Ranipet

News September 24, 2025

கிராம பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனை கூட்டம்

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கதர் மற்றும் கிராம பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனை குறித்து ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரிய தலைமை செயல் அலுவலர் சம்பத் தலைமையில் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா முன்னிலையில் இன்று நடைபெற்றது.திட்ட இயக்குனர் சரண்யா தேவி,கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவாளர் மலர்விழி,காதி துணை இயக்குனர் அருணாச்சலம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

News September 24, 2025

இராணிப்பேட்டை: மக்கள் குறைதீர் கூட்டம்

image

இன்று இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால், அறிவுரையின் பேரில், துணைக் கண்காணிப்பாளர் (IUCAW) வெங்கட கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பொதுமக்கள் குறைகள் பதிவு செய்யப்பட்டு, அவற்றுக்கான தீர்வுகள் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டன.

News September 24, 2025

ராணிப்பேட்டை: கேக் சாப்பிட்ட சிறுவன் பலி உறவினர்கள் மறியல்

image

ராணிப்பேட்டை மாவட்டம், திமிரியில் உள்ள தனியார் பள்ளியில் 7 வயது சிறுவன் கேக் சாப்பிட்ட சிறிது நேரத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதனால் அவரது உறவினர்கள் தாமரைப்பாக்கம் கிராமத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்ட நிலையில், மாவட்ட துணைக் கண்காணிப்பாளர் இமயவர்மன் சிறுவனின் பெற்றோரிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.

News September 24, 2025

ராணிப்பேட்டை: கேக் சாப்பிட்ட சிறுவன் பலி உறவினர்கள் மறியல்

image

ராணிப்பேட்டை மாவட்டம், திமிரியில் உள்ள தனியார் பள்ளியில் 7 வயது சிறுவன் கேக் சாப்பிட்ட சிறிது நேரத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதனால் அவரது உறவினர்கள் தாமரைப்பாக்கம் கிராமத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்ட நிலையில், மாவட்ட துணைக் கண்காணிப்பாளர் இமயவர்மன் சிறுவனின் பெற்றோரிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.

News September 24, 2025

ராணிப்பேட்டை: வரதட்சனையால் பெண் தற்கொலை?

image

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம், தண்டலத்தை சேர்ந்தவர் வினோத். இவரது மனைவி நிவேதா. இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு காரணமாக சண்டை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று நிவேதா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நிவேதாவை வரதட்சனை கேட்டு வினோத் கொடுமை செய்ததாகவும், அவரது சாவில் மர்மம் இருப்பதாக கூறி நிவேதா உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டதில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

News September 24, 2025

ராணிப்பேட்டை: கேக் சாப்பிட்ட சிறுவன் பலி! அதிர்ச்சி சம்பவம்

image

ராணிப்பேட்டை மாவட்டம் தாமரைபாக்கத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவரது மகன் மிதுன். காவனூர் தனியார் பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வரும் இவர் நேற்று மதியம் பள்ளியில் மதிய இடைவேளையின் போது கேக் சாப்பிட்டுள்ளார். அதன்பின் திடீரென சிறுவன் முகம் வீங்கி மயக்கமடைந்தார். சிறுவனை ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

News September 24, 2025

ராணிப்பேட்டை: வருகிறது தீபாவளி! உஷாரா இருங்க…

image

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆன்லைன் செயலிகள் மூலம் வரும் தள்ளுபடி இணைப்புகளை நம்பி பணபரிவர்த்தனைகளை செய்ய வேண்டாம் என ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது. இந்த இணைப்புகள் பெரும்பாலும் மோசடி கும்பலால் அனுப்பப்படுபவை. எனவே, பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும், இது போன்ற மோசடி தொடர்பாக புகார் அளிக்க 1930 என்ற இலவச தொலைபேசி எண்ணை அழைக்கலாம் எனவும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

News September 24, 2025

ராணிப்பேட்டை: வங்கி அதிகாரி ஆக விருப்பமா? ரூ.80,000 சம்பளம்!

image

ராணிப்பேட்டை மக்களே..வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) மூலம் கிராம வங்கிகளில் காலியாக உள்ள 13,217 காலியாக உள்ள Manager, Assistant Manager நிரப்ப அறிவிப்பு வெளியானது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 688 காலிப்பணியிடங்கள் உள்ளன. சம்பளமாக ரூ.35,000 முதல் 80,000 வரை வழங்கப்படும். ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் வரும் செப்.28-க்குள், இங்கு <>கிளிக் <<>> செய்து விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

News September 24, 2025

ராணிப்பேட்டை: தரமற்ற உணவு விற்பனையா? இதோ தீர்வு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சுகாதாரமற்ற உணவு, தரமற்ற உணவு, கலப்படம் உள்ளிட்ட உணவு பொருட்கள் தொடர்பான பிரச்சனைகளுக்கு இனி இருந்த இடத்திலேயே புகார் அளிக்கலாம். தமிழக அரசின் Tn Food Safety Consumer App என்ற செயலியிலோ (அ) இந்த <>இணையத்திலோ<<>> புகார் அளிக்கலாம். புகார்தாரர்களின் விபரங்கள் ரகசியம் காக்கப்படும். புகார் அளித்த 24 மணி முதல் 48 மணி நேரத்திற்குள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். ஷேர் பண்ணுங்க!

News September 24, 2025

ராணிப்பேட்டை: உங்களின் குடிநீர் சுத்தமானதா? CHECK பண்ணுங்க!

image

உங்கள் பகுதி தண்ணீர் பாதுகாப்பானது தானா? குடிக்கவும் சமைக்கவும் ஏற்றது தானா? என்பதை அறிந்து கொள்ளுங்கள். ராணிப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தில் நீரின் தரத்தைப் பரிசோதிக்கும் ஆய்வகங்கள் உள்ளது. அங்கு உங்கள் தண்ணீரை சுத்தமான புதிய பிளாஸ்டிக் கேனில் 2 லிட்டர் அளவு கொடுக்க வேண்டும். நீங்கள் கொடுத்த நீர் குடிக்க உகந்ததா என அங்கு பரிசோதித்து உங்களுக்கு தெரிவிக்கப்படும். ஷேர்

error: Content is protected !!