India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

இந்திய அரசு கடந்த ஆண்டு பிரதம மந்திரி இ-டிரைவ் (PM E-DRIVE) என்ற புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பொதுமக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை எளிதாக வாங்க முடியும். இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10,000 வரையும், 3 சக்கர வாகனங்களுக்குரூ.25,000-ரூ.50,000 வரையும் மானியம் வழங்கப்படுகிறது. புதிய வாகனம் வாங்க ஆசைப்படுபவர்கள் இந்த <

ராணிப்பேட்டையில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், பிரதான் மந்திரி மானியத்துடன் வீடுகளுக்கு சோலார் மின் இணைப்பு வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மின்சார செலவை குறைக்கவும், மின் சிக்கனத்தை ஊக்குவிக்கவும் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் <

அரக்கோணம் பழனிபேட்டை மற்றும் சுவால்பேட்டை பகுதியில் மதுவுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மளிகை கடை உரிமையாளர் ஒருவர் நகரம் முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டி உள்ளார். அதில் ரோபோ சங்கர் படத்துடன் ”என்ன தொட்டான், அவன் கெட்டான்” என்ற தலைப்புடன் எனக்கு மொழி, இனம், ஜாதி, நாடு, ஆண், பெண், இரவு, பகல் இவைகளை பிரித்துப் பார்க்க தெரியாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் இன்று (செப் 23) நடைபெறும் இடங்கள்: ஆற்காடு நெல்,அரிசி வியாபாரிகள் சங்க திருமண மண்டபம் ஆரணி ரோடு, தக்கோலம் பேரூராட்சி அரசு பெண்கள் மே.நிலைப்பள்ளி, அரக்கோணம் வட்டாரம் அரசு மே.நிலைப்பள்ளி குமினிபேட்டை மேல்பாக்கம், காவேரிப்பாக்கம் வட்டாரம் ராகவேந்திரா மஹால், காத்தூர் அவலூர் கீழ்மின்னல் ரத்தனகிரி கோவில் மண்டபம் ஆகிய பகுதிகளில் முகாம்கள் நடைபெற உள்ளது.

மக்கள் சந்திப்பு பயணம் என தமிழக வெற்றி கழகம் (தவெக) தலைவர் விஜய் மேற்கொள்ளும் சுற்றுப்பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலில் அக்டோபர் 18-ஆம் தேதி ராணிப்பேட்டைக்கு வரவிருந்த நிலையில், தற்போது அவர் அக்டோபர் 4-ஆம் தேதி ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களுக்குப் பயணம் செய்யவுள்ளார். இதற்கான ஏற்பாடுகளில் மாவட்ட தவெகவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் இன்று (செப் 23)நடைபெறும் இடங்கள்: ஆற்காடு நெல்,அரிசி வியாபாரிகள் சங்க திருமண மண்டபம் ஆரணி ரோடு, தக்கோலம் பேரூராட்சி அரசு பெண்கள் மே.நிலைப்பள்ளி, அரக்கோணம் வட்டாரம் அரசு மே.நிலைப்பள்ளி குமினிபேட்டை மேல்பாக்கம், காவேரிப்பாக்கம் வட்டாரம் ராகவேந்திரா மஹால், காத்தூர் அவலூர் கீழ்மின்னல் ரத்தனகிரி கோவில் மண்டபம் ஆகிய பகுதிகளில் முகாம்கள் நடைபெற உள்ளது.

ராணிப்பேட்டை மாவட்ட அளவிலான விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் செப்டம்பர் 30ஆம் தேதி காலை 11 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தலைமை வகிக்கிறார். இதில் விவசாயிகள் விவசாய நலன் சார்ந்த பிரச்சினைகள் குறித்து தெரிவிக்கலாம் என ஆட்சியர் சந்திர கலா தெரிவித்துள்ளார்.

கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் இராணிப்பேட்டை
ஆர்.காந்தி இன்று திருப்பாற்கடலில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்தார். இதில் மாவட்ட ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா,
ஒன்றிய குழு தலைவர் சேஷாவெங்கட், தலைமை செயற்குழு உறுப்பினர் க.சுந்தரம் ஒன்றிய செயலாளர் எம்.சண்முகம் பொதுக்குழு உறுப்பினர் PK.பொன்னன்
பலர் கலந்து கொண்டனர்.

அரக்கோணம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் செப்டம்பர் 22ஆம் தேதி அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷனில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மும்பையில் இருந்து அரக்கோணம் வழியாக சென்னை செல்லும் ரயிலில் சென்னையை சேர்ந்த அப்துல் ரஷீத், மஸ்தான் ஆகிய இருவரும் 550 போதை மாத்திரைகள் கடத்தி வருவது தெரிந்து கைது செய்தனர். நேற்று ஐந்து பேரை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

இராணிப்பேட்டைமாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் இன்று (22/09/2025) இரவு 11 மணி முதல், காலை 7 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில், ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரியின் எண்கள், மேலே கொடுக்கப்பட்டுள்ளன. *இரவில் தொழிற்சாலைகளுக்கு வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பகிரவும்*.
Sorry, no posts matched your criteria.