமார் என்பவரை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

News March 16, 2025

இரவு ரோந்து பணி போலீசாரின் விவரங்கள் வெளியீடு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (மார்ச்.16) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. அதில் ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் தொலைபேசி எண்களை தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இரவு நேரங்களில் ஏதேனும் உதவி தேவைப்பட்டால் இதில் குறிப்பிட்டுள்ள எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

News March 16, 2025

ராணிப்பேட்டை ஆட்சியர் தகவல்

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், உலக தண்ணீர் தினத்தின் கருப்பொருளை பற்றிய விவாதித்தல் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவீனம் குறித்து விவாதித்தல் ஆகியவற்றுக்கான கிராம சபை கூட்டம் மார்ச் 23ஆம் தேதி காலை 11 மணிக்கு அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!