India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ராணிப்பேட்டை காவல் நிலையம் சார்பில் அதன் இணையதளத்தில் இன்று போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வுப் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. அதில், போதைப்பொருட்களைப் பயன்படுத்தாமல் இருந்தால் ஆயுள் அதிகரிக்கும் என்றும், பயன்படுத்தினால் பாதிப்புகள் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, போதைப்பொருள் பழக்கத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என மக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தபடுகிறது. அதன்படி ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு கீழ் இருக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கபடுகிறது. இதற்கு உங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவலுக்கு ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.

✅ மகேந்திரவாடி – மகேந்திர விஷ்ணுகிருகம் என்னும் குடைவரை குறிப்பிடத்தக்க ஓர் வரலாற்றுச் சின்னமாகும்.
✅ டெல்லி கேட் – ஆற்காடு பகுதியை ஆங்கிலேயர் கைப்பற்றியதன் நினைவாக கட்டப்பட்டது.
✅ ரத்தினகிரி முருகன் கோவில் – 14ம் நூற்றாண்டில் அருணகிரி நாதரால் கட்டப்பட்ட பிரசித்தி பெற்ற ஒரு பழமையான கோவில்.
✅ காஞ்சனகிரி மலை – கடல் மட்டத்திலிருந்து 1500 அடி உயரம் கொண்ட பசுமையான சிறிய மலையாகும்.

இந்திய அஞ்சல் துறையில் பணிபுரிய தமிழகத்திற்கு மட்டும் சுமார் 32500காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 10th பாஸ் போதும் தேர்வு ஏதும் இல்லாமல் மெரிட் முறையில் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறது. 18-40வயது உடையவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு மாதம் ரூ.10,000-29,380 சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் செப்.30க்குள்<

ராணிப்பேட்டை மாவட்டத்தில் செப் -24ல் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் :9884098100

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை (செப்டம்பர்-25 ) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்: ராணிப்பேட்டை நகராட்சி அலுவலகம், அரக்கோணம் வட்டாரம் அரசு உயர்நிலைப்பள்ளி அன்வர்திகான்பேட்டை, சோளிங்கர் வட்டாரம் கிராம ஊராட்சி செயலகம் போளிப்பாக்கம், வாலாஜா வட்டாரம் துரோபதி அம்மன் ஆலயம் மருதம்பாக்கம், ஆற்காடு வட்டாரம் சமுதாயக்கூடம் அருங்குன்றம் ஆகிய பகுதிகளில் முகாம்கள் நடைபெற உள்ளது.

அரக்கோணம் பழனிபேட்டை இரட்டைக்கண் ரயில்வே சுரங்கப் பாதையை அகலப்படுத்தி உயர்த்தி தர கோரி செப்டம்பர் 29ம் தேதி காலை 9 மணி அளவில் பழனிபேட்டை அண்ணா சிலை அருகில் அரக்கோணம் சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது. போராட்டத்திற்கு எம்எல்ஏ ரவி தலைமை வகிப்பார் என்று இன்று செப்டம்பர் 24ஆம் தேதி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று பசுமை தமிழ்நாடு தினத்தையொட்டி பள்ளிக்கல்வி துறை சார்பில் தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரிய தலைமை செயல் அலுவலர் சம்பத், மாவட்ட ஆட்சியர் சந்திரகலா ஆகியோர் மாணவ மாணவிகளுடன் இணைத்து மரக்கன்றுகளை நட்டனர்.மாவட்ட வருவாய் அலுவலர் தனலிங்கம்,ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சரண்யா தேவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கதர் மற்றும் கிராம பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனை குறித்து ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரிய தலைமை செயல் அலுவலர் சம்பத் தலைமையில் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா முன்னிலையில் இன்று நடைபெற்றது.திட்ட இயக்குனர் சரண்யா தேவி,கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவாளர் மலர்விழி,காதி துணை இயக்குனர் அருணாச்சலம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

இன்று இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால், அறிவுரையின் பேரில், துணைக் கண்காணிப்பாளர் (IUCAW) வெங்கட கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பொதுமக்கள் குறைகள் பதிவு செய்யப்பட்டு, அவற்றுக்கான தீர்வுகள் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டன.
Sorry, no posts matched your criteria.