Ranipet

News September 28, 2025

ராணிப்பேட்டை: பெட்ரோல் தரமாக இல்லையா??

image

ராணிப்பேட்டை மக்களே உங்கள் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்குகளில் நீங்கள் வாகனங்களில் போடும் பெட்ரோல் தரமானதாக இல்லையா? இதனால் உங்க வாகனங்களின் மைலேஜ் பாதிக்கப்படலாம். உங்கள் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்குகள் போடும் பெட்ரோல் தரமாக இல்லாமல் இருந்தா புகார் அளித்து தெரியபடுத்துங்க.. இந்தியன் ஆயில் – 1800233355. மேலும் இந்த தகவலை உங்கள் நண்பரகளுக்கு பகிருங்கள்.

News September 28, 2025

ராணிப்பேட்டை காவல்துறை சார்பில் விழிப்புணர்வு

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சார்பில் செப்-28 உலக நதிகள் தினம் குறித்து சமூக வலைதளங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. “நதிகளை காப்போம்..! எதிர்காலத்தை காப்போம்..!” என்ற கோஷத்துடன் நதிகளின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது. மக்கள் நதிகளை சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற செய்தியை பரப்பி, எதிர்கால தலைமுறைக்கு வளமான நீர்வளத்தை உறுதி செய்ய அழைப்பு விடுக்கப்பட்டது.

News September 28, 2025

ராணிப்பேட்டை: செல்போன் தொலைந்தால் இதை பண்ணுங்க

image

ராணிப்பேட்டை மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இந்த இணையதளத்தை <>கிளிக் <<>>செய்து செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபிடிக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News September 28, 2025

ராணிப்பேட்டையில் விஜய்யின் பரப்புரை ரத்து!

image

விஜய்யின் கரூர் பிரச்சாரத்தின் போது அதிக அளவிலான கூட நெரிசலில் 39 பேர் பரிதாபகம உயிரிழந்தனர். இந் நிலையில் விஜய்யின் அடுத்த பிரச்சாரம் 05-10-25 அன்று திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டடங்களில் நடைபெற திட்டமிடப்பட்டு இருந்தது. இந்த சுழலில் இன்று கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை செய்து வருகிறார், அதில் அடுத்தகட்ட பரப்புரைகள் ரத்து செய்யப்படும் என்கிற தகவல் வெளியாகி வருகிறது.

News September 28, 2025

ராணிப்பேட்டை: TNSTC சூப்பர் அறிவிப்பு… APPLY!

image

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சென்னை,விழுப்புரம் உள்ளிட்ட 6 மண்டலங்களில் 1,588 பயிற்சிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொறியியல் பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.9,000 & டிப்ளமோவுக்கு மாதம் ரூ.8,000 உதவித்தொகை வழங்கப்படும். கலை, அறிவியல், வணிகப் பிரிவுகளில் பட்டப்படிப்பு முடித்தவர்களும் <>விண்ணப்பிக்கலாம்<<>>. விண்ணப்பிக்க அக்-18 கடைசித் தேதி. நேரடித் தேர்வு/நேர்காணல் இல்லை. இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.

News September 28, 2025

ராணிப்பேட்டை: துணை வட்டாட்சியர்கள் மாற்றம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 19 துணை வட்டாட்சியர்களை பணியிட மாற்றம் செய்து ஆட்சியர் சந்திரகலா உத்தரவு பிறப்பித்துள்ளார். இதில் அரக்கோணம் வட்ட வழங்கல் அலுவலர் சரஸ்வதி நெமிலி தலைமையிடத்து துணை வட்டாட்சியராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நெமிலி வட்ட வழங்கல் அலுவலர் வினோத் சோளிங்கர் தலைமை இடத்து துணை வட்டாட்சியராக மாற்றப்பட்டுள்ளார். இதேபோன்று 19 பேர் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

News September 28, 2025

ராணிப்பேட்டை: TNPSC தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு!

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில், TNPSC சார்பில், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு இன்று (செப்-28) நடைபெறுகிறது. தேர்வு எழுத வரும் மாணவர்கள், காலை 8.30 மணிக்குள் தேர்வுக்கூடத்திற்கு வந்துவிட வேண்டும். ஹால் டிக்கெட் மற்றும் புகைப்பட அடையாள அட்டையுடன் வருவது கட்டாயம். மின்னணு சாதனங்களுக்கு அனுமதி இல்லை. தேர்வு எழுத கருப்பு நிற மை பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும். தேர்வு எழுத செல்வோருக்கு ஷேர் பண்ணுங்க

News September 28, 2025

ராணிப்பேட்டை: காவல்துறை இரவு ரோந்து பணி

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (செப் -27) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் 9884098100

News September 28, 2025

ராணிப்பேட்டையில் குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் பேரில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த எதிரி முகமது காசிம் (வயது 43), தாராபாத், காதர் முகமது சோனார் என்பவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. மாவட்ட காவல் நிலையம் வழியாக 27.09.2025 அன்று அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

News September 27, 2025

இறந்தவர் உடலுக்கு அரசு மரியாதை

image

விபத்தில் மூளைச்சாவு ஏற்பட்டு உயிரிழந்த வாலாஜா ஊராட்சி ஒன்றியம் வன்னிவேடு ஊராட்சி மதுபாலா நகர் பகுதியைச் சேர்ந்த ஏழுமலை ( 47) என்பவரின் குடும்ப உறுப்பினர்களின் சம்மதத்துடன் உடல் உறுப்புகள் தானம் செய்தமைக்காக அரசு மரியாதை செய்யும் பொருட்டுஅமைச்சர் ஆர்.காந்தி,மாவட்ட ஆட்சியர் சந்திர கலா இறந்தவரின் உடலுக்கு மாலை அணிவித்து இறந்தவரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.

error: Content is protected !!