India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நேற்று செப்டம்பர் 26 அரக்கோணம் எம்.எல்.ஏ சு.ரவி அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு செய்தார். அப்போது அரசு மருத்துவமனையில் , தலைமை மருத்துவர் நிவேதிதா சங்கர் உடன் ஆலோசனை மேஇருந்த பொதுமக்களிடம் நலம் விசாரித்தார். மேலும் அவசர நோயாளிகள் பிரிவு தீவிர சிகிச்சை பிரிவு புறநோயாளிகள் பிரிவு என அனைத்து பகுதிகளிலும் சென்று மருத்துவர்களிடம் பேசி ஏதேனும் குறைகள் இருக்கிறதா என்று கேட்டறிந்தார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (செப் -26) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் 9884098100

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் II & IIA தேர்வு பணிகளில் ஈடுபட உள்ள அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்பு மற்றும் பயிற்சி கூட்டம் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தலைமையில் இன்று நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் தனலிங்கம், தேர்வாணைய பிரிவு அலுவலர் சிவன், உதவி பிரிவு அலுவலர் காந்தி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தலைமையில் இன்று நடைபெற்றது.மாவட்ட வருவாய் அலுவலர் தனலிங்கம்,வேளாண்மை இணை இயக்குநர் செல்வராஜ்,கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவாளர் மலர்விழி,தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் ஏகாம்பரம்,வேளாண்மை நேர்முக உதவியாளர் வெங்கடேஷ் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்

அரக்கோணத்தில் ரோபோ சங்கரின் மறைவை குறிப்பிட்டு மது விழிப்புணர்வு பேரில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் வைரலாகி வருகிறது. அதில் ‘எனக்கு மொழி, இனம், சாதி, மதம், நாடு, ஆண், பெண், இரவு, பகல், சின்னவன், பெரியவன், ஏழை, பணக்காரன், அரசன், ஆண்டி, அதிபதி, போண்டி, சர்வாதி, அடிமை இவற்றை எனக்கு பிரித்து பார்க்க தெரியாது. என்னைத் தொட்டான் அவன் கெட்டான்’ என்ற வாசகம் உள்ள நிலையில், சர்ச்சையாகியுள்ளது.

பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் விதிமுறைகளை மீறி, மின் வேலி அமைப்பது கிரிமினல் குற்றம் என மின்சாரத் துறை எச்சரித்துள்ளது. மேலும், பச்சை மரங்கள் மற்றும் இரும்பு கிரில்களில் அலங்கார சீரியல் விளக்குகளைக் கட்டுவதைத் தவிர்க்க வேண்டும். கனரக வாகனங்களை மின்கம்பிகளுக்கு அடியில் நிறுத்தி பொருட்களை ஏற்றி இறக்கக் கூடாது. மின் குறைகளுக்கு 94987 94987 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டக் காவல்துறை சார்பில், பெண்களுக்கு எதிரான வன்முறையைத் தடுக்கும் விதமாக இன்று (26.9.2025) விழிப்புணர்வுப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. “Stop Violence Against Women” என்ற முழக்கத்துடன் சமூக ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் இடையே இந்தப் பிரச்சாரம் நடத்தப்பட்டது. பெண்கள் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்துகொள்ள, அவசர உதவி எண் 181 குறித்தும் மக்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் இளநிலை பொறியாளர் பணிக்கு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மெக்கானிக்கல், எலெட்ரிக்கல், கெமிக்கல், இன்ஸ்ட்ருமென்டேஷன் ஆகிய பிரிவில் டிப்ளமோ/பொறியியல் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.30,000-ரூ.1,20,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் செப்டம்பர் 28ம் தேதிக்குள் <

கேஸ் சிலிண்டருக்கு மானியம் வருகிறதா? என்பதை SMS அனுப்பி தெரிந்து கொள்ளலாம். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கும் அனுப்பி தெரிந்து கொள்ளலாம். மேலும், UMANG என்ற App மூலமும் தெரிந்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

ராணிப்பேட்டை மக்களே, மாதம் ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வரை சம்பளத்தில் இந்தியன் வங்கியில் காலியாக உள்ள 171 Specialist Officers பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இந்த பணியிடத்திற்கு B.Tech., B.E., M.E., CA., M.Sc., MBA., MCA., உள்ளிட்ட பட்டப்படிப்புகளை முடித்த 23 முதல் 36 வயதுக்கு உட்பட்டவர்கள், <
Sorry, no posts matched your criteria.