India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ராணிப்பேட்டை மாவட்டத்தில், TNPSC சார்பில், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு வரும் செப்.28 நடைபெறுகிறது. தேர்வு எழுத வரும் மாணவர்கள், காலை 8.30 மணிக்குள் தேர்வுக்கூடத்திற்கு வந்துவிட வேண்டும். ஹால் டிக்கெட் மற்றும் புகைப்பட அடையாள அட்டையுடன் வருவது கட்டாயம். மின்னணு சாதனங்களுக்கு அனுமதி இல்லை. தேர்வு எழுத கருப்பு நிற மை பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி காவேரிப்பாக்கத்தில் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்ட நபரின் உடலுக்கு அமைச்சர் ஆர். காந்தி நேரில் அஞ்சலி செலுத்தினார். நேற்று, 25.9.2025 நடந்த இந்த நிகழ்வில், உறுப்புதானத்தின் மகத்துவத்தை உணர்த்தும் வகையில் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்வு சமூகத்தில் உறுப்புதானம் குறித்த விழிப்புணர்வை மேலும் அதிகரித்தது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்கள் நடைபெறுகின்றன. இதில், சாதி சான்றிதழ், பட்டா மாற்றம், மகளிர் உரிமைத் தொகை, மருத்துவ காப்பீட்டு அட்டை, ஆதார், ரேஷன் அட்டை திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அரசு அலுவலகங்களுக்கு அலையாமல், <

இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை அறிவிப்பின்படி 25.9.2025 அன்று இரவு நேரத்தில் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ரோந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. முக்கிய சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசர தேவைகளுக்காக கட்டுப்பாட்டு அறை எண்கள் வெளியிடப்பட்டு, பொதுமக்களின் நிம்மதிக்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை (செப்டம்பர் 26 ) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் அரக்கோணம் நகராட்சி மாருதி கல்யாண மண்டபம் அசோக் நகர், சோளிங்கர் CAM மஹால் கொண்ட பாளையம் சோளிங்கர், நெமிலி வட்டாரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி துறையூர், திமிரி வட்டாரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ரகுநாதபுரம் ஆரூர் ஆகிய பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது.

அரக்கோணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் உங்களுடன் ஸ்டாலின் திட்டப்பணிகளை புறக்கணித்து 9 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து காத்திருப்பு போராட்டம் இன்று செப்டம்பர் 25ஆம் தேதி தொடங்கியது. இதில் துணை வட்டாட்சியர் ஜெயபால் , வருவாய் ஆய்வாளர் ஜெயக்குமார், கிராம நிர்வாக அலுவலர்கள் கார்த்திக் நெடுஞ்செழியன் லட்சுமி நாராயணன் ராஜேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்குக் குழு தலைவர் மற்றும் ஸ்ரீ பெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் செல்வ பெருந்தகை, போளூர் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் இன்று சோளிங்கர் எத்திராஜ் முதலியாண்டாள் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் முதலமைச்சர் கோப்பை -2025 கால்பந்து போட்டியில் மாவட்ட அளவில் வெற்றி பெற்று மாநில அளவில் செல்ல உள்ள மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

தமிழகம் முழுவதும் பரப்புரை மேற்கொண்டு வரும் தவெக தலைவர் விஜய்யின் சுற்றுபயணத்தில் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக அக்.18-ம் தேதி ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் விஜய் பரப்புரை செய்வார் என அறிவிக்கப்பட்டு, பின்னர் அக்.4ம் தேதி ராணிப்பேட்டைக்கு வருவார் என மாற்றி அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அக்.5-ல் ராணிப்பேட்டையில் விஜய் பரப்புரை செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசால் பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் மற்றும் புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது <

ராணிப்பேட்டை மாவட்டம் மேல்வெண்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ சுதந்திர லக்ஷ்மி நாயகி சமேத யுக நாராயணப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. ராணிப்பேட்டையில் உள்ள பழமையான கோயில்களில் இந்த கோயிலும் ஒன்றாகும். இந்த கோயிலுக்கு வந்து பெருமாளை தரிசித்து சென்றால் திருமண தடை நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. மேலும், கடன் தொல்லை நீங்கி செல்வம் பெருகும் என்பதும் ஐதீகம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க,
Sorry, no posts matched your criteria.