India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ராணிப்பேட்டை மக்களே வீட்டு வரி, குடிநீர் வரி செலுத்த நீங்கள் இனி எங்கும் போக வேண்டாம்! ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் உள்ள சொத்து வரி, நிலுவைத் தொகை என அனைத்தையும் வீட்டிலிருந்தே ஆன்லைனில் செலுத்தவும், செலுத்திய விவரங்களை பார்க்கவும் முடியும். இங்கு <

தமிழக அரசின் TNRights திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் 1,096 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பணிக்கு 10, 12th , டிகிரி முடித்தவர்கள், உரிய பணி அனுபவம் உள்ளவர்கள் என பலரும் விண்ணப்பிக்கலாம். சம்பளம் – ரூ.12,000-ரூ.35,000 வரை. அக்.14க்குள் இங்கு <

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (செப் -30) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறுகின்றது. ஆற்காடு நகராட்சி நெல் மற்றும் அரிசி வியாபாரிகள் சங்க திருமண மண்டபம் ஆரணி ரோடு, வாலாஜா நகராட்சி இருபாலர் பள்ளி, அம்மூர் பேரூராட்சி ஹர்ஷா பேலஸ் அம்மூர் கூட்ரோடு, முக்கோணம் வட்டாரம் அரசு உயர்நிலைப்பள்ளி பெருங்களத்தூர், ஆற்காடு வட்டாரம் அரசு மேல்நிலைப்பள்ளி எசையனூர் ஆகிய பகுதிகளில் முகாம் நடைபெற உள்ளது.

காவேரிப்பாக்கத்தை சேர்ந்தவர் இம்ரான் (16) இவர் அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று செப் 29ம் தேதி பள்ளி காலாண்டு விடுமுறை என்பதால் அங்குள்ள கிணற்றில் நண்பர்களுடன் குளிக்க சென்றார். இதில் இம்ரான் கிணற்று நீரில் மூழ்கி இறந்தார் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்புத் துறையினர் இம்ரான் உடலை மீட்டனர். காவேரிப்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று (செப்.29) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை மக்களே கரண்ட் பில் அதிகமா வருதா? கவலையை விடுங்க இதுபோன்ற பிரச்னைகளுக்கு நீங்கள் EB அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்று அவசியல் இல்லை. உரிய ஆவணங்களுடன் தமிழ்நாடு அரசின் TANGEDCO என்ற செயலியில் புகார் அளிக்கலாம்.அல்லது 94987 94987 என்ற கட்டணமில்லா புகார் எண்ணை தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம். இதில் மின் கட்டணத்தையும் செலுத்தலாம். இந்தத் தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்ற திங்கள்கிழமை மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தனலிங்கம் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு குறைகளை கேட்டு அறிந்தார்.இதில் மாற்றுத்திறனாளி நல அலுவலர் வசந்த ராமகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கேஸ் சிலிண்டருக்கு மானியம் வருகிறதா? என்பதை SMS அனுப்பி தெரிந்து கொள்ளலாம். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கும் அனுப்பி தெரிந்து கொள்ளலாம். மேலும், UMANG என்ற App மூலமும் தெரிந்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு துறையில் 1 வருட தொழிற்பயிற்சிக்கு விண்ணபிக்கலாம். 2021 முதல் 2025 ஆண்டுகளில் மெக்கானிக்கல், ஆட்டோமொபைல் துறைகளில் டிப்ளமோ,டிகிரி முடித்தவர்கள் <

ராணிப்பேட்டை மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <
Sorry, no posts matched your criteria.